போன்யா அகமது
போன்யா அகமது Bonya Ahmed | |
---|---|
রাফিদা আহমেদ বন্যা | |
2018 ஆம் ஆண்டு மாநாட்டில் போன்யா அகமது பேசுகிறார் . | |
தாய்மொழியில் பெயர் | রাফিদা আহমেদ বন্যা |
பிறப்பு | இரபிதா போன்யா அகமது 1969 (அகவை 54–55) டாக்கா, வங்காளதேசம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மினசோட்டா மாநிலப் பல்கலைக் கழகம், மேங்கேட்டோ |
வாழ்க்கைத் துணை | அவிசித் ராய் |
இரபிதா போன்யா அகமது (Rafida Bonya Ahmed) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளராவார். இவருடைய புனைபெயர் போன்யா அகமது என்பதாகும். 1969 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[1] வங்கதேச -அமெரிக்க எழுத்தாளரான இவர், மனிதநேய ஆர்வலராகவும் வலைப் பதிவர் ஆகவும் இயங்குகிறார்.[2]
சுயசரிதை
[தொகு]இரபிதா போன்யா அகமது வங்காளதேசத்தின் தலைநகரமான டாக்காவில் பிறந்தார். அமெரிக்காவின் மேங்கேட்டோ நகரத்தில் அமைந்துள்ள மினசோட்டா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணினி தகவல் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பை இவர் முடித்தார்.
வங்காள மொழி பேசும் சுதந்திர சிந்தனையாளர்கள், நாத்திகர்களுக்காக அவிசித்து நிறுவிய மதச்சார்பற்ற பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான முதல் இணையதள தளமான முக்தோ-மோனாவின் எழுத்து மூலம் இரபிதா தனது கணவர் அவிசித்து ராயை சந்தித்தார். இந்த குழு வங்காளதேசத்தில் டார்வின் தினத்தை முதல் கொண்டாட்டமாகத் தொடங்கியது.[2] முக்தோ-மோனா 2015 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாப்சு நடுவர் விருதைப் பெற்றது.[3] இரபிதா அகமது பரிணாம வளர்ச்சியின் பாதையில் 2007 என்ற பெயரில் பைபார்டோனர் பாத் தோர் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். இது வங்காள தேசத்தின் உயிரியல் பரிணாம வளர்ச்சி பற்றிய முதல் பிரபலமான அறிவியல் புத்தகங்களில் ஒன்றாகும்.[4] இரபிதா முக்தோ-மோனாவின் நடுவர்கல் குழுவில் ஒருவராக இருந்தார். .
இரபிதாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் திரிசா அகமது என்ற மகள் உள்ளார். சிறையில் இருக்கும் மதச்சார்பற்ற வலைப்பதிவர்கள் பற்றி பிரி இங்குயரி என்ற இதழுக்காக இரபிதா தனது மாற்றுத்தந்தை அவிசித்துடன் சேர்ந்து ஒரு கட்டுரை எழுதினார்.[5] இரபிதாவுக்கு 2011 ஆம் ஆன்டு தைராய்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. விரிவான சிகிச்சைக்குப் பிறகு இவருக்கு நிவாரணம் கிடைத்தது.[6]
26 பிப்ரவரி 2015 அன்று, இரபிதா மற்றும் ராய் ஆகியோர் ஒரு புத்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்காக மேற்கொண்ட பயணத்தில் டாக்காவுக்குச் சென்றபோது கத்தியை ஏந்திய இசுலாமிய தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர். மிகவும் நெரிசலான புத்தகக் கண்காட்சியில் இவர்கள் நடுத்தெருவில் தாக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு ராய் இறந்தார், இரபிதா பலத்த காயமடைந்தார்.[7][8]
தாக்குதலுக்குப் பிறகு தன்னுடைய வேலையில் இருந்து விடுப்பு எடுப்பது என்றும் அமெரிக்காவில் தகவல் சேகரிக்கும் முகமையில் ஒரு மூத்த இயக்குனராக வேலையில் சேர்வது சிறந்தது என முடிவெடுத்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள மனிதநேய சங்க அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். மனிதநேய இசுலாமிய அடிப்படைவாதிகள் வங்காளத்திலுள்ள மதச்சார்பற்ற அறிஞர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவது பற்றிய உயர் விழிப்புணர்வை உண்டாக்குவது இவர்களின் நோக்கமாகும்.[6] அதே ஆண்டு சூலை மாதத்தில் பிரித்தானிய மனிதநேய சங்கத்தில் அவ்வுறுப்பினர்களிடையே விரிவுரை .[9] ஒன்றை நிகழ்த்தினார்,
இவர் தற்போது ஆசுடினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் ஆராய்ச்சி அறிஞராக இசுலாமிய அடிப்படைவாதம் குறித்த ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறார். மதம் அறக்கட்டளையின் பார்வர்டு விருதை 2016 ஆம் ஆண்டு இவர் பெற்றார்.[10] டாய்ச் வெல்லேயின் தி பாப்சு பெசுட்டு ஆப் ஆன்லைன் செயற்பாட்டு விருது வழங்கும் நடுவர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[11]
20 ஏப்ரல் 2018 அன்று இரபிதா எக்சிடெரில் ஒரு சொற்பொழிவைக் கொடுத்தார். அதில் 2015 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து எப்படி மீண்டார் என்பதை விவரித்தார்.[12]
2019 ஆம் ஆண்டில் இரபிதா போன்யா அகமது இணைந்து திங்க் என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். எதிர்காலத்தில் அதிக மொழிகளுடன் வெளியிடப்படும் நோக்கத்துடன் பங்களா மற்றும் ஆங்கில மொழிக் கல்வி காணொளிகளை திங்க் அமைப்பு உருவாக்குகிறது. உலகெங்கிலும் அறிவியல் அறிவையும் மனிதநேய மதிப்பீடுகளையும் பரப்புவதே திங்கின் குறிக்கோளாகும்.
