பஞ்ச மகாயக்ஞம்
பஞ்ச மகாயக்ஞம் என்பது ஒரு இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்தி, செய்ய வேண்டிய காரியங்கள் எனப்படுகிறது. பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.[1] [2]
தேவ யக்ஞம்
[தொகு]வேத மந்திரங்கள் ஓதுவது, ஓதுவித்தல். வேதங்கள் ஓதி வேள்வி வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது.
பிரம்ம / ரிஷி யக்ஞம்
[தொகு]உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருமுறை, திருக்குறள் போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே பிரம்ம யக்ஞம் அல்லது ரிஷி யக்ஞம் ஆகும்.
பித்ரு யக்ஞம்
[தொகு]நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் மகிழ்விப்பது.
மனுஸ்ய யக்ஞம்
[தொகு]வீட்டிற்கு வரும் அதிதிகளுக்கு தங்க இடம் அளித்து, அமுது படைத்து விருந்தோம்புவது.
பூத யக்ஞம்
[தொகு]பசு, காகம் போன்ற விலங்குகளுக்கு உணவு வழங்குதல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.4remedy.com/spiritual_details.php?id=What does Panch Mahayagya mean
- ↑ http://www.speakingtree.in/spiritual-blogs/seekers/faith-and-rituals/the-pancha-mahayagyas
வெளி இணைப்புகள்
[தொகு]- Pancha Maha Yagna பரணிடப்பட்டது 2021-12-05 at the வந்தவழி இயந்திரம்
- இந்து மதத்தில் பஞ்ச மகாயக்ஞம்