உள்ளடக்கத்துக்குச் செல்

மைசம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசம்மா
மைசம்மா கோவில்
தேவநாகரிमेसाई
எழுத்து முறைమైసమ్మ

மைசம்மா ( தெலுங்கு : మైసమ్మ ), மைசை ( மராத்தி : मेसाई ) அல்லது மெஸ்கோ ( மராத்தி : मेस्को), தெலுங்கில் அம்மா அல்லது மராத்தியில் ஆய் ( தெலுங்கு : அம்மா மராத்தி : आई , "அம்மா") என்றும் அழைக்கப்படும் இந்த தேவதை ஒரு இந்து நாட்டுப்புற தெய்வமாகும். பெண் தெய்வமான இவர் முக்கியமாக தென்னிந்திய மாநிலங்களான தெலுங்கானா , கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் இந்த தாயுருவம் தெய்வமாக வழிபடப்படுகிறார். இந்த தெய்வமானது அவரை வணங்கும் மக்களின் கால்நடைகளைப் பாதுகாப்பாள் என்று நம்பப்படுகிறது. கால்நடைகளை வளர்க்கும் மாட்டுத் தொழுவங்களில், ஒரு குறிப்பிட்ட இடம் வெள்ளையடிக்கப்பட்டு, "குக்குமா" மற்றும் "மைசம்மா கூடு" என்று அழைக்கப்படும். அந்த இடங்களிலே தான் மக்கள் தங்கள் சடங்குகளை செய்வார்கள். வேறு பல இடங்களில் கட்டா-மைசம்மா நீர் தெய்வமாக வணங்கபடுகிறாள். ஒரு சிறிய கல் வடிவில் வடிவமைக்கப்பட்டு நீர் நிலைகளின் அருகில் நிர்மாணித்து வணங்குவார்கள். அதன்படி அந்த நீர்நிலை வற்றாமல் இருக்க இந்த பெண் தெய்வம் ஆசிர்வதிக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.

மேலும் அவளது அருளாசியால் நெற்கதிர்கள் தழைத்தோங்கும். பெரியம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் இந்த அம்மா தெய்வங்களின் வழிபாடு முக்கியமாக தொடர்புடையது . [1]

மைசம்மா தெய்வமானது எல்லம்மா, கட்டம்மா, போச்சம்மா ,கங்கம்மா, மெடலம்மா போன்ற பிற கிராம பெண் தெய்வங்களின் சகோதரியாகக் கருதப்படுகிறார். மேலும் பக்தர்களின் நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உள்ளவராகவும் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dube, S. C. (2012-11-12). Indian Village. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135638870.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசம்மா&oldid=3656749" இலிருந்து மீள்விக்கப்பட்டது