உள்ளடக்கத்துக்குச் செல்

பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை
பெயர் மூலம் அடோல்ப் வோன் பேயர்
அடோல்ப் எம்மெர்லிங்கு
வினையின் வகை வளையம் உருவாகும் வினை

பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை (Baeyer–Emmerling indole synthesis) என்பது இண்டோலை தயாரிக்க உதவும் ஒரு முறையாகும். பதிலீடு செய்யப்பட்ட ஆர்த்தோ-நைட்ரோசின்னமிக் அமிலத்துடன் வலிமையான காரக்கரைசலில் உள்ள இரும்புத்தூளைச் சேர்த்து வினைபுரியச் செய்து இம்முறையில் இண்டோல் தயாரிக்கப்படுகிறது [1][2]. 1869 ஆம் ஆண்டு அடோல்ப் வோன் பேயரும் அடோல்ப் எம்மெர்லிங்கும் இவ்வினையைக் கண்டறிந்தனர் [3][4]

பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை

வினைவழிமுறை

[தொகு]

ஆர்த்தோ-நைட்ரோசின்னமிக் அமிலத்துடன் இரும்புத்தூள் வினைபுரியும் போது நைட்ரோ குழு நைட்ரோசொ குழுவாக ஒடுக்கமடைகிறது. நைட்ரசன் அதன் பின்னர் ஆல்க்கீன் சங்கிலியின் மேல் ஒரு மூலக்கூறு நீரை இழந்து ஒரு கார்பனுடன் ஒடுக்கமடைந்து வளையமாகிறது. கிறது. கார்பாக்சில் நீக்கம் ஏற்பட்டு இண்டோல் உருவாகிறது.

பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினையின் வினைவழிமுறை
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினையின் வினைவழிமுறை

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bayer, A.; Emmerling, A. (1869). "Synthese des indoles". Berichte der deutschen chemischen Gesellschaft 2 (1): 679–682. doi:10.1002/cber.186900201268. 
  2. Baeyer 5 பரணிடப்பட்டது 2007-08-16 at the வந்தவழி இயந்திரம். Pmf.ukim.edu.mk (1997-07-30). Retrieved on 2014-01-10.
  3. Chamberlain, Joseph Scudder (1921). A Textbook of Organic Chemistry. Blakiston. p. 874.
  4. Lockyer, Sir Norman (1881). "Indigo and its Artificial Production". Nature 24 (610): 227. doi:10.1038/024227c0. Bibcode: 1881Natur..24..227H. https://books.google.com/books?id=TMMKAAAAYAAJ&pg=PA229.