மத்ரித் முற்றுகை
மத்ரித் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
எசுப்பானிய உள்நாட்டுப் போர் பகுதி | |||||||
மத்ரிதின் பார்க் டெல் ஓயெஸ்த் (மேற்கு பூங்கா)வில் பதுங்கு குழிகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இரண்டாவது எசுப்பானியக் குடியரசு | எசுப்பானிய தேசியவாதிகள் லீஜியன் வான்படை கொண்டோர் லீஜியன் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஒசே மியாகா ஆன்சு பெய்ம்லெர் † என்ரிக் லிஸ்டர் அடோல்ஃபா பிராடா கார்லோசு ரோமெரோ ஒசே மாரியா கலன் பிரான்சிஸ்கோ கலன் லூயிசு பார்செலோ அன்டோனியோ எசுகோபார் எமிலியோ புயினோ ஒசே மாரியா என்சிசோ பவோல் லூகாக்சு சிப்ரியனோ மெரா ஒசே பி. துர்ருடி † | பிரான்சிஸ்கோ பிராங்கோ எமிலியோ மோலா ஒசே என்ரிக் வரேலா ஒசே மோசுகார்டோ இதுவார்தோ மொகமது மெசியான் கார்லோசு அசென்சியோ கபானில்லாசு ரோலண்டோ டெ டெல்லா பெர்னாண்டோ பேரன் அன்டானியோ கேஸ்ட்கான் பிரான்சிஸ்கோ அஃபான் டெல்கடோ |
||||||
பலம் | |||||||
42,000 50 பீரங்கிகள் 70 துப்பாக்கிகள் | 20,000 30 பீரங்கிகள் 120 வானூர்திகள் |
||||||
இழப்புகள் | |||||||
~5,000 இறப்பு அல்லது காயம் (குடிகள் உட்பட) | ~5,000 இறப்பு அல்லது காயம் | ||||||
இழப்புகள் 1936ஆம் ஆண்டு நவம்பர் சண்டையில் மட்டும் |
மத்ரித் முற்றுகை (Siege of Madrid) 1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது எசுப்பானியத் தலைநகரம் மத்ரித் இரண்டரை ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டதைக் குறிப்பதாகும். அக்டோபர் 1936 முதல் முற்றுகையிடப்பட்ட நகரம் முடிவில் மார்ச் 28, 1939இல் தேசியவாதிகளிடம் வீழ்ந்தது. இரண்டாவது எசுப்பானியக் குடியரசுக்கு விசுவாசமான பல படைகள் மத்ரித் வீழ்ச்சியடையாது இருக்கப் போராடின; தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான போராளிக் குழுக்கள் முற்றுகையை நடத்தியும் வான்வழி குண்டு வீசியும் நகரை கைக்கொள்ள முயன்றன. 1936இல் நடந்த மத்ரித் சண்டையின் (Battle of Madrid) போது நகரைச் சூழ்ந்து மிகக் கடுமையான சண்டை நடந்தது; குடியரசுவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த தலைநகரைக் கைப்பற்ற தேசியவாதிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர்.
எசுப்பானிய குடியரசின் மிக உயரிய படைத்துறை விருதுகளான மத்ரித் லாரேட் பிளேட் (எசுப்பானியம்: Placa Laureada de Madrid) மற்றும் மத்ரித் மேன்சிறப்பு (எசுப்பானியம்: Distintivo de Madrid),[1][2] எசுப்பானியத் தலைநகரத்தின் பெயரைத் தாங்கி நிற்கின்றன; உள்நாட்டு போரின்போது இந்த நீண்ட முற்றுகைக் காலத்தில் காட்டிய வீரத்தையும் துணிவையும் குறிக்கும் விதமாக இந்த விருதுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன.[3]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Legislacíón sobre la Placa Laureada de Madrid y Distintivo de Madrid, Revista de historia militar, ISSN 0482-5748, Nº Extra 2, 2011, pp. 299-316
- ↑ Luis Grávalos & José Luis Calvo, Condecoraciones Militares Españolas, Editorial San Martin, 1988, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8471402661
- ↑ Second Spanish Republic 23 January 1938 Decree
வெளி இணைப்புகள்
[தொகு]- Spartacus Educational article on the siege
- Short summary of the battle பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்
- Madrid siglos XIX y XX பரணிடப்பட்டது 2011-06-09 at the வந்தவழி இயந்திரம் (Article on life in Madrid during the siege, by the students of the Faculty of Geography and History of the Universidad Complutense of Madrid) (எசுப்பானியம்)
- Madrid Under Fire 1936 - 1939. A set on Flickr
- Madrid corazón de España; poem in honour of the Defence of Madrid by Rafael Alberti