உள்ளடக்கத்துக்குச் செல்

மாண்டோ சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்டோ சோதனையானது சுத்தமாக்கிய புரத வழிப்பொருள் காசநோய் நுண்ணுயிர் ஊனீரின் ஒரு மில்லிலீட்டரின் சரியாக பத்தில் ஒரு மடங்கான தோலுக்குக் கீழான ஊசிமருந்தைக் கொண்டுள்ளது.
கடினமான பகுதியின் அளவானது 48–72 மணிநேரத்துக்குப் பின்னர் அளக்கப்படுகிறது.தோல் தடிப்பு நோயை (தோல் சிவந்த நிலை) அளக்கக்கூடாது.
நாட்பட்ட நிலைமைகள் இல்லாமல் ஒரு பொருளில் அல்லது 50 மணிநேரத்தில் எதிரான நோய்க்குரிய அடையாளம் அறியப்பட்ட அதிக ஆபத்துள்ள குழுவில் மாண்டோ சோதனை ஊசிமருந்து இடம்.

மாண்டோ சோதனை (Mantoux test, இது மாண்டோ திரையிடல் சோதனை , காசநோய் நுண்ணுயிர் ஊநீர் உணர்திறன் சோதனை , பிர்குவட் சோதனை அல்லது சுத்தமாக்கிய புரத வழிப்பொருளுக்கான பி.பி.டி சோதனை என்றும் அழைக்கப்படும்) என்பது காச நோய்க் குணவியல்புகளைக் கண்டறியும் கருவி ஆகும். இது பல நாடுகளில் பயன்படுத்தப்படும் இரு முக்கிய காசநோய் நுண்ணுயிர் ஊநீர் தோல் சோதனைகளில் ஒன்றாகும். இது டைன் சோதனை போன்ற பல துளைச் சோதனைகளுக்குப் பதிலாக பெருமளவில் பயன்படுகிறது. 2005 ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய இராச்சியத்தில் ஹீஃப் சோதனை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது மாண்டோ சோதனை பயன்படுத்தப்படுகிறது. மாண்டோ சோதனையானது ஆஸ்திரேலியா, கனடா, ஹங்கேரி, போலந்து, ரஷ்யா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஒன்றியம் ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கன் தொராசிக் சொசைட்டி மற்றும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் (சி.டி.சி) ஆதரிக்கின்றன. இது ஐக்கிய ரஷ்ய பொதுவுடமைக் குடியரசு (யூ.எஸ்.எஸ்.ஆர்) நாட்டிலும் பயன்படுத்தப்பட்டது. இப்போது பெரும்பாலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் வழக்கத்திலுள்ளது.

வரலாறு

[தொகு]

காசநோய் நுண்ணுயிர் ஊநீர் என்பது டியூபர்க்கிள் பசிலஸ் (tubercle bacillus) பாக்டீரியாவின் கிளிசரோல் பிரித்தெடுப்பு ஆகும். சுத்தமாக்கிய புரத வழிப்பொருள் (பி.பி.டி) காசநோய் நுண்ணுயிர் ஊநீர் என்பது, கிருமிநீக்கிய, செறிவாக்கப்பட்ட வளர்ப்புகளின் வடிந்த திரவங்களிலிருந்து பெறப்பட்ட இனங்களுக்கு தனித்துவமற்ற மூலக்கூறுகளின் ஒரு படுவாகும். இதை 1890 ஆம் ஆண்டில் ராபர்ட் கொச் விவரித்தார். பிரெஞ்சு மருத்துவரான சார்ள்ஸ் மாண்டோவின் பெயர் இந்தச் சோதனைக்கு இடப்பட்டது. இவர் தனது சோதனையை உருவாக்குவதற்காக 1907 ஆம் ஆண்டில் கொச் மற்றும் கிளெமென்ஸ் வான் பிர்குவட் ஆகியோரின் பணிகளைச் சார்ந்து விவரித்தார்.

