உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரவாயல் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரவாயல் சந்திப்பு (ஆங்கில மொழி: Maduravoyal Junction) சென்னையிலுள்ள ஒரு முக்கிய சாலை சந்திப்பாகும். இது கோயம்பேடு சந்திப்புக்கு மேற்கே தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா) மற்றும் சென்னை பைபாஸ் ஆகியவற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

மதுரவாயல் சாலை பிரிப்பு

[தொகு]

4050 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சென்னை புறவழிச்சாலை திட்டத்தின் (கட்டம் II) ஒரு பகுதியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) கத்திப்பாரா சந்திப்பில் உள்ளதைப் போலவே இந்த சந்திப்பிலும் குறுக்கீடில்லா மாற்றுப் பாதை கட்டப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணி 2010 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நிறைவடைந்தது.[1] இப்பகுதியில் மண் தளர்வான நிலை மண்ணாக இருந்தாதால் திட்டம் தாமதமானது. தூண்கள் அமைத்து இந்நிலை சரி செய்யப்பட்டது.[2] மேம்பாலத்தில் நான்கு சுழல்கள் உள்ளன, அவை பல்வகை வடிவ அமைப்பில் ஒன்றிணைகின்றன. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லியில் இருந்து தாம்பரம், புழல் முதல் பூந்தமல்லி, கோயம்பேடு முதல் புழல் வரை செல்லும் வாகனங்களுக்கு இச்சுழல்கள் உதவுகின்றன. மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை செல்லும் பறக்கும் தங்க நாற்கர சாலை திட்டம் மதுரவாயலில் இருந்து தொடங்குகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரவாயல்_சந்திப்பு&oldid=3511229" இலிருந்து மீள்விக்கப்பட்டது