மைக்கேல் ஹாக்
மைக்கேல் ஹாக் | |
---|---|
மைக்கேல் ஹாக் | |
பிறப்பு | மைக்கேல் ஏ.ஜி. "ஹாக்" பியர்ஸ் ((Mykel A.G. "Hawke" Pierce)) நவம்பர் 29, 1965 போர்ட் ஃநாக்ஸ், கென்டக்கி, ஐக்கிய அமெரிக்க |
பணி | நடிகர், நூலாசிரியர், சர்வதேச செயல்பாடுகளுக்கான இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | ரூத் இங்கிலாந்து (2005–தற்சமயம்) |
"மைக்கேல் ஹாக்" அல்லது "மைக்" (ஆங்கிலம்:Mykel A.G. "Hawke" Pierce) ( பிறப்பு : நவம்பர் 29, 1965) இவர் ஒரு ஓய்வு பெற்ற ஐக்கிய அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரியாவார். இவருடைய மனைவி ரூத் இங்கிலாந்து, இவர் ஒரு பிரித்தானிய தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார்.
விளக்கம்
[தொகு]மைக்கேல் ஹாக் மற்றும் இவரது மனைவி ரூத் இங்கிலாந்து இவர்கள் இருவரும் இணைந்து "டிஸ்கவ்ரி தொலைக்காட்சியில்" ஆண், பெண், காடு (Man, Woman, Wild) என்ற தொடர் நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். இவர் அறிவியல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் , சாண்டா பார்பராவில் உளவியல் , அறிவியல் முதுகலைப்பட்டம் ஒரு இளநிலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் 25 ஆண்டு காலம் போரிட்டில் மிக்கத் தேர்ந்தவர் எனவே மைக்கேல் ஹாக்குக்கு பச்சைத் தொப்பி (Green Beret) மற்றும் பின்னர் ஒரு குறிப்பிட்ட பட்டியலிடப்பட்டு இருந்த சிறப்புப் படைகளின் ஒரு தலைவராக செயல்ப்பட்டார். மேலும் இவர் ஜப்பானில் புகழ் பெற்ற கலைகளான அய்கிடோ மற்றும் யுடோ விர்க்கான கறுப்பு இடைவார் (Black Belts) ஈட்டியிருக்கிறார். மைக்கேல் ஹாக் மேலும் இவர் டிஸ்கவரி அலைவரிசையில் (Discovery Channel) ஒன் மேன் ஆர்மி (ஒரு ஆள் இராணுவம்), என்கின்ற தொடர் நிகழ்ச்சியை நடத்துகின்றார். சிறப்பு நடவடிக்கைகள், இராணுவ, சட்ட அமலாக்கம், மற்றும் தீவிர விளையாட்டு என பின்னணியிலிருந்து வீரர்களின், வேகம், வலிமை, மற்றும் உளவுத்துறை ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியிடப்படும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசாக பணம் மற்றும் ஒன் மேன் ஆர்மி என்ற பட்டமும் வழங்கப்படும். மேலும் ஹாக் விநோத வகை உணவுகளை பட்டியலிடுவதில் மிக சிறந்தவர். மற்றும் ஹாக் முதல் முறையாக நகைச்சுவை திரைப்படமான " டர்ட்டி சான்செஸ்: தி மூவி" (Dirty Sanchez: The Movie) என்கின்ற திரைப்படத்தை சொந்தமாக இயக்கியுள்ளார்.
புத்தகங்கள்
[தொகு]1) Hawke's Special Forces Survival Handbook: The Portable Guide to Getting Out Alive Running Press ( ஏப்ரல் 26 , 2011 ). ஐஎஸ்பிஎன் 978-0762440641.
2) Hawke's Green Beret Survival Manual Running Press ( சூன் 9, 2009 ). ஐஎஸ்பிஎன் 9780762433582
3) The Quick and Dirty Guide to Learning Languages Fast Paladin Press ( செப்டம்பர் 1 , 2000 ) ஐஎஸ்பிஎன் 978-1-58160-096-4 (புணைப் பெயர் ஏ.ஜி ஹாக்).
4) In the Dark of the Sun Pixel Dragon Designs ( ஆகஸ்ட் 24, 2010 ) ஐஎஸ்பிஎன் 978-0982931608 (திகில் கிம் மார்டின் இணை ஆசிரியராக).