1939 ஆம் ஆண்டில் ஐக்கிய ரஷ்ய பொதுவுடமைக் குடியரசில் இருந்த எம். ஏ. லின்னிகோவா சுத்தமாக்கிய புரத வழிப்பொருளின் மாறுபட்ட பதிப்பை உருவாக்கினார். 1954 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியமானது சுத்தமாக்கிய புரத வழிப்பொருளை (PPD-L) பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதற்கு லின்னிகோவா என பின்னர் பெயரிடப்பட்டது.

செயல்முறை

[தொகு]

5 டியூபர்குலின் பிரிவுகள் (0.1 மி.லீ)[1] தரமான அளவானது (ஐக்கிய இராச்சியத்தில் தரமான மாண்டோ சோதனையானது ஊசிமூலம் ஏற்றுவதற்கான 0.1 மி.லீ கரைசலில் ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட் (எஸ்.எஸ்.ஐ) டியூபர்குலின் RT23 இன் 2TU தோலுக்குள் செலுத்தும் ஊசிமருந்தைக் கொண்டிருக்கிறது.)[2] தோலினுள் (உட்தோலின் படைகளுக்கு இடையில்) செலுத்தப்பட்டு 48 முதல் 72 மணிநேரத்துக்குப் பின்னர் சோதிக்கப்படும். பாக்டீரியாவால் தாக்கப்பட்டுள்ள ஒரு நபர் பாக்டீரிய புரதங்களைக் கொண்டிருக்கின்ற தோலில் நோயெதிர்ப்புத் தாக்கத்தை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார்.

முன்னங்காலுக்குக் குறுக்கேயுள்ள கடினப்பகுதியின் (தொட்டு உணரக்கூடிய உயர்ந்த கடினமான பகுதி) விட்டத்தை மில்லிமீட்டர்களில் அளவிடுவதன் மூல எதிர்விளைவு வாசிக்கப்படும். அங்கு கடினப்பகுதி எதுவும் இல்லை என்றால் எதிர்விளைவு "0 மி.மீ" எனப் பதியப்பட வேண்டும். தோல் தடிப்பு நோயை (தோல் சிவந்த நிலை) அளக்க வேண்டியதில்லை.

காசநோய் நுண்ணுயிர் ஊனீர் தோல் சோதனைக்கு ஒருவர் நேரான வரலாற்றைக் கொண்டிருந்தார் என்றால் வேறொரு தோல் சோதனை தேவையில்லை. எதிராக இருந்தது எனில் வேறொரு சோதனை தேவைப்படக்கூடும்.

காசநோய் நுண்ணுயிர் ஊனீர் எதிர்விளைவின் வகையீடு

[தொகு]

இந்த சோதனையில் வரும் முடிவுகளை மிகக் கவனமாக விளக்க வேண்டும். நபரின் மருத்துவத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் எந்த கடினப்பகுதி அதிகாரிப்பில் (5 மி.மீ), 10 (மி.மீ) அல்லது 15 மி.மீ) முடிவுகளை நேராகக் கருதவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.[3] நேரான முடிவானது காசநோய் வெளிப்படுத்தலைக் குறிக்கிறது.

