பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
பெர்மாத்தாங் பாவ் (P044) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Permatang Pauh (P044) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | மத்திய செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு |
வாக்காளர் தொகுதி | பெர்மாத்தாங் பாவ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெர்மாத்தாங் பாவ் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 107,186[1] |
தொகுதி பரப்பளவு | 98 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Permatang Pauh; ஆங்கிலம்: Permatang Pauh Federal Constituency; சீனம்: 峇东埔联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P044) ஆகும்.[3]
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
பொது
[தொகு]பெர்மாத்தாங் பாவ் நகரம்
[தொகு]பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் பெர்மாத்தாங் பாவ் நகரம் அமைந்துள்ளது. பட்டர்வொர்த் நகரில் இருந்து கிழக்கே 5 கி.மீ.; புக்கிட் மெர்தாஜாம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கடலோர நிலப் பகுதியாகும்.
இங்கு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknologi MARA); செபராங் பிறை பல்நுட்பியல் கல்லூரி (Politeknik Seberang Perai); ஆகிய கல்விக் கழகங்கள் உள்ளன.[5] பெர்மாத்தாங் பாவ் நகரம் மலேசியாவின் மிக நீளமான விரைவுச் சாலைக்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கெப்பாலா பத்தாஸ் ஆகிய நகரங்களுக்கு இடையில் பெர்மாத்தாங் பாவ் நகரம் அமைந்துள்ளது.
அரசியல் தாக்கங்கள்
[தொகு]மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியாக பெர்மாத்தாங் பாவ் தொகுதி அறியப்படுகிறது. முதன்முதலில் 1982-ஆம் ஆண்டில் அன்வர் இப்ராகீம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- 1982-1986 (முதலாம் தவணை)
- 1986-1990 (இரண்டாம் தவணை)
- 1990-1995 (மூன்றாம் தவணை)
- 1995-1998 (நான்காம் தவணை)
ஆகிய நான்கு தவணைகள்; மற்றும் 1998-1999-ஆம் ஆண்டில் சுயேச்சையாக ஓர் ஆண்டு பொறுப்பு வகித்தார்.
1999-ஆம் ஆண்டில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரையிலும், அவருடைய மனைவி வான் அசிசா வான் இசுமாயில் பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தம்முடைய கணவர் அன்வர் இப்ராகீம் அவர்களுக்காக, தம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பு செய்தார். அதே ஆண்டில் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் 11,721 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
நூருல் இசா அன்வார்
[தொகு]2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் அவர்களின் மகள் நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) பாக்காத்தான் கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எனினும் 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நூருல் இசா அன்வார் 5,272 வாக்குகளில் இந்தத் தொகுதியில் முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) எனும் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
பெர்மாத்தாங் பாவ் வாக்குச் சாவடிகள்
[தொகு]2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
செபராங் ஜெயா (Seberang Jaya) (N10) |
Jalan Sembilang | 044/10/01 | SMK Seberang Jaya |
Seberang Jaya II | 044/10/02 | SK Seberang Jaya 2 | |
Kampong Pertama | 044/10/03 | SK Permatang To Kandu | |
Kampong Belah Dua | 044/10/04 | SMK Pauh Jaya | |
Seberang Jaya I | 044/10/05 | SK Seberang Jaya | |
Jalan Bahru | 044/10/06 | SK Jalan Bahru Perai | |
Simpang Ampat | 044/10/07 | SMK Permatang Rawa | |
Jalan Tuna | 044/10/08 | SK Seberang Jaya 2 | |
Taman Tun Hussein Onn | 044/10/09 | SMK Tun Hussein Onn | |
பெர்மாத்தாங் பாசீர் (Permatang Pasir) (N11) |
Sama Gagah | 044/11/01 | SMK Sama Gagah |
Permatang Ara | 044/11/02 | SK Permatang Pasir | |
Permatang Pauh | 044/11/03 | SK Permatang Pauh | |
Bukit Indra Muda | 044/11/04 | SK Bukit Indera Muda | |
Kampong Pelet | 044/11/05 | SJK (C) Kubang Semang | |
