உள்ளடக்கத்துக்குச் செல்

மயில் வசீகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயில் வசீகரன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. almana
இருசொற் பெயரீடு
Junonia almana
(கரோலஸ் லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள் [1]
  • Papilio almana Linnaeus, 1758
  • Papilio asterie Linnaeus, 1758

மயில் வசீகரன் (Peacock Pansy -- Junonia almana) இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், மியான்மார், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும் பட்டாம்பூச்சி வகையாகும். தரையை ஓட்டிப் பறக்கும் மயில் வசீகரன்களை இந்திய நிலப்பரப்பில் பொதுவாகக் காணலாம்.[2] ஆரஞ்சு நிற இறகுகளின் மேற்புறம் பழுப்புநிறப்பட்டையும் இறகுகளின் ஓரத்தில் பழுப்பு நிறக்கோடுகளும் காணப்படும். மயில் இறகுகளில் உள்ளதைப்போன்று இவற்றின் இறகுகளின் மத்தியில் அடர்பழுப்பு நிற வளையம் இருப்பதால் இவற்றுக்கான ஆங்கில பெயர் அமைந்ததாக கருதலாம்[சான்று தேவை].

கோடைக் காலத்தில் இதன் இறகுகளில் காணப்படும் புள்ளிகள் குறைந்தும், மழைக் காலத்தில் இறகுகளில் உள்ள கண் போன்ற புள்ளிகளும் வரிகளும் கூடுதலாகக் காணப்படும். இந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள் பொதுவாக கனகாம்பரம், நீர்முள்ளி, பொடுதலை போன்ற தாவரங்களை உணவாகக் கொள்கின்றன.[3]

மேற்கோள்

[தொகு]
  1. Charles Thomas Bingham (1905). "375. Junonia almana". Butterflies. Volume 1. The Fauna of British India, Including Ceylon and Burma. Taylor and Francis. pp. 361–362.
  2. காடு இதழ், தடாகம் வெளியீடு, 2016 மே-சூன், பக்: 37.
  3. ஆதி வள்ளியப்பன் (6 சனவரி 2018). "வசீகரனின் மயில் கண்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_வசீகரன்&oldid=3577980" இலிருந்து மீள்விக்கப்பட்டது