  • பின்வரும் சந்தர்ப்பங்களில் 5 மி.மீ அல்லது கூடுதலானது நேராக இருக்கும்:
    • ஹெச்.ஐ.வி-நேர் நபர்
    • காசநோய்ச் சந்தர்ப்பத்தில் அண்மைக்கால தொடர்புகள்
    • மார்பு எக்ஸ்-கதிரிலுள்ள முடிச்சுரு அல்லது நாரிழைய மாற்றங்கள் குணமாக்கப்பட்ட பழைய காசநோயுடன் ஒத்திருக்கின்ற நபர்கள்
    • உறுப்பு மாற்றச் சிகிச்சைகள் அல்லது நோயெதிர்ப்புக் கட்டுப்படுத்தப்பட்ட நோயாளிகளில்
  • பின்வரும் சந்தர்ப்பங்களில் 10 மி.மீ அல்லது அதிலும் கூடியது நேராக இருக்கும்
    • அதிக நோய்த்தாக்கமுள்ள நாடுகளில் இருந்து அண்மையில் (5 ஆண்டுகளிலும் குறைந்த) வந்துள்ளவர்கள்
    • ஊசிமருந்துமூலம் ஏற்றும் மருந்து பயன்படுத்துபவர்கள்
    • அதிக அபாயமுள்ள கூட்ட அமைப்புகளின் (எ.கா சிறைச்சாலைகள், பராமரிப்பு இல்லங்கள், மருத்துவமனைகள், வீடில்லாத குடியிருப்புகள் போன்றன) வசிப்பிடதாரிகள் மற்றும் பணியாளர்கள்.
    • மைக்கோபாக்டீரியாலஜி ஆய்வுகூட பணியாளர்
    • உயர் அபாயத்தை உருவாக்கும் நோய்சார்ந்த நிலமைகளைக் கொண்ட நபர்கள் (எ.கா. நீரிழிவு, நீண்டகால மேற்பட்டை ஸ்டீராய்ட் சிகிச்சை, இரத்தப் புற்றுநோய், முடிவுக் கட்ட சிறுநீரக நோய், நாட்பட்ட அகத்துறிஞ்சாமை அறிகுறிகள், குறைந்த உடல் எடை, இன்னும் பல)
    • நான்கு வயதிலும் குறைந்த சிறுவர்கள் அல்லது உயர் அபாய வகைகளிலுள்ள வயது வந்தவர்களுடன் பழகிய சிறுவர்கள் அல்லது வயது வந்தவர்கள்
  • பின்வரும் சந்தர்ப்பங்களில் 15 மி.மீ அல்லது அதிலும் கூடியது நேராக இருக்கும்
    • காச நோய்க்கான தெரிந்த ஆபத்துக் காரணிகள் எதுவும் இல்லாத நபர்கள்
    • (குறிப்பு: உயர் அபாயம் உள்ள குழுக்களுக்கு இலக்கிடப்பட்ட தோல் சோதனைத் திட்டங்களை மட்டுமே செய்ய வேண்டும்)

வயது வேறுபாடின்றி இரு ஆண்டுகாலத்தினுள் 10 மி.மீ அல்லது அதிகமாக ஏற்படும் அதிகரிப்பே காசநோய் நுண்ணுயிர் ஊனீர் சோதனை மாற்றம் என வரையறுக்கப்படுகிறது.

பொய்யான நேர் முடிவு

[தொகு]

சோதனையின் குறைந்த தனிக்குறிப்புத் தன்மை காரணமாக குறைந்த ஆபத்தான நபர்களிலுள்ள பெரும்பாலான நேர் எதிர்விளைவுகள் பொய்யான நேர்களாகவே உள்ளன.[4] பொய்யான நேர் முடிவானது காசநோய் விளைவிக்காத மைக்கோபாக்டீரியா அல்லது முன்னர் பி.சி.ஜி தடுப்பு மருந்து கொடுத்தமை ஆகியவற்றால் ஏற்படக்கூடும். பி.சி.ஜி உடன் முன்னர் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தானது பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பொய்யான நேர் முடிவை விளைவிக்கக்கூடும்.[5]

பொய்யான எதிர் முடிவு

[தொகு]

நோய் எதிர்ப்பு சக்தி ரீதியாக நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களில் குறிப்பாக ஹெச்.ஐ.வி மற்றும் குறைந்த CD4 T கல எண்ணிக்கைகள் உள்ளவர்களில் அடிக்கடி எதிரான முடிவு காண்பிக்கப்படும்.[சான்று தேவை] தோலுக்குக் கீழாக ஏற்றப்பட்ட புரத வழிப்பொருளுக்கு ஒரு பதிலை ஏற்படுத்த, நோய்த்தடுப்பு முறையானது செயற்பாட்டில் இருப்பது அவசியம் என்பதால் இது ஏற்படுகிறது.

