மலேசியா எயர்லைன்சு விமானம் 17
ரோமின் பியுமிசினொ விமான நிலையத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சம்பந்தப்பட்ட விமானம் நின்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம் | |
Incident சுருக்கம் | |
---|---|
நாள் | 17 சூலை 2014 |
சுருக்கம் | Under investigation. Fired at with surface-to-air missile.[1] |
இடம் | ஹ்ரபோவே அருகே ,டநிட்ஸ்க் ஒப்லாஸ்து , உக்ரைன் 48°7′56″N 38°39′19″E / 48.13222°N 38.65528°E |
பயணிகள் | 283 |
ஊழியர் | 15 |
உயிரிழப்புகள் | (மொத்தம்) 298 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | போயிங் 777-200ER |
இயக்கம் | மலேசியா எயர்லைன்சு |
வானூர்தி பதிவு | 9M-MRD |
பறப்பு புறப்பாடு | ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் |
சேருமிடம் | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 (Malaysia Airlines Flight 17, எம்எச்17 (MH17/MAS17)[2] என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும். போயிங் 777 ரக விமானம் உக்ரைனின் தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிராபோவ் நகருக்கு அண்மையில்[3][4] உருசிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் வீழ்ந்தது.[5] விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[6]
உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர்ப் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி, இவ்விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் இதனைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.[7][8] உக்ரைனியப் பிரச்சினையில் உருசியா சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அறிவித்த அடுத்த நாள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.[9]
விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் வைத்து பூக் நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்தது.[10][11] உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ இதனை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.[12] உக்ரைனியப் படையினரே விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தினர். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது.[13][14]
11 செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான வானூர்தித் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது[15].
விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்
[தொகு]நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சூலை 17, 2014 அன்று 12:15 (நெதர்லாந்து நேரம்) மணியளவில் விமானம் புறப்பட்டது. பயண அட்டவணைப்படி இவ்விமானம் காலை 06:10 (மலேசிய நேரம்) மணியளவில் கோலாலம்பூர் சென்று சேரவேண்டும். ஆனால் 17:15 (உக்ரைன் நேரம்) மணியளவில் கிழக்கு உக்ரேனின் வான்வெளிப் பகுதியில் விமானம் எரிந்து விழுந்தது. கடைசித் தொடர்பின்போது விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது.[16]
விமானத்தின் காலக்கெடு
[தொகு]கடந்துவிட்ட நேரம் | நேரம் | நிகழ்வு | |||
---|---|---|---|---|---|
ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் | ஆம்ஸ்டர்டாம் | உக்ரைன் | கோலாலம்பூர் | ||
00:00 | 10:14 | 12:14 | 13:14 | 18:14 | |
04:01 | 14:15 | 16:15 | 17:15 | 22:15 | விமானம் உக்ரைன் ரேடாரில் இருந்து மறைந்தது |
பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்
[தொகு]நாடு | எண்ணிக்கை |
---|---|
நெதர்லாந்து | 192[a] |
மலேசியா | 44[b] |
ஆத்திரேலியா | 27[18] |
இந்தோனேசியா | 12 |
ஐக்கிய இராச்சியம் | 10 |
பெல்ஜியம் | 4 |
செருமனி | 4 |
பிலிப்பீன்சு | 3 |
நியூசிலாந்து | 1[19] |
கனடா | 1 |
மொத்தம் | 298 |
விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 மலேசியப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.[20][21][22] இவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டவர்.[23][24] சூலை 19 இல் அனைத்து 298 பேரினதும் விபரங்களை மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் வெளியிட்டது.[17]
ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெறும் 20வது பன்னாட்டு எயிட்சுக் மாநாட்டில் கலந்து கொள்ளவென விமானத்தில் போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 எயிட்சு வல்லுநர்களும், பன்னாட்டு எயிட்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோயிப் லாங்கேயும் இதில் கொல்லப்பட்டனர்.[25][26][27] இவர்களுடன் டச்சு மேலவை உறுப்பினர் வெல்லெம் விட்டெவீன்,[28] ஆத்திரேலிய எழுத்தாளர் லியாம் டேவிசன்,[29] மலேசியத் தமிழ் நடிகை சுபா ஜெய்,[30] மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பாட்டியார் சிறீ சித்த அமீரா[31] ஆகியோரும் இறந்த பிரபலங்களில் அடங்குவர்.