Kubang Semang | 044/11/06 | SK Seri Penanti | |
Tanah Liat Mukim 8 | 044/11/07 | SK Seri Penanti | |
Kampong Cross Street 2 | 044/11/08 | SM Islam Al-Masriyah | |
Permatang Pauh | 044/11/09 | SJK (C) Lay Keow | |
பெனாந்தி (Penanti) (N12) |
Guar Perahu | 044/12/01 | SMK Guar Perahu |
Kuala Mengkuang | 044/12/02 |
| |
Telok Wang | 044/12/03 | Dewan Orang Ramai Kampong Tun Sardon Ara Kuda | |
Mengkuang | 044/12/04 | SK Mengkuang | |
Sungai Lembu | 044/12/05 | SJK (C) Kg. Sg. Lembu | |
Penanti | 044/12/06 | SMK Mengkuang | |
Kubang Ulu | 044/12/07 | SMK Penanti | |
Sungai Semambu | 044/12/08 | SK Tanah Liat | |
Tanah Liat Mukim 9 | 044/12/09 | SK Tanah Liat | |
Berapit Road | 044/12/10 |
|
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
[தொகு]பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி | |
செபராங் தெங்கா (Seberang Tengah) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P037 | 1974–1978 | அரிபின் தாவூது (Ariffin Md Daud) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | சபிடி அலி (Zabidi Ali) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | அன்வார் இப்ராகிம் (Anwar Ibrahim) |
பாரிசான் நேசனல் | |
7-ஆவது மக்களவை | P041 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P044 | 1995–1998 | ||
1998–1999 | சுயேச்சை | |||
1999 | காலி | |||
10-ஆவது மக்களவை | 1999–2004 | வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) |
மாற்று முன்னணி (கெஅடிலான்) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | (மக்கள் நீதிக் கட்சி) | ||
12-ஆவது மக்களவை | 2008 | பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | ||
2008–2013 | அன்வார் இப்ராகிம் (Anwar Ibrahim) | |||
13-ஆவது மக்களவை | 2013–2015 | |||
2015–2018 | வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பெர்மாத்தாங் பாவ் தேர்தல் முடிவுகள்
[தொகு]பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
107,186 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
88,254 | 82.34% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
87,448 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
158 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
648 | - |
பெரும்பான்மை (Majority) |
5,272 | 6.03% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Penang |
பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) |
பெரிக்காத்தான் | 37,638 | 43.04% | 43.04 | |
நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) |
பாக்காத்தான் | 32,366 | 37.01% | -13.88 ▼ | |
முகமது சாயிடி முகமது சாயிட் (Mohd Zaidi Mohd Zaid) |
பாரிசான் | 16,971 | 19.41% | -9.04 ▼ | |
முகமது நாசிர் ஒசுமான் (Mohamad Nasir Osman) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 473 | 0.54% | -0.54 ▼ |
பெர்மாத்தாங் பாவ் சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P043 பெர்மாத்தாங் பாவ் |
குபாங் செமாங் | ||||||
பெனாந்தி | |||||||
பெர்மாத்தாங் பாசீர் | |||||||
செபராங் ஜெயா | |||||||
சுங்கை டுவா |
பெர்மாத்தாங் பாவ் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
[தொகு]எண் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N10 | செபராங் ஜெயா (Seberang Jaya) |
-காலி- | |
N11 | பெர்மாத்தாங் பாசீர் (Permatang Pasir) |
முகமது பயிசு பட்சில் (Muhammad Faiz Fadzil) |
பாக்காத்தான் (அமாணா) |
N12 | பெனாந்தி (Penanti) |
நோர் லேலா (Norlela Ariffin) |
பாக்காத்தான் (பிகேஆர்) |
பெர்மாத்தாங் பாவ் தேர்தல்கள் 1969 - 2008
[தொகு]1969-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் விவரங்கள்:
- குறிப்பு (இ.தே) - இடைத் தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Seberang Perai Polytechnic was established on 1st September 1998 at the Jalan Permatang Pauh, Pulau Pinang.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)