முயன்று தெரிதல்
Appearance
முயன்று தெரிதல் (trial and error) அறிவைக் கற்க, சிக்கல் தீர்க்க ஒரு அடிப்படை வழி. அன்றாட வாழ்வியலில் இருந்து உயர் தொழில்நுட்பம் வரை முயன்று தெரிதல் பய்ன்படுகின்றது.
கணித எடுத்துக்காட்டு
[தொகு]எடுத்துக்காட்டாக மூன்று தனி பொருட்களை (அ, ஆ, இ) எத்தனை வழிகளில் வரிசைமாற்றம் செய்யலாம் என்பதை முயன்று தெரிதல் வழியாக செய்ய எல்லா வரிசைகளையும் எழுதிப் பாக்கலாம். அவை பின்வருமாறு அமைகின்றன:
- அ, ஆ, இ
- அ, இ, ஆ
- ஆ, அ, இ
- ஆ, இ, அ
- இ, அ, ஆ
- இ, ஆ, அ
மொத்தம் 6 என எண்ணி சொல்ல முடியும்.
ஒரு சுருக்க வழி மூன்று தனி பொருட்களை எத்தனை வரிசைமாற்றம் செய்யும் என்பதைக் கணிக்கும் சூத்திரத்தை அறிந்திர்ப்பதாகும். அதாவது n பொருட்கள் n! வழிகளில் வரிசைப்படுத்த முடியும். எனவே 3 பொருட்களை 3! = 6 வழிகள் என்பதாகும்.