உலக மக்களின் அஞ்சலி
[தொகு]-
எஸ்தோனியா நாட்டிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தின் நுழைவாயிலில் பொதுமக்களின் மெழுகுவர்த்தி அஞ்சலி
-
ருசிய அதிபர் விலாடிமிர் புடின் தனது அரசு அதிகாரிகளுடன் மவுன அஞ்சலி
- வகை: போயிங் 777 – 2H6ER
- வரிசை எண்: 28411
- பதிவு எண்: 9M-MRD
- தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 84 ஆவது விமானம்.
- முதல்முறையாக பறந்த நாள்: 17 சூலை 1997
- மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 29 சூலை 1997
- என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 800
- விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Missile fired at Malaysian plane: US intelligence". CNBC. 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
- ↑ "Statement Malaysia Airlines MH17". klm.com. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2014.
- ↑ "Malaysian airliner crashes in E. Ukraine near Russian border, over 283 people on board". RT. 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
- ↑ "Gruesome images of Malaysia MH17 plane crash in east Ukraine appear online (PHOTOS)". RT. 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
- ↑ "Malaysia Airlines plane crashes on Ukraine-Russia border – live". த டெயிலி டெலிகிராப் இம் மூலத்தில் இருந்து 2014-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140718001608/http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ukraine/10974050/Malaysia-Airlines-plane-crashes-on-Ukraine-Russia-border-live.html. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ Zverev, Anton (17 சூலை 2014). "Malaysian airliner downed in Ukraine war zone, 295 dead". ராய்ட்டர்ஸ். Archived from the original on 17 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Schmitt, Eric; Mabry, Marcus; MacFarquhar, Neil; Herszenhorn, David M. (17 சூலை 2014). "Malaysia Jet Brought Down in Ukraine by Missile, U.S. Officials Say". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/07/18/world/europe/malaysian-airlines-plane-ukraine.html. பார்த்த நாள்: 18 சூலை 2014.
- ↑ Birnbaum, Michael; Branigin, William; Londoño, Ernesto (17 சூலை 2014). "Malaysia Airlines plane crashes in eastern Ukraine; U.S. intelligence blames missile". வாசிங்டன் போஸ்ட். பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2014.
- ↑ Baker, Peter; Shear, Michael (17 சூலை 2014). "Tragedy on Top of Crisis May Strengthen Stand Against Russia in U.S. and Europe". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/07/18/world/europe/tragedy-on-top-of-crisis-may-strengthen-stand-against-russia-in-us-and-europe.html. பார்த்த நாள்: 18 July 2014.
- ↑ de Carbonnel, Alissa (17 சூலை 2014). "Malaysian passenger plane crashes in Ukraine near Russian border -Ifax". ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2014-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140718000653/http://www.reuters.com/article/2014/07/17/ukraine-crash-airplane-idUSL6N0PS59Y20140717. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ Zverev, Anton (17 சூலை 2014). "Ukraine says rebels shoot down Malaysian airliner, 295 dead". ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2014-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140717213520/http://www.reuters.com/article/2014/07/17/us-ukraine-crisis-airplane-idUSKBN0FM22N20140717. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ "Malaysia Airlines crash: President Poroshenko calls shooting down of Malaysian plane an 'act of terrorism'". த டெயிலி டெலிகிராப். 17 July 2014 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140717191131/http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ukraine/10974784/Malaysia-Airlines-crash-President-Poroshenko-calls-shooting-down-of-Malaysian-plane-an-act-of-terrorism.html. பார்த்த நாள்: 17 July 2014.
- ↑ "Malaysian plane was shot down by rebels, intercepted phone calls prove, Ukraine's president says". நேசனல் போஸ்ட் (ஏபி). 17 சூலை 2014. http://news.nationalpost.com/2014/07/17/malaysian-passenger-plane-was-shot-down-by-rebels-intercepted-phone-calls-prove-ukraines-president-says/. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ "They shouldn't be f****** flying. There is a war going on': Moment Russian separatists 'realized they had shot down a jetliner' released by Ukrainian government". டெய்லி மெயில். 17 July 2014. http://www.dailymail.co.uk/news/article-2696847/They-shouldnt-f-g-flying-There-war-going-Ukraine-intelligence-officials-release-phone-calls-claim-PROVES-Russia-shot-Flight-MH17.html. பார்த்த நாள்: 17 July 2014.
- ↑ "MH17 Is The Deadliest Plane Crash Since 9/11". தி ஹப்பிங்டன் போஸ்ட். 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Malaysia airliner crash: What we know
- ↑ 17.0 17.1 "Saturday, July 19, 11:40 AM GMT 0800 Media Statement 6: MH17 Incident". Malaysia Airlines. 19 சூலை 2014. Archived from the original on 2014-07-17. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2014.
