உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தஞ்சைப் பெருவுடையார் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Notes - Slaves who built the temple

[தொகு]

An example is the Big Temple of Tanjavur, the symbol of Chola might and cultural efflorescence. "Everytime I walked in the precincts of that magnificent temple, I felt this tremendous thrill of pride and wonder - until I learnt how many people had starved and suffered hardship to build the monument," said Kanimozhi. "Six out of seven brothers who rebelled against a diktat that they work for free, when they sought work to beat starvation, were killed and they belonged to a particular, exploited community. This side of history has been handed down to us via folk songs."

http://www.chowk.com/show_article.cgi?aid=00006633&channel=leafyglade inn

நற்கீரன், சோழர் சம்பந்தப்பட்ட பல விடயங்களில் அடிமைகள் என்பதைத் தொடர்பு படுத்தி நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதாகத் தெரிகிறது. உங்களது மேற்கோளில் அடிமை என்ற சொல் எங்கும் காணப்படவில்லை. சோழர் காலத்தில் அடிமைமுறை இருக்கவில்லை என்றோ சோழர்கள் புனிதர்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால், அடிமை முறையோ அல்லது மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கும் முறைகளோ சோழர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ மட்டும் உரியவை அல்ல. பண்டைய உலகின் மிகப் பெரிய, கட்டிடங்கள், அணைகள், குளங்கள் போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் இவ்வாறான முறைகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்டவையே. உண்மையில், இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டிடங்களுக்கான பெருமைகளின் பெரும்பகுதி இவ்வாறு உயிரைக் கொடுத்து அவற்றைக் கட்டிய மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்வாறு அவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதற்குப் பாடுபடுவதை விடுத்து, அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களையே சிறுமைப்படுத்த முயல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தமிழர் பகுதிகளில் கட்டிடக்கலை போன்ற விடயங்களை உச்ச நிலைக்கு வளர்த்து எடுப்பதில், இவற்றோடு சம்பந்தப்பட்ட, பல தரப்பினருக்கும் உள்ள பங்கையும் மறுப்பதற்கு இல்லை. இவ் வளர்ச்சிக்கு உரிய சூழலை அமைத்துக் கொடுப்பதில் அக்கால அரசர்களுக்கும் பங்கு உண்டு.
ஏதோ இன்று மேடைகளிலே பேசுகிறவர்கள், தற்காலத்தில் நிலைமை சீர்திருந்தி விட்டதாக எண்ணிக்கொண்டு பேசுகிறார்களோ தெரியவில்லை. எவ்வளவோ வசதிகள் பெருகியுள்ள இக்காலத்திலும், கட்டுமானத் தொழிலாளர்களுடைய நிலைமை எவ்வாறுள்ளது? ஒவ்வொரு பெரிய கட்டுமானத் திட்டத்தின் பின்னணியிலும் எவ்வளவு சோகம் உள்ளது, எத்தனை கூலித் தொழிலாளர்கள் உயிரைக் கொடுக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்திய சம்பவங்களில் குற்றம் பிடிக்க முயல்பவர்கள், இப்பொழுது நடக்கும் சம்பவங்களில் ஏன் கண்ணை மூடிக்கொள்கிறார்கள். முதலமைச்சர் மக்களுக்கு அளித்த கட்டிடம், அமைச்சர் நாட்டுக்குக் கொடுத்த பஸ்தரிப்பு நிலையம் என்றுதான் பேசுகிறார்களேயொழிய, கருப்பாயி உயிரைக்கொடுத்துக் கட்டிய கட்டிடம் என்று ஏன் சொல்வதில்லை. உண்மையில் மக்களுக்கு நியாயம் வேண்டும் என்று நினைப்பவர்கள்,மேடைகளில், சேரனையும், சோழனையும், பாண்டியனையும் திட்டுவதை விடுத்து, அவர்கள் கண் முன்னே நடப்பவற்றில் கவனம் செலுத்தவேண்டும். Mayooranathan 07:10, 19 ஜனவரி 2007 (UTC)


