மங்கலம்குன்னு கர்ணன்
மங்கலம்குன்னு கர்ணன் | |
---|---|
இனம் | ஆசிய யானை |
பால் | ஆண் |
பிறப்பு | 1957–1961 பீகார் |
இறப்பு | 28 சனவரி 2021 (வயது 60-63) மங்கலம்குன்னு, ஒற்றப்பாலம் |
நாடு | இந்தியா |
செயற்பட்ட ஆண்டுகள் | 1990-2019 |
அறியப்படுவதற்கான காரணம் | திருச்சூர் பூரம், பிற பூரங்கள், தலப்போக்கம் |
உரிமையாளர் | மங்கலம்குன்னு குடும்பம் (தரவாடு) |
உயரம் | 2.98 m (9 அடி 9 அங்) |
Named after | கர்ணன் |
மங்கலம்குன்னு கர்ணன் ( Mangalamkunnu Karnan ; சுமார் 1956 - 28 சனவரி 2021) என்பது மங்கலம்குன்னு குடும்பத்திற்கு (தரவாடு) சொந்தமான யானையாகும். கேரளாவில் குருவாயூர் தேவஸ்வதிற்கு அடுத்து இக்குடும்பம் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பிடிக்கப்பட்ட யானைகளை வைத்திருக்கிறது. [1] கர்ணன் நீண்ட நேரம் தலையை உயர்த்தும் திறனுக்காக அறியப்பட்டது. [2] இதனால் கேரளா முழுவதும் நடந்த பல தலப்போக்கம் (தலை உயர்த்தும்) போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது [3] [4] இதற்கு நிலாவின் தம்புரான் என்று பெயர் சூட்டப்பட்டது. இது உயரங்களின் பேரரசர் என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [5] கேரளாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட பிரபல யானைகளில் கர்ணனும் ஒன்றாகும். [6]
மறைந்த மங்கலம்குன்னு கணபதி, மங்கலம்குன்னு கர்ணன் மற்றும் மங்கலம்குன்னு அய்யப்பன் ஆகிய மூன்று யானைகளும் தரவாடுகளில் மிகவும் பிரபலமானவை. [7] 1989இல், மணிச்சேரி அரிதாசு குழுவால் பீகாரிலுள்ள சப்ராவிலிருந்து கர்ணன் கேரளாவிற்கு கொண்டுவரப்பட்டது. 2000இல் மங்கலம்குன்னு குடும்பம் கர்ணனை விலைக்கு வாங்கியது. [8] தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சிறீகுமார விநாயகர் கோவிலில் நடந்த தலப்போக்கம் போட்டியில் கர்ணன் பட்டம் வென்றது. [9] இந்த யானை சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளது. [10] மலையாளத் திரைப்படங்களான நரசிம்மம் , கதா நாயகன் , பாலிவுட் திரைப்படமான தில் சே போன்றத் திரைப்படங்களில் இது தோன்றியுள்ளது. [11] தனது 60வது வயது முதல் வயது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த கர்ணன் 63 வயதில் 28 சனவரி 2021 அன்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது. [12] [13] [14] [15]
சான்றுகள்
[தொகு]- ↑ WakeupMedia (2018-05-01). "മംഗലാംകുന്ന് കർണ്ണൻ". wakeUpMedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ "Popular elephant Karnan, known for its 'raised head', dies at 65 in Kerala - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ ഹരിഗോവിന്ദന്, -വി. "Mangalamkunnu Karnan as the emperor of the heights". Mathrubhumi (in மலையாளம்). Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ "കേരളത്തിലെ ഗജരാജാക്കന്മാർ". Janam TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ "ആനകളുടെ തലയെടുപ്പിലെ രാജാവ്, മംഗലാംകുന്ന് കര്ണ്ണന് ചരിഞ്ഞു". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "Elephant lovers mourn death of popular Kerala tusker Mangalamkunnu Karnan". The News Minute (in ஆங்கிலம்). 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "മംഗലാംകുന്ന് കര്ണ്ണന് - Mangalamkunnu Karnan". The Bearded Traveller - vallappura.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ Prabhakaran, G. (2013-08-01). "Rejuvenation time for elephants" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/rejuvenation-time-for-elephants/article4977341.ece.
- ↑ "Kerala: No lockdown misery for Mangalamkunnu elephants - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ Unknown (2013-11-14). "GAJALOKAM: മംഗലാംകുന്ന് കര്ണന്". GAJALOKAM. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ "ഷാരൂഖിനും മോഹന്ലാലിനുമൊപ്പം സിനിമകളില് താരമായ മംഗലാംകുന്ന് കര്ണന്". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "Mangalamkunnu Karnan passes away". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "ആനപ്രേമികളുടെ പ്രിയങ്കരൻ മംഗലാംകുന്ന് കർണൻ ചരിഞ്ഞു". www.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "Noted Kerala tusker Mangalamkunnu Karnan's death leaves many teary-eyed". Manorama. 2021-01-29. https://www.onmanorama.com/news/kerala/2021/01/29/kerala-tusker-mangalamkunnu-karnan-dies.html.
- ↑ "Mangalamkunnu Karnan dies at 60". Kaumudi. 2021-01-28. https://keralakaumudi.com/en/news/news.php?id=480744&u=mangalamkunnu-karnan-dies-at-60-480744.