- ↑ Luke Royes. "Live: Malaysia Airlines jet crashes in Ukraine". ஏபிசி.
- ↑ "Malaysia Airlines MH17 crash: Kiwi confirmed on board". 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
- ↑ "Malaysia Airlines flight MH17 crash: 'Six Britons, 23 US citizens and 80 children' feared dead after Boeing passenger jet 'shot down' near Ukraine-Russia border". The Independent. 17 சூலை 2014. http://www.independent.co.uk/news/world/europe/malaysia-airlines-plane-crash-boeing-jet-carrying-295-people-crashes-in-ukraine-9612882.html. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ Jacquelin Magnay (18 சூலை 2014). "28 Australians among 298 killed on MH17 crash in Ukraine". The Australian.
- ↑ Walker, Shaun; Branigan, Tania (17 சூலை 2014). "Malaysia Airlines flight MH17 crashes in east Ukraine". தி கார்டியன். http://www.theguardian.com/world/2014/jul/17/malaysia-airlines-plane-crash-east-ukraine. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ "Malaysia Airlines plane brought down in Ukraine". Big News Network.com. http://www.bignewsnetwork.com/index.php/sid/223870275/scat/b8de8e630faf3631/ht/Malaysia-Airlines-plane-brought-down-in-Ukraine. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ "MH17 hit by missile from rebel-held Ukraine - Obama". பிபிசி (British Broadcasting Corporation). 18 சூலை 2014. http://www.bbc.co.uk/news/world-europe-28378388. பார்த்த நாள்: 18 சூலை 2014.
- ↑ Lillebuen, Steve (18 சூலை 2014). "Crash claims top AIDS researchers heading to Melbourne". http://www.smh.com.au/national/crash-claims-top-aids-researchers-heading-to-melbourne-20140718-zuaw3.html. பார்த்த நாள்: 18 சூலை 2014.
- ↑ Pearlman, Jonathan (18 July 2014). "Leading HIV researchers lost as flight MH17 is downed in Ukraine". Telegraph Media Group Limited இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200617221027/https://www.telegraph.co.uk/news/worldnews/australiaandthepacific/australia/10975275/Leading-HIV-researchers-lost-as-flight-MH17-is-downed-in-Ukraine.html. பார்த்த நாள்: 18 சூலை 2014.
- ↑ Hogan, Caelainn; Eunjung Cha, Ariana (18 July 2014). "Top AIDS researcher and others in field perished on MH17". http://www.washingtonpost.com/national/health-science/top-aids-researcher-and-others-in-field-perished-on-mh17/2014/07/18/2aa31972-0e85-11e4-8341-b8072b1e7348_story.html. பார்த்த நாள்: 18 சூலை 2014.
- ↑ "Senator Witteveen (PvdA) omgekomen bij crash – Binnenland – VK". De Volkskrant. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
- ↑ "Victorians among those killed in MH17 crash: Premier". Bendigo Advertiser. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Malaysian actress, Dutch hubby and baby die with MH17". The Malaysian Insider. Archived from the original on 22 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Najib & Hishammuddin's Step Grandmother On Board MH17". Archived from the original on 20 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Malaysia Airlines 9M-MRD (Boeing 777 – MSN 28411) | Airfleets aviation". Airfleets.net. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
இதையும் காண்க
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Malaysia Airlines Flight 17[தொடர்பிழந்த இணைப்பு] – மலேசியா எயர்லைன்ஸ்
- "Investigation crash MH17, 17 July 2014 Donetsk." Dutch Safety Board.
- "Malaysia Airlines Flight 17 பரணிடப்பட்டது 2015-04-28 at the வந்தவழி இயந்திரம் - Malaysia Ministry of Transport
- "2014-07-18 :: Розслідування катастрофи літака Boeing 777 பரணிடப்பட்டது 2014-08-10 at the வந்தவழி இயந்திரம்." National Bureau of Air Accidents Investigation of Ukraine. (உக்ரைனிய மொழி)
- Malaysia Airlines flight MH17 crashes in Ukraine – live updates
- MH17 17 July 2014 on FlightAware
- Official declaration by pro-Russian separatists
- Images and videos, New York Daily News
- Outrage in the skies - தி இந்து நாளிதழின் தலையங்கம்
- The interview with Ukraine Ambassador - தி இந்து நாளிதழில் வெளியானது