மயூரநாதன், தற்போது நிலைமை மாறிவிட்டதாக நான் கருதவில்லை. ஆனால் வரலாற்றை நாம் சரியாக பார்க்க வேண்டு. இன்றைய நிலைக்கு வரலாறும், நாம் எப்படி வரலாற்றை நோக்குகின்றோம் என்பதும் இரு முக்கிய காரணிகள். எப்படி எமது கதையாடல்கள் அமைகின்றன என்பதில் எமது தற்காலத்தின் போக்குக்களும் தங்கியுள்ளன.

"உண்மையில், இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டிடங்களுக்கான பெருமைகளின் பெரும்பகுதி இவ்வாறு உயிரைக் கொடுத்து அவற்றைக் கட்டிய மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு கிடையாது." இதில் ஒருவன் அரசனாகவும், மற்றவன் அடிமையாக்வும் இருந்தான். ஒருவன் சுரண்டப்பட்டு உயிர்கொடுத்தான். இதை எப்படி சமமாக பார்க்கின்றீர்களோ எனக்கு தெரியாது. குறைந்தபட்சம், இந்தக் கட்டிடங்கள் பொது சொத்தாக அமையவேண்டும். இது நாம் வரலாற்றை எப்படி சொல்கின்றோம் என்பதில்தான் தங்கியிருக்கின்றது.

பெரிய கட்டிங்களை கட்டக்கூடிய உருவமைக்கப்பட்ட சூழலில் அரசனுடைய பங்கு என்னவென்பதைவிட, ஒரு மனிதன் சுரண்டப்பட்டான் என்பது எனக்கு முக்கிய கேள்வியாக தெரிகின்றது. பொதுச் சொத்தாக்குவதால் அரசனும் அடிமையும் சமம் என்று நாம் கருத முடியாது. இது ஒரு அடிப்படை பொருளாதாரக் கேள்வி. ஆனால் விடை இலகுவல்ல. எனவே தகுந்த இடங்களில் முன்வைப்பது தேவையே என்று நினைக்கின்றேன்.

"பண்டைய உலகின் மிகப் பெரிய, கட்டிடங்கள், அணைகள், குளங்கள் போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் இவ்வாறான முறைகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்டவையே." கொடுமை, கொடுமை, கொடுமை. வேறென மாதிரி நாம் அவற்றை விபரிக்க முடியும். நாம் எவ்வளவு உச்சங்களைத் தொடுகின்றோம் என்பதும் நாம் எவ்வாறு உச்சங்களைத் தொட வழிப்படுகின்றோம் என்பதும் இணைக்கப்பட்ட கேள்விகளே. முடிவுகள் வழிமுறைகளை முற்றாக நியாப்படுத்தாது.

அடிமை முறை தமிழருக்கு மட்டும் உரியதல்ல என்பது நான் நன்கு அறிவேன். பொதுவாக ஒரு இனத்தின் குறைகள் பிற இனங்களிடமும் இருக்கும்.

"இப்பொழுது நடக்கும் சம்பவங்களில் ஏன் கண்ணை மூடிக்கொள்கிறார்கள்?" இக்கேள்வியை நீங்களும் நானும் சேர்த்து கேட்டுக்கொள்வதே பொருத்தம் என்று நினைக்கின்றேன். இன்று யார் சோழர் பரம்பரை என்கிறார்களோ, அவர்கள் சோழர் எனப்படுவது ஒரு அரச பரம்பரை, ஒரு அதிகார பரம்பரை என்பதை இலகுவில் மறந்துவிடுகின்றார்கள். நாம் கூலிகள் பரம்பரை என்று கூறுவது பொருந்துமா. தெரியவில்லை. உழைப்பில் இழுக்கேதும் இல்லை. ஆனால் சுரண்டப்படுவது சுரண்டுபவனின் குற்றம் மட்டும்மில்லை, அதை எதிர்காமல் ஏற்பவனின் குறையும்தான்.

