மெஃபெனமிக் காடி
மெஃபெனமிக் காடி (Mefenamic acid) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக வலி , மாதவிடாய் வலி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து ஃபெனமிக் அமிலக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Mefalth, Mefalth T, Ponstel, Ponstan, Ponstal போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]
வேறு வணிகப் பெயர்கள் |
---|
Parkemed, Mafepain, Mefamed, Mephadolor, Meftal, Dyfenamic, Potarlon, Dolfenal, Meyerdonal, Alfoxan, Fenagesic, Spiralgin. |
மருத்துவப் பயன்பாடு
[தொகு]பொதுவாக வலி , மாதவிடாய் வலி (வலிமிக்க மாதப்போக்கு) போன்ற நோய்களுக்கு மெஃபெனமிக் காடி பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்
[தொகு]இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் வாந்தி, தலைவலி, பதட்டம் ஆகும். இவற்றைத்தவிர காதில் ரீங்காரம், வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, பார்வை மங்கல், வயிற்றுப் பொருமல், தூக்கமின்மை பக்க விளைவுகளும் மெஃபெனமிக் காடி பயன்பட்டால் ஏற்படும்.
பயன்பாட்டெதிர் நிலைகள்
[தொகு]இம்மருந்து குடற்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]