உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்கொங் மாகெளிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீகொங் கற்பிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Actinopterygii
வரிசை:
குடும்பம்:
Pangasiidae
பேரினம்:
Pangasianodon

Chevey, 1931
இனம்:
P. gigas
இருசொற் பெயரீடு
Pangasianodon gigas
Chevey, 1931
வேறு பெயர்கள்

Pangasius paucidens
Fang & Chaux, 1949

மேக்கொங் மாகெளிறு அல்லது மீகொங் கற்பிசு (Mekong giant catfish, உயிரியல் பெயர்: Pangasianodon gigas) என்பது கெளிறு வரிசையைச் சேர்ந்த பங்கசிற்றே குடும்ப மீன் வகையாகும். இது தெற்காசிய மீகொங் மேட்டுநிலத்தை அண்டிய நன்னீர் ஏரியைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

இயல்புகள்

[தொகு]

இது மிக வேகமாக அழிவுக்குள்ளாகும் ஒரு இனமாகும். இதனால் இது மீகொங் ஆற்றில் பாதுகாக்கப்படும் இனமாகக் கண்கணிக்கப்படுகிறது.[1] மிக வேகமாகப் பாய்ந்தோடக் கூடிய மிகப்பெரிய உடலமைப்பைக் கொண்ட நன்னீர் மீன்வகை இதுவாகும். சராசரியாக 3 மீட்டர் நீளமானது. உடல்நிறை 150-250 கிலோக்கிறாம் கொண்டது. கின்னசு உலக சாதனைப் புத்தகப் பதிவுகளின்படி 10.5அடி (3.2மீட்டர்) மற்றும் 660இறாத்தல் (300kg), கொண்ட மீகொங் கற்பிசு மீன் மிகப்பெரிய நன்னீர் மீனாகப் பதிவாகியுள்ளது.[2] அருகிவரும் இவ்வினம் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் தெரியவில்லை. ஆயினும் மத்திய மீகொங் பகுதியில் சிறிய அளவில் பரவலாகக் காணப்படுகிறது.[3] அதிகளவில் வேட்டையாடப்படுதல் மற்றும் நீர் மாசடைதல் என்பன இவ்வினம் அருகிப்போகக் காரணமாகும்.

தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இவற்றைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. (Hogan et al. 2004, MGCCG, 2005)
  2. (Mydans et al. 2005, Hogan et al. 2004, Hogan et al. 2007)
  3. (Hogan et al. 2004)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்கொங்_மாகெளிறு&oldid=3528829" இலிருந்து மீள்விக்கப்பட்டது