பெய்கிங் கோளரங்கம்
Appearance
பெய்கிங் கோளரங்கம் (Beijing Planetarium, சீனம்: 北京天文馆/北京天文館) சீனாவின் பெய்கிங் நகரில் அமைந்துள்ள தேசிய அளவிலான இயற்கை அறிவியியல் அருங்காட்சியகம் ஆகும்[1].
இந்த கோளரங்கில் ஏ, பி என்று பெயரிடப்பட்ட இரண்டு பிரதான கட்டிடங்கள் உள்ளன. கட்டிடம் ஏ 1957 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும். இக்கட்டிடத்தில் வானக திரையரங்கு ஒன்றும், கிழக்கு கண்காட்சி மண்டபம், மேற்கு கண்காட்சி மண்டபம் போன்றவை இடம்பெற்றுள்ளன. சீனாவில் பேரளவில் அமைக்கப்பட்ட முதலாவது கோளரங்கம் இதுவாகும். பெய்கிங் கோளரங்கம் ஒரு காலத்தில் ஆசியாவில் அமைந்திருந்த ஒரே கோளரங்கமாகவும் விளங்கியது.[1]
எண்மிய விண்வெளித் திரையரங்கு, முப்பரிமானத் திரையரங்கு நான்கு பரிமானத் திரையரங்கு, பல்வேறு கண்காட்சி அரங்குகள், இரண்டு வான் ஆய்வகங்கள் முதலியன பி கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளன[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Introduction to Beijing Planetarium from its official website பரணிடப்பட்டது சனவரி 4, 2011 at the வந்தவழி இயந்திரம்
புற இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2017-09-24 at the வந்தவழி இயந்திரம்.