பி.டி.ஜி தடுப்பு மருந்தும் மாண்டோ சோதனையும்

[தொகு]

தடுப்பு மருந்து ஏற்றப்பட்டவர்களின் மாண்டோ சோதனையின் பங்கு பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. காசநோய் நுண்ணுயிர் ஊனீர் தோல் சிகிச்சையானது பி.சி.ஜி-தடுப்பு மருந்து ஏற்றப்பட்டவர்களில் முரணாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் முன்னர் கொடுக்கப்பட்ட பி.சி.ஜி தடுப்பு மருந்தானது சோதனையின் விளக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் அமெரிக்க ஒன்றிய பரிந்துரை ஆகும். நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருள்-γ சோதனையானது நேரான மாண்டோ சோதனைகளை விளக்கப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதும் தொடர் காசநோய் நுண்ணுயிர் ஊனீர் தோல் சிகிச்சையை முன்னர் பி.சி.ஜி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களில் செய்யக்கூடாது என்பதும் ஐக்கிய இராச்சியத்தின் பரிந்துரையாகும். பொதுவாக அமெரிக்க ஒன்றியத்தின் பரிந்துரையால் மறைவான காசநோயுடன் பெருமெண்ணிக்கையான நபர்கள் பொய்யாக அடையாளம் காணப்படுகின்றனர். இதேவேளை ஐக்கிய இராச்சியத்தின் அணுகுமுறையானது சிகிச்சையளிக்க வேண்டிய மறைவான காசநோய் உடையவர்களை பெரும்பாலும் தவறவிடுகிறது.

பின்வரும் சூழ்நிலைகளில் ஏதாவது இருந்தால் அமெரிக்க ஒன்றியத்தின் வழிகாட்டல்களின் படி மறைவான காசநோய்த் தாக்கம் கண்டறியப்படலும், அதற்கான சிகிச்சையும் தோல் சோதனையானது 10 மி.மீ அல்லது அதிகமாக இருக்கின்ற எந்தவொரு பி.சி.ஜி தடுப்பு மருந்தெடுத்த நபருக்கும் கருத்திலெடுக்கப்படுகிறது:

  • தொற்றக்கூடிய காசநோயுள்ள இன்னொரு நபருடன் தொடர்பில் இருந்தாரா
  • காசநோய்த் தாக்கம் அதிகமாக உள்ள நாட்டில் பிறந்தாரா அல்லது வாந்திருந்தாரா
  • காசநோய்த் தாக்கம் அதிகமாகவுள்ள மக்களிடையே தொடர்ச்சியாக இருக்கிறாரா.

வலுவிழப்புச் சோதனை

[தொகு]

வலுவிழப்பு சந்தர்ப்பங்களில் அதாவது உடலின் பாதுகாப்புப் பொறிமுறைகளால் எதிர்விளைவு இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் இது வெளி பொருள்களுடன் தொடர்பில் வரும்போது காசநோய் நுண்ணுயிர் ஊனீர் எதிர்விளைவானது மிகவும் பலவீனமாக நிகழும். ஆகவே மாண்டோ சோதனையின் மதிப்பை உடன்பாடு செய்கிறது. எடுத்துக்காட்டாக வலுவிழப்பானது எயிட்ஸில் இருக்கிறது. இது நோயெதிர்ப்புத் தொகுதியை வலிமையாகக் குறைக்கின்ற ஒரு நோயாகும். ஆகவே வலுவிழப்பு உள்ளது என்ற சந்தேகத்துக்கு உத்தரவாதம் இருக்கும் சூழ்நிலைகளில் வலிவிழப்புச் சோதனையைச் செய்வது சிறந்தது. இருந்தபோதிலும் வழக்கமான வலுவிழப்பு தோல் சோதனை பரிந்துரைக்கப்படவில்லை.[6]

