உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்லெட் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்லெட் நடவடிக்கை
கான் சண்டை பகுதி

மார்ட்லெட் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஒரு 75 மிமீ ஜெர்மானிய பீரங்கி
நாள் ஜூன் 25 - ஜூலை 1, 1944
இடம் ஒடோன் பள்ளத்தாக்கு, பிரான்சு
கீழ்நிலை உத்தியளவில் நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஜெரார்ட் பக்னால்
ஈவிலின் பேக்கர்
கர்ட் மேயெர்
ஓட்டோ வெய்டிங்கர்
பலம்
49வது காலாட்படை டிவிசன்:
~18,000 வீரர்கள்
12வது எஸ். எஸ் கவச டிவிசன்
~18-20,000 வீரர்கள்
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

மார்ட்லெட் நடவடிக்கை (Operation Martlet) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நடந்த முயற்சிகளில் ஒன்றான எப்சம் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது டாண்ட்லெஸ் நடவடிக்கை (Operation Dauntless) என்றும் அழைக்கப்படுகிறது.

பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டியில் ஜூன் 6, 1944ல் தொடங்கியது. அதன் இலக்குகளில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுவதாகும். பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற கான் நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதனைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் தொடர் கான் சண்டை முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றுள் ஒன்று எப்சம் நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் கான் நகரின் அருகிலுள்ள ஓடோன் பள்ளத்தாக்கைக் கைப்பற்ற பிரிட்டானிய 8வது கோர் முயற்சி செய்தது. 30வது கோரின் தாக்குதலை மறைத்து ஜெர்மானியர்களின் கவனத்தைத் திசைதிருப்ப மார்ட்லெட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 8வது கோரின் தாக்கச்சு (attack axis)க்கு பக்கவாட்டு பாதுகாப்பு (flank security) அளிக்கும் பொறுப்பு பிரிட்டானிய 49வது காலாட்படை டிவிசனுக்கு வழங்கப்பட்டது. இதற்காக ராரே முகட்டினையும் அதை சுற்றியிருந்த கிராமங்களையும் கைப்பற்ற ஜூன் 26ம் தேதி 49வது டிவிசன் முன்னேறத் தொடங்கியது. 8வது கோரின் பக்கவாட்டினைப் பாதுகாக்கத் தவறி விட்டாலும் ஒரு வாரகால சண்டைக்குப் பின்னர் ராரே முகட்டுப் பகுதியைக் கைப்பற்றி நேசநாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்லெட்_நடவடிக்கை&oldid=1358349" இலிருந்து மீள்விக்கப்பட்டது