மலக்குடல் இறக்கம்
மலக்குடல் இறக்கம் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
ஐ.சி.டி.-10 | K62.3 |
ஐ.சி.டி.-9 | 569.1 |
ம.இ.மெ.ம | 176780 |
நோய்களின் தரவுத்தளம் | 11189 |
ஈமெடிசின் | med/3533 |
பேசியண்ட் ஐ.இ | மலக்குடல் இறக்கம் |
ம.பா.த | D012005 |
மலக்குடல் இறக்கம் (rectal prolapse) என்பது ஆசனவாயில் உள்ள சுருக்குதசைகளின் (anal sphincters) செயலிழப்பால் மலக்குடலோ அல்லது மலக்குடல் கோழைப்படலம் மட்டுமோ வெளியே பிதுங்கிக் கொண்டு நிற்கும் நிலையாகும்.
வகைகள்
[தொகு]முழு தடிமன் (full thickness) இறக்கம் - முழ மலக்குடலும் ஆசன வாய் வழி வெளித் தள்ளிக் கொண்டிருக்கும் கோழைப்படல (mucosal) இறக்கம் - மலக்குடல் கோழைப்படலம் மட்டும் வெளித்தள்ளிக் கொண்டிருக்கும்
காரணங்கள்
[தொகு]இது மலக்குடலை இடத்தில் இருத்தி வைத்திருக்கும் தசைகள் மற்றும் நாண்கள் மற்றும் ஆசனவாய்ச் சுருக்குத்தசைகள் வலுவிழப்பதால் உண்டாகிறது. இதை உண்டாக்கும் கரணியங்களாவன,
- வயோதிகம்
- நெடு நாள் மலச்சிக்கல்
- ஆசனவாய் வழி உடலுறவு கொள்தல் (குதப்புணர்ச்சி)
- நெடுநாள் வயிற்றுப்போக்கு
- கருப்பம் மற்றும் மகப்பேறு
- முந்தைய அறுவை சிகிச்சை
- கக்குவான் இருமல் மற்றும் சில நுரையீரல் நோய்கள்
- மனநோய்கள்
நோய்வரலாறு
[தொகு]ஆரம்பத்தில் மலம் கழித்தல், இருமல் மற்றும் தும்மல் போன்ற வேளைகளில் மட்டும் வெளித்தள்ளும் மலக்குடல் நாளாக நாளாக நிலையாக வெளியே காணப்படும். கோழைப் படலத்தால் உருவாக்கப்படும் கோழையானது தொடையில் பட்டு தோல் அழற்சியை உண்டாக்கும். மேலும் நோயரின் மனதளவில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.
மருத்துவம்
[தொகு]அதிக நார்ச்சத்துள்ள உணவு மற்றும் மலமிளக்கிகள் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தி ஆரம்பநிலை நோயைக் குணப்படுத்தலாம்.
வயதானோரில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இந்த அறுவை சிகிச்சை வயிறு வழியாகவோ மூலாதாரப் பகுதி (perineum) வழியாகவோ செய்யப்படுகிறது.