உள்ளடக்கத்துக்குச் செல்

மதுபானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில மதுபான வகைகள்.

பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள், வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் மயக்க மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.

குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை (addiction) தூண்டும் தன்மை உடையன.

1994இல் உருவான உலக வர்த்தக அமைப்பு, மதுபானத்தை சுதந்திர வர்த்தகப் பொருளாக வகைப்படுத்துகிறது. சேவை என்ற அடிப்படையிலோ, மூலதனம் என்ற அடிப்படையிலோ உறுப்பு நாடுகள் எங்கு வேண்டுமானாலும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். காட்(GATT) ஒப்பந்தப் பிரிவுகள், வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் மது பானங்களின் மீது இந்தியா வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகின்றன. ஒப்பந்தத்தின் பல பிரிவுகள். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில மாநில அரசுகள் நினைத்தாலும் இவை குறுக்கே வரும் அபாயம் உண்டு. [1]

மதுபானம் அருந்துபவர்கள் வயது

[தொகு]

1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007ல் 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.[1]

போரே கமிட்டி

[தொகு]

1943இல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட போரே கமிட்டி, 1946ல் தனது அறிக்கையை அளித்தது. பொது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக குடிப்பழக்கத்தின் விளைவுகளும் பார்க்கப்பட்டன. போரே கமிட்டி அறிக்கை வறுமையாலும், வேலையின்மையாலும், பொழுதுபோக்கு வசதி இன்மையாலும் விரக்திக்குத் தள்ளப்பட்டு குடிப்பவர்களும் உண்டு; சமூகப் பழக்கம் காரணமாகவும், கூட்டாகக் குடிக்கும் பழக்கத்தாலும் குடிப்பவர்கள் உண்டு. பொருளாதார மேம்பாடு, கல்வி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு போன்றவற்றில் அரசு முதலீடு செய்ய வேண் டும், மது விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும், மறு வாழ்வுக்கும் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.குறிப்பாக வேலை நேரத்தில் விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை முன் வைக்கிறது. பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் ஆய்வும் அதன்விரிவான பரிந்துரைகளும் இதே கண்ணோட்டத்தைத் தான் கடைப்பிடிக் கின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுபானம்&oldid=4048368" இலிருந்து மீள்விக்கப்பட்டது