"உண்மையில் மக்களுக்கு நியாயம் வேண்டும் என்று நினைப்பவர்கள்,மேடைகளில், சேரனையும், சோழனையும், பாண்டியனையும் திட்டுவதை விடுத்து, அவர்கள் கண் முன்னே நடப்பவற்றில் கவனம் செலுத்தவேண்டும்." அதையே நான் சற்று மாற்றிச் சொல்ல விரும்புகின்றேன். உண்மையில் மக்களுக்கு நியாயம் வேண்டும் என்று நினைப்பவர்கள்,மேடைகளில், சேரனையும், சோழனையும், பாண்டியனையும் புகழ்வதை விடுத்து, அவர்கள் கண் முன்னே நடப்பவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

--Natkeeran 16:18, 20 ஜனவரி 2007 (UTC)

மன்னிக்க வேண்டும் நக்கீரன், நான் எழுதிய பதில் நீங்கள் கொடுத்துள்ள மேற்கோளில் சம்பந்தப்பட்டவரின் கருத்துக்குக் கொடுத்த பதில் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை நான் முன்னரிருந்த அரச பரம்பரையினருக்கோ அல்லது தற்காலத்து ஆளும் வர்க்கத்துக்கோ சாமரம் வீசுபவன் அல்ல. ஆனால், கண்முன்னே நடைபெறும் அநியாயங்களை கண்டும் காணாமல் விட்டுக்கொண்டு இறந்து பட்டுப் போனவர்களை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை நான் நியாயமாகக் கருதுவதில்லை.
Everytime I walked in the precincts of that magnificent temple, I felt this tremendous thrill of pride and wonder - until I learnt how many people had starved and suffered hardship to build the monument
இதனுடைய பொருள் என்னவாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?. தஞ்சாவூர்க் கோயிலுக்குள் போகும்போது வெட்கப்படவேண்டும் என்பதாக இருக்குமோ? அப்படித்தான் என்றால் இன்றைக்கு வீதியில் நடந்து போகும்போது கூட வெட்கப்பட்டுக்கொண்டுதான் நடந்து போக வேண்டும், ஏனெனில், வீதி அமைப்பின்போதும் எத்தனையோ ஊழல்களும், சுரண்டல்களும் நடந்து கொண்டுதான் வருகின்றன. Mayooranathan 17:38, 20 ஜனவரி 2007 (UTC)

கனிமொழி என்பவர் யார் என்பதே எனக்கு சமீபத்தில்தான் தெரியும். குறைந்த பட்சம் அவருக்கும் அந்தளவிலாவது ஒரு பார்வை விரிப்பு இருப்பதை வரவேற்பதா அல்லது ஏன் இன்றைய குறைகளைக் காணத் தவறுகின்றார் என்று விசனப்படுவதா என்பது குறித்து நான் அவ்வளவு அலட்டிகொள்ளவில்லை. அவருடைய கருத்தின் உட்பொருள் குறித்தும் அவ்வளவு அலசவில்லை. நான் குறுப்பெடுத்தது தகவலையே. அதன் பின்னரே (குறிப்பாக நீங்கள் சுட்டிய பின்பு) அது யாரால் சொல்லப்பட்டது, அதன் அரசியல் பின்னணியின் முரண்பாடு பற்றி சற்று அவதானித்தேன்.

கோயிலுக்கு போகும்பொழுது நாம் வெக்கப்பட வேண்டுமா என்பது எனக்கு தெரியாது. கிட்டலர் கட்டிய கட்டிடங்களும் அழகானவை, கட்டிடக்கலைக்குச் சிறப்பானவை. ஆனால், அதைக் கிட்டலர் அடிமைகளின் உழைப்பைச் சுரண்டி கட்டுவித்தான் என்பதை நாம் மறைப்பதோ அல்லது மறப்பதாதோ எமக்கு ஆரோக்கியமானதல்ல. அதற்காக சோழர்களை கிட்லரோடு ஒப்பிடவில்லை. வரலாற்றை அதன் பல முகம்களின் ஊடாக குறித்து வைப்பது நன்று என்றே நினைக்கின்றேன்.

