உள்ளடக்கத்துக்குச் செல்

மேலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலவை (Upper house) ஈரவை அல்லது இரு மன்றங்கள் கொண்ட நாட்டின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களில் இரண்டாவது அவையாகும்.[1] சட்டங்கள் அல்லது நிறைவேற்றல்கள் இரு அவைகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறப்பியல்புகள்

[தொகு]

ஈரவைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று கீழவை மற்றது மேலவை. மேலவை, கீழவையிலும் வேறுபட்டது. இவ்வேறுபாடுகள் பின்வரும் வகைகளில் அமையக்கூடும்:

அதிகாரம்:

  • நாடாளுமன்ற முறையில், மேலவை, கீழவையிலும் அதிகாரம் குறைந்ததாகக் காணப்படுகின்றது.
    • அரசியல் சட்டத் திருத்தங்கள் போன்ற குறைந்த அளவு சட்டவாக்க விடயங்களிலேயே மேலவையின் அங்கீகாரம் பெறவேண்டிய தேவை உண்டு.
    • மேலவை சட்டங்களை மீளாய்வு செய்யலாமேயொழிய அவற்றைத் தடுக்க முடியாது. அத்துடன், நிதி தொடர்பான சட்டங்களை தொடக்கிவைக்கவும் முடியாது.
    • நாடாளுமன்ற முறையில், மேலவை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடியாது. ஆனால் கீழவைக்கு இந்த அதிகாரம் உண்டு.
  • ஒரு சனாதிபதி முறையில்
    • கீழவையின் அளவுக்கு அல்லது ஏறத்தாழ அந்த அளவுக்கு மேலவைக்கு அதிகாரம் இருக்கக் கூடும்.
    • கீழவைக்கு வழங்கப்படாத சிறப்பு அதிகாரங்கள் மேலவைக்கு இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக:
      • சில நிறைவேற்று முடிவுகளில் ஆலோசனை கூறவோ அல்லது சம்மதம் தெரிவிக்கவோ முடியும்.
      • அலுவலர்களுக்கும், நிறைவேற்று அதிகாரிகளுக்கும் எதிரான பதவி நீக்கக் குற்ற விசாரணைக்கு கீழவை அனுமதி கொடுத்தபின் அதனை விசாரிக்கும் அதிகாரம் மேலவைக்கு மட்டுமே இருக்கலாம்.

ஈரவைகள் கொண்ட நாடுகள்

[தொகு]

குறிப்புக்கள்

[தொகு]
  1. Bicameralism (1997) by George Tsebelis

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலவை&oldid=2718590" இலிருந்து மீள்விக்கப்பட்டது