உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு ஊதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு ஊதா
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் மாங்கனீசு(III) பைரோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
10101-66-3
பண்புகள்
NH4MnP2O7
வாய்ப்பாட்டு எடை 246.885
தோற்றம் ஊதா நிற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு ஊதா (Manganese violet) என்பது NH4MnP2O7 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இதை அமோனியம் மாங்கனீசு(III) பைரோபாசுபேட்டு என்று அழைக்கிறார்கள். பைரோபாசுபேட்டு (P2O4−7), அமோனியம் (NH 4), மற்றும் மாங்கனீசு ஆகியவை சேர்ந்து அமோனியம் மாங்கனீசு(III) பைரோபாசுபேட்டு திண்மத்தை உருவாக்குகின்றன. மாங்கனீசு(III) ஆக்சைடு, டை அமோனியம் பாசுபேட்டு, பாசுபாரிக் அமிலம் ஆகியவை சேர்ந்த கலவையை சூடுபடுத்துவதன் மூலம் மாங்கனீசு ஊதா தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக அறியப்பட்ட ஒரு நிறமியாகும் [1].

வேதிக்கட்டமைப்பு

[தொகு]

α- மற்றும் β-வடிவம் என்ற இரண்டு பல்லுருவ தோற்றங்களில் இது அறியப்படுகிறது. ஆனால் இரண்டு வடிவங்களிலும் கட்டமைப்பு ஒரே மாதிரியாகவே உள்ளது. Mn(III) மையங்கள் உருக்குலைந்த எண்முக தளங்களில் பைரோபாசுபேட்டு ஈந்தணைவிகள் வழங்கும் ஆறு ஆக்சிசன் அணுக்களால் சூழப்பட்டுள்ளன [2].

நிறமாலை

[தொகு]

பிரதிபலிப்பு மற்றும் ஒளிர்வு நிறமாலைகளை அகச்சிவப்பு நிறமாலையில் காணலாம் [3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hugo Müller, Wolfgang Müller, Manfred Wehner, Heike Liewald "Artists' Colors" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_143.pub2
  2. Yasmin Begum, Adrian J. Wright "Relating highly distorted Jahn–Teller MnO6 to colouration in manganese violet pigments" J. Mater. Chem., 2012, vol. 22, pp. 21110–21116. எஆசு:10.1039/c2jm33731b
  3. Manganese violet, at ColourLex
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு_ஊதா&oldid=3376327" இலிருந்து மீள்விக்கப்பட்டது