மோரிகோன்
மோரிகோன் | |
---|---|
நகரம் | |
அசாம் மாநிலத்தில் மோரிகோன் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°15′12″N 92°20′33″E / 26.253317°N 92.342405°E | |
நாடு | India |
மாநிலம் | அசாம் |
கோட்டம் | நடு அசாம் கோட்டம் |
மாவட்டம் | மரிகாவன் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மோரிகோன் நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 29,164 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 782105 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS |
இணையதளம் | morigaon |
மோரிகோன் (Morigaon), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடு அசாம் கோட்டத்தில் அமைந்த மரிகாவன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மோரிகோன் நகரம் மாநிலத் தலைநகரான குவாகாத்திக்கு கிழக்கே 77 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 27 மோரிகானை குவாகாத்தி நகரத்தை இணைக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 6,627 வீடுகளும் கொண்ட மோரிகோன் நகரத்தின் மக்கள் தொகை 29,164 ஆகும். அதில் ஆண்கள் 14,793 மற்றும் பெண்கள் 14,371 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,414 மற்றும் 3,305 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.84%, இசுலாமியர் 21.77% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் இருப்புப் பாதைகள் குவாகாத்தி-லாம்டிங் நகரங்களை இணைக்கும் தொடருந்துகள், மோரிகோன் நகரத்திற்கு 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சபர்முக் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MORIGAON Pin Code, Search MORIGAON MARIGAON PinCode". Archived from the original on 7 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.
- ↑ Marigaon Population, Religion, Caste, Working Data Morigaon, Assam - Census 2011
- ↑ CHAPARMUKH JN CPK Railway Station Trains Schedule