இன்று ஒரு அணை பல இலட்சம் மக்களின் வாழ்க்கையை சீரழித்து கட்டப்படுகின்றது என்றால், இன்று மோல்கள் பிறரின் சுரண்டலில் எழுப்பப்படுகின்றது என்றால், இன்று வீதிகள் சுரண்டலிலும் ஊழலும் கட்டப்படுகின்றது என்றால் நாம் வெக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும். வேறு எவ்வாறு நோக்கலாம் என்று நீங்கள் கருத்துகின்றீர்கள்.

இதுதான் ஒரு வித உலகவழி என்று ஒத்துப்போகலாம்தான், அதைத்தானே நாம் பலரும் நன்றாக செய்கின்றோமே.

உங்களைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க வேண்டும் என்று நான் முயலவில்லை. ஆனால் நீங்களும் சில வேளைகளில் ஏன் அந்த அடித்தள பார்வையையும் தர தவறிவிடுகின்றீர்கள் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அதேவேளை இது பல மட்டங்களில், நிலைகளில் நடைபெற வேண்டிய உரையாடல் என்பதையும் நான் இங்கு உணர்கின்றேன். இதைப் பற்றி இராம.கி. அவர்களில் சில குறிப்புகள் http://valavu.blogspot.com/2006/12/2.html இங்கு பொருந்தும்.

--Natkeeran 18:59, 20 ஜனவரி 2007 (UTC)

தஞ்சைப் பெரிய கோயில்

[தொகு]

தஞ்சைப் பெரிய கோயில் - இப் பெயரே வழக்கத்தில் இருப்பது போலத் தெரிகின்றது. அப்பெயருக்கு மாற்றினால் யாருக்காவது ஆட்சோபனை உண்டா? --Natkeeran 03:28, 19 ஜனவரி 2007 (UTC)

தஞ்சைப் பிருஹதீஸ்வரர் கோயிலுக்கு, இராஜராஜேஸ்வரம், தஞ்சைப் பெருவுடையார் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் முதலிய பல பெயர்கள் வழங்கிவருகின்றன. இராஜராஜேஸ்வரம் (அல்லது இராசராசேச்சுரம்), பெருவுடையார் கோயில் ஆகிய பெயர்களே பல கல்வெட்டுக்களிலும் காணப்படுவதாகத் தெரிகிறது. அத்துடன் இன்றும் பெருவுடையார் கோயில் என்ற பெயர் வழங்கி வருகின்றது. எனவே, தஞ்சைப் பெருவுடையார் கோயில் எனப் பெயரை மாற்றலாம் என்பது எனது கருத்து. Mayooranathan 05:57, 19 ஜனவரி 2007 (UTC)
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்ற பெயரை முதன்மைப்படுத்தி மற்ற இரண்டையும் வழிமாற்றலாம்.--Kanags 06:39, 19 ஜனவரி 2007 (UTC)
மயூரநாதன், கனக்ஸ் ஆகியோர் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். --Natkeeran 16:22, 20 ஜனவரி 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:32, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பேச்சு:தஞ்சை பிரகதீசுவரர் கோயில்

[தொகு]

சேர்க்கலாம் இது பல கட்டுரைகள் ஆங்கில கடடுரையில் இணைக்காமல் வைக்கப்பட்டுள்ளது. தயவு செயது அவற்றை அங்கங்கே இணைக்கவும், தேவையில்லாமல் ஒரு பயனரின் தட்டச்சை வீணாக்காமல் இருக்கலாமல்லவா. இன்று இது இரண்டாவது முறை. பல கட்டுரைகள் இணைக்கபாடாமல் இருப்பது. இருமுறை ஒரு செயலை செய்யவைக்கின்றது. இது செய்யாமல் தவிர்க்கலாம்.--செல்வம் தமிழ் 12:11, 10 ஜூன் 2009 (UTC)

