உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணார்க்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணார்க்காடு
நேர வலயம் IST

மண்ணார்க்காடு என்னும் ஊர், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள வருவாய் வட்டம் ஆகும். அமைதிப் பள்ளத்தாக்கு இங்கிருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரான பாலக்காடு 40 கிலோ மீட்டர் வடகிழக்கு உள்ளது.

மண்ணார்க்காடு வருவாய் வட்டத்திலிருந்து 2021-ஆம் ஆண்டில் பிரித்து, 735 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அட்டப்பாடி தாலுகா நிறுவப்பட்டது.[1][2]

மக்கள்

[தொகு]

இங்கு ஏறத்தாழ 150,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கு ரப்பர், தென்னை, பாக்கு, நேந்திர வாழை, ஜாதிக்காய், நெல் ஆகியவற்றை பயிரிடுகின்றனர். மலையாளத்தைத் தவிர தெலுங்கு, கன்னடம், துளு, தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் பேசுவோரும் வாழ்கின்றனர்.

குந்திப்புழை, நெல்லிப்புழை ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அண்மைய இடங்கள்

[தொகு]
  • காஞ்ஞிரப்புழை அணை - 15 கி.மீ.
  • சைலன்ட் வேலி தேசியப் பூங்கா - 43 கி.மீ.
  • மலம்புழை அணை - 40 கி.மீ.
  • திப்பு சுல்தான் கோட்டை, பாலக்காடு - 43 கி.மீ.
  • மீன் வல்லம் அருவி - 15 கி.மீ.
  • பாத்ரக்கடவு - 10 கி.மீ.
  • சிறுவாணி டாம் - 25 கி.மீ.
  • அட்டப்பாடி - 20 கி.மீ.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Biosphere Reserves in India". General Knowledge Plus.
  2. "National Parks in India". General Knowledge Plus.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணார்க்காடு&oldid=3694876" இலிருந்து மீள்விக்கப்பட்டது