உள்ளடக்கத்துக்குச் செல்

மறை வெப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பவேதியியலில், மறை வெப்பம் (latent heat) அல்லது உள்ளுறை வெப்பம் என்பது, ஒரு வேதிப்பொருள் திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு (அதே வெப்பநிலையில்) மாறும்போது உறிஞ்சப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும்.எடுத்துக்காட்டாக, பனிக்கட்டி உருகி நீராகும் போதும், நீர் கொதித்து ஆவியாகும் போதும் வெப்பநிலையில் மாற்றம் இன்றியே வெப்ப ஆற்றல் உள்ளிழுக்கப்படும். தற்காலத்தில் இது உள்ளீட்டு வெப்பம் (enthalphy) என்றும் அழைக்கப்படுகிறது.

மறைவெப்பத்தில் பொதுவாக வழங்கப்படுவது இரண்டு வகைகள். ஒன்று உருகல் மறை வெப்பம் ஆகும்; இங்கே திண்மப் பொருள் நீர்ம நிலைக்கு மாறும். மற்றது, ஆவியாதல் மறை வெப்பம்; இங்கே நிலை மாற்றம் நீர்மத்தில் இருந்து வளிமம் என்றாகும். இந் நிலை மாற்றங்கள் அகவெப்ப மாற்றங்கள் எனப்படுகின்றன. அதாவது இம் மாற்றங்களின்போது வெப்பம் உள்ளிழுக்கப்படுகின்றது. இதே மாற்றம் எதிர்த் திசையில்: வளிமம் → நீர்மம் → திண்மம் என்று அமையும்போது வெப்பம் வெளியிடப் படுவதனால், அது புறவெப்ப மாற்றம் எனப்படும்.

மறை வெப்ப அட்டவணை

[தொகு]

உள்ளுறை வெப்பம் [latent (heat) = Potentially existing but not presently evident or realized - wordweb dictionary]

பொதுவான நீர்மங்கள் மற்றும் வளிமங்களின் மறை வெப்பமும், நிலை மாற்ற வெப்ப நிலைகளும்.
பதார்த்தம் உருகல்
மறை வெப்பம்
ஜூ/கி (J/g)
உருகு
நிலை
°ச (°C)
ஆவியாதல்
மறை வெப்பம்
ஜூ/கி (J/g)
கொதி
நிலை
°ச (°C)
எத்தனால் 108 -114 855 78.3
அமோனியா 339 -75 1369 -33.34
காபனீரொட்சைட்டு 184 -57 574 -78
ஹீலியம்     21 -268.93
ஐதரசன் 58 -259 455 -253
ஈயம்[1] 24.5 372.3 871 1750
நைதரசன் 25.7 -210 200 -196
ஒட்சிசன் 13.9 -219 213 -183
தொலுயீன்   -93 351 110.6
தர்ப்பன்டைன்     293  
நீர் 334 0 2260 100

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Textbook: Young and Geller College Physics, 8e, Pearson Education
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறை_வெப்பம்&oldid=2804507" இலிருந்து மீள்விக்கப்பட்டது