உள்ளடக்கத்துக்குச் செல்

முகந்த் லால் அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகந்த் லால் அகர்வால்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினா்
பின்னவர்மோகன் ஸ்வரூப்
தொகுதிபிலிபிட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-01-16)16 சனவரி 1902
பிலிபிட், உத்திர பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ராம் ராக்கி தேவி
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்பிலிபிட்

முகந்த் லால் அகர்வால்(பிறப்பு 16 ஜனவாி 1902 - இறப்பு தொியவில்லை) என்பவர் 1952இல் நடந்த முதலாவது மக்களவை தோ்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் பிாிபிட் தாெகுதி]]யிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக]] தாெ்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவருைடைய தந்தை கன்னாய் லால் பிலிபிட் அந்த நகரில் சமூக செயற்பாட்டாளாராக செயல்பட்டவர் ஆவார்.[1]

முகந்த் லால் அகா்வால் பள்ளி படிப்பையும், இடைநிலை கல்வியையும் பிாிபிட் நகாிலுள்ள அரசு பள்ளியில் பயின்றாா். தற்போது இந்த பள்ளி டிரம்பன்ட் ஆண்கள் இடைநிலை பள்ளியாய் அறியப்படுகிறது. இவா் பி.எஸ்.சி பரேலி கல்லூரிலும், எல்.எல் பி படிப்பை ஆக்ரா கல்லூரிலும் பயின்றாா். இவர் ராம் ராக்கி தேவி என்ற பெண்ணை 1917 இல் மணந்தாா். இவர்களுக்கு இரு மகன்கள் உண்டு.[1]

அகர்வால் பிலிபிட் வழக்கறிஞராகவும், மாவட்ட ஊரக வளா்ச்சி கூட்டைமப்பின் தலைவராகவும் இரிந்தார். மேலும் ராமா இடைநிலை கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகவும் 1938-40 களில் இருந்தாா்.[1]

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) இயக்கத்தில் இருந்தார். அதன் போராட்டங்களில் கலந்து காெண்டு 1941 மற்றும் 1942-43 களில் பல முறை சிறை சென்றார். மேலும் இவா் இந்தியாவின் பிரித்தானிய ஆட்சி காலகட்டத்தில் .உத்தரப் பிரதேச சட்டசபைக்கு 1941-46 தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

இவா் 1952 இல் நடந்த முதல் பொது தேர்தலில், அகர்வால் பிலிபிட் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தொ்ந்தெடுக்கப்பட்டாா். காங்கிரஸ் கட்சி வேட்பாளரான இவர் 43.11% வாக்குகளும் அவரை எதிா்த்து போட்டியிட்ட சோசலிச கட்சி வேட்பாளா் 22.58% வாக்குகளும் பெற்றனர். [சான்று தேவை]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகந்த்_லால்_அகர்வால்&oldid=3925571" இலிருந்து மீள்விக்கப்பட்டது