செல்வம், தமிழில் தானியங்கிகள் இல்லாமை பெரும் குறை. சுந்தர் முன்னர் தனது தானியங்கியை இயக்கினார். எவ்வாறு தானியங்கியை உருவாக்குவது எனத் தெரிந்தால் இயக்கலாம். இப்போதைக்கு புதிய கட்டுரைகளை எழுதுபவர்கள் மறக்காமல் அவற்றின் ஆங்கிலக் கட்டுரைகளுக்கு (இருந்தால்) இணைப்புக் கொடுக்க வேண்டும். இதனான் ஏனைய பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தலாம். நன்றி.--Kanags \பேச்சு 12:22, 10 ஜூன் 2009 (UTC)
கனகு, அந்தத் தானியங்கி திறமூலத்தில் இடப்பட்ட பைவிக்கிப்பீடியாபாட்டு (Pywikipediabot) ஆகும். நேரமும் சில மணிநேரத் தொடர் இணைய அணுக்கமும் கிடைக்கையில் மீண்டும் இயக்குகிறேன். வேறு சிலரும் தானியங்கிகளைப் பதிவு செய்து இயக்கலாம். -- சுந்தர் \பேச்சு 06:37, 12 ஜூன் 2009 (UTC)

கனக் அந்த தலைப்பு சரியா என்று தெரியவில்லை. பிரகதீசுவரர் என்று வைக்கலாம் அல்லது பெரிய கோயில் என்று வைக்கலாம் என நினைக்கின்றேன். கோயில் புத்தகத்திலும் அப்படித்தான் உள்ளது.--செல்வம் தமிழ் 12:27, 10 ஜூன் 2009 (UTC)

நான் தேடுபொறியில் தேடும்பொழுது கிடைக்கவில்லை. தலைப்பு வேறாக இருப்பதினால் இருக்கலாம்.--செல்வம் தமிழ் 12:29, 10 ஜூன் 2009 (UTC)

பெயர்

[தொகு]

இதன் பெயரை (மேலுள்ள பேச்சு இணக்கத்துக்கமைய) மீண்டும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என மாற்றக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 10:20, 12 ஜூன் 2009 (UTC)

இதை தஞ்சை பெரிய கோயில் என்று மாற்றினால் அது அனைவருக்கும் பொதுவாகவும் அதிகாரப்பூர்வமாகவும் அமையும். தாங்கள் குறிப்பிட்ட பெயரை மூலவராக குறிப்பிட்டுள்ளோம். தவிர த.பெருவுடையார்.கோ பெரும்பாலும் யாரும் அறியாதது. இலக்கியத்தில மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இன்னொன்றையும் வெளிப்படையாக சாதி.... குறிப்பதால் ஆனால் உண்மையில் அந்த பொருளல்ல. அதனாலேயே அதை தவிர்க்கலாம். பொதுவாக த.பெரிய.கோ என உலகத்தாருக்கும் பொருந்துமாறு வைத்துள்ளனர். கோயில் பெயர்கள் அனைத்தும் வ....மொழி சார்ந்து இருப்பது காலத்தினால் விளைந்தது. அதனாலேயே அரசும் இதில் பொதுவானப் பெயர்களை அனைத்து மக்களையும் அரவணைப்பதற்காக கடவுள் பெயர்களும் அப்படியே வைத்துள்ளது. உள்ளே மூலவருக்கு மாற்றிக்கொள்ளலாம்.

