உள்ளடக்கத்துக்குச் செல்

யதாத்ரி புவனகிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்

யதாத்ரி புவனகிரி மாவட்டம் (Yadadri Bhuvanagiri district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பொங்கிர் நகரம் ஆகும்.[2] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் யதாத்ரி-புவனகிரி மாவட்டம் நிறுவப்பட்டது.[3]

மக்கள் தொகையியல்

[தொகு]

3091.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,26,465 ஆகும்.[4] இப்பகுதியில் நெய்யப்படும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் புகழ் பெற்றதாகும்.

புகழ் பெற்ற போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள்

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

யதாத்ரி-புவனகிரி மாவட்டம், பொங்கிர் மற்றும் சௌதுப்பல் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களில் 16 மண்டல்கள் உள்ளது.[3]

மண்டல்கள்

[தொகு]

யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின் 16 மண்டல்கள்:

வ. எண். பொங்கிரி வருவாய் கோட்டம் சௌதுப்பல் வருவாய் கோட்டம்
1 அட்டகுதுரு பி. பூதான் போச்சம்பள்ளி
2 அலேர் சௌதுப்பல்
3 அத்மாகுர் (எம்) நாராயண்பூர்
4 பீபீநகர் இராமன்னா பேட்டை
5 பொங்கிரி வலிகொண்டா
6 பொம்மலராமாபுரம்
7 மொடகொண்டூர்
8 மொத்கூர்
9 ராஜாப்பேட்டை
10 துர்காப்பள்ளி
11 யதாகிரிகுட்டா

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  2. "District Profile". Official website of Yadadri district. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
  3. 3.0 3.1 "Yadadri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  4. 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 

வெளி இணைப்புகள்

[தொகு]