படைப்புகள் மற்றும் செயல்பாடுகள்
[தொகு]- பைபோர்ட்டோனர் பாத் தோர் ("பரிணாம பாதையுடன்"), 2007, அப்சார் பிரகாசனி, டாக்கா.
- பேனாக்களுடன் அரிவாள்கள் சண்டை", வோல்டேர் விரிவுரை 2015.
- போன்யா அகமது ஐநா குழுவில் "பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவுக்கு கொண்டுவருதல்.
- டாம் லாண்டோசு மனித உரிமைகள் ஆணையம் வங்காள தேசத்தில் மனித உரிமைகள் பற்றி சுருக்கமாக.
- ஆர்வார்டு மனிதநேய மையத்தில் பேச்சு
- ரீசன் பேரணி 2016 இல் முக்கிய உரை.
- அமெரிக்க மனிதநேய சங்கத்தின் வருடாந்திர மாநாடு 2016 இல் பேச்சு.
- மதச்சார்பின்மை மாநாடு 2016 இல் 4 ஆவது பெண்ணாக விரிவுரை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bonya Ahmed's blogs in Mukto-Mona BengaliEnglish பரணிடப்பட்டது 2019-07-24 at the வந்தவழி இயந்திரம் blogs.
- ↑ 2.0 2.1 "Machetes fail to maim this human spirit". 4 July 2015."Machetes fail to maim this human spirit". 4 July 2015.
- ↑ The Bobs Best of Online Activism Award, 2015 பரணிடப்பட்டது 2018-03-10 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ [বিবর্তনের পথ ধরে https://www.goodreads.com/book/show/17675963] at GoodReads.
- ↑ Sun, Baltimore. "Johns Hopkins student is daughter of blogger slain in Bangladesh".
- ↑ 6.0 6.1 Ahmed, Trisha. "Murdered blogger's daughter inspired by dad". CNN.Ahmed, Trisha. "Murdered blogger's daughter inspired by dad". CNN.
- ↑ US-Bangladesh blogger Avijit Roy hacked to death, BBC News, 27 February 2015.
- ↑ Widow of blogger Avijit Roy defiant after Bangladesh attack, BBC News, 10 March 2015.
- ↑ "Attacked Bangladeshi humanist blogger Bonya Ahmed delivers 2015 Voltaire Lecture". British Humanist Association. 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.
- ↑ Freedom from Religion Foundation’s 39th National Convention in Pittsburgh பரணிடப்பட்டது 2017-02-12 at the வந்தவழி இயந்திரம், IHEU.
- ↑ "The BOBS award, list of juries". Archived from the original on 2018-03-10. பார்க்கப்பட்ட நாள் 2017-02-12.
- ↑ Priyanka Dasgupta (12 March 2018). "Might is right is the only language we have reverted to as a society: Rafida Bonya Ahmed". Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/might-is-right-is-the-only-language-we-have-reverted-to-as-a-society-rafida-bonya-ahmed/articleshow/63260016.cms. பார்த்த நாள்: 27 September 2019.
புற இணைப்புகள்
[தொகு]- Profile on Mukto-Mona பரணிடப்பட்டது 2019-07-24 at the வந்தவழி இயந்திரம்
- Bonya Ahmed's blog
- Bonya Ahmed on Facebook
- பொதுவகத்தில் போன்யா அகமது தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.