முகமது அசுனைன்
முகமது அசுனைன் ( Mohammad Hasnain பிறப்பு: ஏப்ரல் 5, 2000) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2018 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 140 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 442 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி , பாக்கித்தான் அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார்.[1][2]
உள்ளூர் போட்டிகள்
[தொகு]பட்டியல் அ
[தொகு]2019 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2019 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 24, சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 9 ஓவர்கள் வீசி 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி எட்டு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[3] இவர் தற்போதுவரை (2019) 442 ஓட்டங்களை மொத்தமாக எடுத்துள்ளார்.
முதல் தரத் துடுப்பாட்டம்
[தொகு]2018 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2018 இல் நடைபெற்ற குவைத் -இ- அசாம் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார்.செப்டமபர் 1 , முல்தான் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முல்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 13 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி இரு இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 3 பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காமல் முகமது இர்பான் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்இரண்டாவது ஆட்டப் பகுதியில் 18 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஆறு ஓவர்களை மெய்டனாக வீசி 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[4]
சர்வதேசப் போட்டிகள்
[தொகு]2019 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2019 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 24, சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 9 ஓவர்கள் வீசி 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி எட்டு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Mohammad Hasnain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
- ↑ "Who is Mohammad Hasnain?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019.
- ↑ 3.0 3.1 "Full Scorecard of Australia vs Pakistan 2nd ODI 2019 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
- ↑ "Full Scorecard of Multan vs Pakistan Television, Quaid-e-Azam Trophy, Pool B - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.