இரண்டு-படிச் சோதனை

[தொகு]

காசநோயால் முன்னர் தாக்கப்பட்ட சிலரின் நோயெதிர்ப்புத் தொகுதியின் செயற்பாடு படிப்படியாக தேய்ந்துவிடக்கூடும் என்பதால், இந்நோய்த் தாக்கம் ஏற்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் சோதனை செய்யும்போதும் எதிரான விளைவைக் கொண்டிருக்கக்கூடும். இந்த ஆரம்ப தோல் சோதனையானது, எதிராக இருந்தாலும்கூட, எதிர்காலச் சோதனைகளில் காசநோய் நுண்ணுயிர் ஊனீருடன் எதிர்த்துச் செயற்படும் உடலின் ஆற்றலை தூண்டக்கூடும். ஆகவே அடுத்துவரும் சோதனைக்கு நேரான எதிர்விளைவு ஏற்படுவதானது புதிய நோய்த்தொற்று என தவறாக விவரிக்கப்படலாம். ஆனால் உண்மையில் அது அதிகரிக்கப்பட்ட எதிர்விளைவின் காரணமாக பழைய தொற்றுக்கு ஏற்பட்ட முடிவாக இருக்கும்.

குறித்த கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சோதனை செய்யப்படும் வயதானவர்களின் (எ.கா. சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள்) ஆரம்ப தோல் சோதனைக்காக இரண்டு படிச் சோதனையைப் பயன்படுத்தவும். எதிர்காலத்தில் செய்யப்படும் ஏதேனும் நேரான சோதனைகள் பழைய தொற்றுக்குக் காண்பிக்கப்பட்ட விளைவாக இல்லாமல் புதிய தொற்றால் ஏற்பட்டதே என விவரிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை இது உறுதிப்படுத்தும்.

  • ஊசிமருந்து ஏற்றப்பட்டு 48–72 மணிநேரத்தின் பின்னர் முதலாவது சோதனைக்காக திரும்பவேண்டும்
  • முதலாவது சோதனை நேராக இருந்தால் அந்நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று கருதலாம்
  • முதலாவது சோதனை எதிராக இருந்தால் முதலாவது ஊசிமருந்து கொடுத்து 1–3 வாரத்தின் பின்னர் இரண்டாவது ஊசிமருந்தைக் கொடுக்க வேண்டும்
  • ஊசிமருந்து ஏற்றப்பட்டு 48–72 மணிநேரத்தின் பின்னர் இரண்டாவது சோதனைக்காகத் திரும்ப வேண்டும்
  • இரண்டாவது சோதனை நேராக இருந்தால் அந்நபருக்கு முன்பே தொற்று ஏற்பட்டுள்ளது என்று கருதலாம்
  • இரண்டாவது சோதனை எதிராக இருந்தால் அந்நபருக்கு தொற்று இல்லை எனக் கருதலாம் [7]

இரண்டு-படிச் சோதனையில் "தொற்றுள்ளவர்" என அடையாளங் காணப்பட்ட நபர் "காசநோய் நுண்ணுயிர் ஊனீர் மாற்றி" என அழைக்கப்படுவார். பி.சி.ஜி எடுத்த நபர்களில் (பெரும்பாலும் வெளிநாட்டு நபர்களில்) காசநோய் தொற்றின் கிட்டத்தட்ட எங்கும் நிறைந்த பொய்யான கண்டறிதலில் பெற்ற முடிவுகள் முந்தைய பி.சி.ஜி தடுப்பு மருந்து ஏற்றத்தை அலட்சியப்படுத்தும் என்பது அமெரிக்க ஒன்றிய பரிந்துரை ஆகும். தூண்டுதல் என்ற விவாதத்துக்காக தயவுசெய்து பி.சி.ஜி இலுள்ள அத்தியாயத்தைப் படிக்கவும். ஐக்கிய இராச்சிய வழிகாட்டல்கள் இந்த தவறைத் தவிர்க்கின்றன.[8]

