முட்டாபுறாசர்
Appearance
முட்டாபுறாசர் (Muttaburrasaurus) என்பவை புள்ளடியின தாவரவுண்ணி இடைனோசர் விலங்கினம் ஆகும். இவ் விலங்கினம் 99.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றைய வடகிழக்கு ஆஸ்திரேலியாவில்[1] சீமைச்சுண்ண பெருங்காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்தவை.இவ் விலங்கினம் இராப்தோதோன்றிதை (Rhabdodontidae) குடும்பத்தைச் சேர்ந்த இகுவானோதோன்றியன் (iguanodontian) மரபைச் சேர்ந்தவை ஆகும். [2] மின்மி என்ற இடைனோசர் வகையைப் போலவே இவ் விலங்கினங்களின் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின்றது.
பெயர்க் காரண்ம்
[தொகு]ஆஸ்திரேலியாவின் குவின்லாந்து மாகாணத்தில் முட்டாபுறா என்ற இடத்திலேயே முதன்முறையாக இவ் விலங்கினத்தின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டது. அதனாலேயே இவற்றுக்கும் முட்டாபுறாசர் என பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Holtz, Thomas R. Jr. (2012) Dinosaurs: The Most Complete, Up-to-Date Encyclopedia for Dinosaur Lovers of All Ages, Winter 2011 Appendix.
- ↑ McDonald, A.T.; Kirkland, J.I.; DeBlieux, D.D.; Madsen, S.K.; Cavin, J.; Milner, A.R.C.; Panzarin, L. (2010). "New Basal Iguanodonts from the Cedar Mountain Formation of Utah and the Evolution of Thumb-Spiked Dinosaurs". PLoS ONE 5 (11): e14075. doi:10.1371/journal.pone.0014075. பப்மெட்:21124919.