உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கேசி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ மங்கேசி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கோவா (மாநிலம்)
மாவட்டம்:வடக்கு கோவா மாவட்டம்
அமைவு:மங்கேசி கிராமம், பிரியோல்
கோயில் தகவல்கள்

மங்கேசி கோயில் (Mangueshi Temple) கோவாவின் போண்டா வட்டத்தில் உள்ள பிரியோலில் உள்ள மங்கேசி கிராமத்தில் அமைந்துள்ளது. [1] இது மர்தோலில் இருந்து நகுஷிக்கு அருகில் 1 கி.மீ தூரத்திலும், கோவாவின் தலைநகர் பனஜியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும், மட்காவிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது.

காவலே மடத்தின் தலைவராக சிறீமத் சுவாமிகள் என்பவர் மங்கேசியின் மங்கேசி சனஸ்தானின் ஆன்மீகத் தலைவராக உள்ளார்.

இந்த கோயில் கோவாவின் மிகப்பெரிய மற்றும் அடிக்கடி பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாகும். 2011ஆம் ஆண்டில், கோவில் பார்வையாளர்களுக்கு ஆடைக் கட்டுபாட்டை விதித்தது. [2]

வரலாறு

[தொகு]

இந்தக் கோயிலின் தோற்றம் மட்காவில் உள்ள குஷஸ்தாலி கோர்டலிம் என்ற கிராமத்தில் இருந்தது. இது 1543 இல் படையெடுத்த போர்த்துகீசியர்களிடம் விழுந்தது. 1560ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் கிறிஸ்தவ மதமாற்றங்களைத் தொடங்கியபோது, கௌண்டின்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர்களும், வாட்சா கோத்ரத்தைச் சேர்ந்த சாரஸ்வத்துகள் மங்கேசியின் இலிங்கத்தை அசல் தளத்திலிருந்து சுவாரி ஆற்றங்கரைக்கு நகர்த்தினர்.

இவ்வாறு மாற்றப்பட்ட காலத்திலிருந்து, மராட்டியர்களின் ஆட்சிக் காலத்திலும், 1890 ஆம் ஆண்டிலும் இந்த கோயில் இரண்டு முறை புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இறுதி புதுப்பித்தல் 1973 ஆம் ஆண்டில் கோயிலின் மிக உயரமான கோபுரத்தின் மேல் தங்க கலசம் பொருத்தப்பட்டது. [1]

அசல் தளம் மிகவும் எளிமையான கட்டமைப்பாக இருந்தது. தற்போதைய கட்டமைப்பு மராத்தா ஆட்சியில் கட்டப்பட்டது, இது நகர்த்தப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, பேஷ்வாக்கள் 1739ஆம் ஆண்டில் மங்கேசியின் தீவிர பின்பற்றுபவராக இருந்த இராமசந்திர மல்ஹர் சுக்தங்கரின் ஆலோசனையின் பேரில் மங்கேசி கிராமத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். இது கட்டப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பகுதியும் 1763இல் போர்த்துகீசியர்களின் கைகளில் விழுந்தது. [3] ஆனால் இப்போது, போர்த்துகீசியர்கள் தங்கள் ஆரம்ப மத ஆர்வத்தை இழந்து மற்ற மதங்களை சகித்துக்கொண்டனர். எனவே, இந்த அமைப்பு தீண்டப்படாமல் இருந்தது .

சிறீ மங்கேசியைச் சித்தரிக்கும் வரைபடம்

பிரதான கோயில் சிவனின் அவதாரமான பகவான் மங்கேசிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மங்கேசியை இங்கு இலிங்கமாக வணங்குகிறார்கள். புராணத்தின் படி, சிவன் தனது மனைவி பார்வதிதியை பயமுறுத்துவதற்காக புலியாக மாறினார். புலியைப் பார்த்து பயந்துபோன பார்வதி, சிவனைத் தேடிச் சென்று, "திராஹி மாம் கிரிஷா!" (ஓ மலைகளின் ஆண்டவரே, என்னைக் காப்பாற்றுங்கள்! ) என்றார். இதைக் கேட்டதும், சிவன் தன்னை இயல்பு வடிவத்திற்குத் திருப்பிக் கொண்டார். "மாம் கிரிஷா" என்ற சொற்கள் சிவனுடன் தொடர்புடையது. காலப்போக்கில் இந்த வார்த்தைகள் மங்குரிஷா அல்லது மங்கேசி என்று சுருக்கப்பட்டன. [1]

மங்கேசி கவுட சாரஸ்வத் பிராமணர்ர்களில் பலருக்கு குலதெய்வமாக இருக்கிறார். [4]

சர்ச்சைகள்

[தொகு]

மங்கேசி கோயில் சமீபத்திய ஆண்டுகளில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

சூன் 2018 இல் இரண்டு இளம் பெண்கள், ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ மாணவியும், மற்றொன்று மும்பையைச் சேர்ந்த கணினி மாணவியும், கோயிலுக்குள் ஒரு பூசகரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனித்தனியாக மபுகாரளித்தனர். இரு பெண்களும் கோவாவின் போண்டாவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட கோயில் பூசகர், தனஞ்சய் பாவே, மீது சூலை 20, 2018 அன்று [5] இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சூலை 2018 நிலவரப்படி, அவர் தலைமறைவாக உள்ளார். மேலும், வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 2017 இல், மாற்றுத் திறனாளியான ஒரு சிறுமிக்கு மங்கேசிக் கோயிலுக்குள் நுழைவதற்கு நிர்வாகம் மறுத்துவிட்டது. அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியதால் “சக்கர நாற்காலி ஒரு வாகனம் என்பதாலும், கோயிலுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை” என்ற நிர்வாம் கூறியது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 இன் கீழ் சிறுமியின் குடும்பத்தினரால் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Department of Tourism, Government of Goa, India - Maguesh Temple, Priol". Archived from the original on 2019-09-11. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  2. Goa temple bans entry of foreigners, others impose dress code
  3. Teotonio R. De Souza (1 January 1989). Essays in Goan History. Concept Publishing Company. pp. 20–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-263-7.
  4. Baidyanath Saraswati (1984). The Spectrum of the Sacred: Essays on the Religious Traditions of India. Concept Publishing Company. pp. 138–. GGKEY:SPH4CJ0Y60Z.
  5. Goa 365 TV (2018-07-20), Molestation in Mangeshi temple by a Pujari?, பார்க்கப்பட்ட நாள் 2018-07-22{{citation}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mangueshi Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கேசி_கோயில்&oldid=3779768" இலிருந்து மீள்விக்கப்பட்டது