த.பெருவுடையார்.கோ இந்த பெயரில் தலைப்பிடப்பட்டு இல்லை ஆனால் குறிப்பிடப்பட்டுள்ளது அதுவும் கோயில் பெயராக இராசேச்சரம் என்று கோயில் வரலாறு தளத்தில் உள்ளது. மற்றபடி அந்த பெயர் எனக்கு பிடித்தப்பெயர்தான். அவற்றை தலைப்பில் இடாமல் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. த.பெரிய கோயில் நிறைய ஆதாரங்கள் உள்ளது. நன்றி. இது பற்றி அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.இரண்டு (த.பிரகதீசுவரர் கோ, த.பெரிய கோயில்) பெயர்களுக்கும் ஆதாரம் கொடுத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட பெயரும் இந்த பொருளைத் தான் உணர்த்துகின்றது.--செல்வம் தமிழ் 14:59, 21 ஜூன் 2009 (UTC)

10 நூற்றாண்டுப் பெருவிழா

[தொகு]

பெரிய கோவிலைச் சுற்றி ஏகப்பட்ட மர்மக் கதைகள் இருக்கின்றன. சில மூட நம்பிக்கைகளும் கூட. நிழல் விலாத கோபுரம் போன்றவை. பிறகு வளரும் நந்தி இவற்றைப் பற்றி தனி பத்தி அமைக்கலாம்.

10 நூற்றாண்டுகளை கடந்துவிட்டமையை தனி பத்தியாக அமைத்தால் நன்றாக இருக்கும். பெருவுடையாரை உடையார் ஜாதி எனக் குறிப்பிடுவதாக எண்ணி குழம்ப வேண்டாம். லிங்கத் திருமேனி உடையார் என வழங்கப்படுகிறது.

பெரிய கோவில்களைப் பற்றி இன்னும் எழுதப்பட வேண்டியவை நிறைய இருக்கின்றன. கீழே இருக்கும் சுட்டிகளை கவணத்தில் எடுத்து அன்பர்கள் வடிவமைக்கவும். http://www.poetryinstone.in/lang/ta/tag/big-temple/page/1

http://www.poetryinstone.in/lang/ta/tag/big-temple/page/2

http://www.poetryinstone.in/lang/ta/tag/big-temple/page/3

http://sagotharan.wordpress.com/2010/02/19/பெரிய-கோவிலின்-சிறப்புக்/

http://sagotharan.wordpress.com/2010/02/19/பத்து-நூற்றாண்டைக்-கடந்த/

http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw&feature=related

http://www.youtube.com/watch?v=cruwhRpBcwo&feature=fvw

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு


-

கட்டுமானக் காலம் - முரண்

[தொகு]

//7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது// என்பது சரி எனில்,

//1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட // என்ற தகவல் 5 ஆண்டுகளைக் குறிப்பது முரண்பாடாக உள்ளது. சரியான தகவல் அறிந்தவர்கள் ஆதாரத்தை மேற்கோளிட்டுத் திருத்தவும்.

Ernesto Balaji 04:14, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முதல்வரியில் குழப்பம்

[தொகு]

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்[1] அல்லது தஞ்சை பெரிய கோயில்[2] ஆகும்.

தஞ்சை பெரிய கோவில் என்பது வடமொழியல்லவே? தக்க விளக்கமில்லையெனில் அந்தவரியை கட்டுரையிலும் முதல் பக்கத்திலும் திருத்தவேண்டும். -- சுந்தர் \பேச்சு 14:18, 27 பெப்ரவரி 2015 (UTC)

தலைப்பை மாற்றுக

[தொகு]

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதே பிரகதீஸ்வரர் கோவிலின் மெய்யான தமிழ்ப் பெயராகும். ஆனால், ஏன் பிரகதீஸ்வரர் என்ற பெயரே தொடர்கின்றது. தமிழில் ஏற்கனவே பெயர் இருந்தால் அதனையே பயன்படுத்தலாமே. --விண்ணன் (பேச்சு) 02:55, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

[தொகு]