சமீபத்திய மேம்பாடுகள்

[தொகு]

மாண்டோ சோதனைக்கான ஒரு மாற்றீடாக பிற பல சோதனைகள் உருவாக்கப்பட்டன. QuantiFERON-TB Gold என்பது ஒரு இரத்தச் சோதனை ஆகும். இது காசநோய் பாக்டீரியத்துக்கு நோயாளி காண்பிக்கும் எதிர்ப்புத் தாக்கத் தன்மையை அளக்கிறது. இது மறைந்த அல்லது செயலிலுள்ள காசநோய்த் தொற்று ஆபத்து அதிகமாக உள்ள நபர்களின் ஆரம்ப மற்றும் தொடர் சோதனைகளுக்கு உதவியாக உள்ளது. QuantiFERON சோதனையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.டி.சி ஆல் வெளியிடப்பட்டன.[9] QuantiFERON-TB Gold என்பதை அமெரிக்க ஒன்றியத்தில் எஃப்.டி.ஏ அனுமதித்துள்ளது. இதற்கு ஐரோப்பாவில் சி.ஈ மார்க் அனுமதி உள்ளது. மேலும் ஜப்பானில் எம்.ஹெச்.எல்.டபிள்யூ இதை அனுமதித்துள்ளது.

ஹீஃப் சோதனை

[தொகு]

ஹீஃப் சோதனை என்பது முன்னர் ஐக்கிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட காசநோய் நுண்ணுயிர் ஊனீர் தோல் சோதனை ஆகும். ஆனால் 2005 ஆம் ஆண்டிலிருந்து இது நிறுத்தப்பட்டது.

10 TU (0.1 மி.லீ 100 TU/mL, 1:1000) உடன் செய்யப்பட்ட இதற்குச் சமமான மாண்டோ சோதனை நேரான மட்டங்கள் ஆவன

  • <5 மி.மீ கடினமான பகுதி (ஹீஃப் 0-1)
  • 5-15 மி.மீ கடினமான பகுதி (ஹீஃப் 2)
  • >15 மி.மீ கடினமான பகுதி (ஹீஃப் 3-4)

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. DTBE - Mantoux TB Skin Test Faciliator Guide - Part 1: Administering
  2. http://www.immunisation.nhs.uk/files/mantouxtest.pdf
  3. From the CDC team of the CDC team at the Saskatchewan Lung Association, photos of a PPD bump பரணிடப்பட்டது 2007-03-21 at the வந்தவழி இயந்திரம்.
  4. Starke J (1996). "Tuberculosis Skin Testing: New Schools of Thought". Journal of the American Academy of Pediatrics 98: 123–125. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-4005. 
  5. Chaturvedi N, Cockcroft A (1992). "Tuberculosis screening among health service employees: who needs chest X-rays?". J Soc Occup Med 42: 179–82. doi:10.1093/occmed/42.4.179. 
  6. Tuberculin and Anergy Testing in HIV-Seropositive and HIV-Seronegative Persons - Markowitz et al. 119 (3): 185 - Annals of Internal Medicine
  7. Office of Health and Human Services. "Booster Phenomenon". பார்க்கப்பட்ட நாள் 2008-07-02.
  8. National Institute for Health and Clinical Excellence. "Tuberculosis: Clinical diagnosis and management of tuberculosis, and measures for its prevention and control". Archived from the original on 2006-04-25. பார்க்கப்பட்ட நாள் 2006-04-07.
  9. Guidelines for Using the QuantiFERON-TB Gold Test for Detecting Mycobacterium tuberculosis Infection, United States
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டோ_சோதனை&oldid=3567113" இலிருந்து மீள்விக்கப்பட்டது