உள்ளடக்கத்துக்குச் செல்

பெயின்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெயின்ட்

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
விண்டோசு 7இல் பெயின்ட்
Details
வகைபடிமப் பூச்சுச் செயலி
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
மைக்ரோசாப்டு விண்டோசின் அனைத்துப் பதிப்புகளும்
Related components
இமேசிங்கு உவோர் விண்டோசு, விண்டோசு உவோட்டோ கேலரி

பெயின்ட் அல்லது மைக்குரோசாபுட்டு பெயின்ட் அல்லது எம். எசு. பெயின்ட் அல்லது பெயிண்டுபிரசு (Paint அல்லது Microsoft Paint அல்லது MS Paint அல்லது Paintbrush) என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசின் அனைத்துப் பதிப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள எளிய வரைகலைப் பூச்சு மென்பொருள் ஆகும்.[1] விண்டோசு இருமி வரைபடம் (ஒரு நிற இருமி வரைபடம், 16 நிற இருமி வரைபடம், 256 நிற இருமி வரைபடம், 24-இருமி இருமி வரைபடம் ஆகிய சேமிப்பு வகைகளில் .bmp, .dib ஆகிய நீட்சிகளுடன்), ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம் (பெயின்ட் மென்பொருளில் அசைவூட்டம், ஒளி புகாநிலை ஆகியவை இன்றியே வரைகலைப் பரிமாற்ற வடிவத்தைத் திறக்கவோ சேமிக்கவோ முடியும். அத்துடன், பெயின்ட் மென்பொருளின் விண்டோசு 98 பதிப்பு, விண்டோசு 95 நிகழ்நிலைப்படுத்தற்பதிப்பு, விண்டோசு என். தி. 4.0 பதிப்பு ஆகியவை கூட வரைகலைப் பரிமாற்ற வடிவத்தை ஏற்பதில்லை.), பெயரத்தகு வலையமைப்பு வரைகலை (ஒளிக்கசிவு அலைவரிசையின்றி), இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு (பல்பக்க ஏற்பின்றி) ஆகிய சேமிப்பு வகைகளில் அமைந்த கோப்புகளைப் பெயின்ட் திறக்கவுஞ்சேமிக்கவுஞ்செய்யும். பெயின்ட் மென்பொருளை நிற முறையிலோ இரு நிறக் கறுப்பு வெள்ளை முறையிலோ பயன்படுத்த முடியும். இம்மென்பொருளில் சாம்பலளவீட்டு முறையில்லை. பெயின்ட் மென்பொருள், அதனுடைய எளிமை காரணமாக, விரைவாக விண்டோசின் தொடக்கப் பதிப்புகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் செயலிகளுள் ஒன்றாக இடம்பெற்று, கணினியொன்றில் வரைவதைப் பலருக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.

வரலாறு

[தொகு]

தொடக்கப் பதிப்புகள்

[தொகு]

விண்டோசின் முதற்பதிப்பான விண்டோசு 1.0இலேயே பெயின்ட் மென்பொருளின் முதற்பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[2] அது சீசாவுட்டுக் கூட்டு நிறுவனத்தின் பி. சி. பெயிண்டுபிரசு மென்பொருளின் உரிமம் பெற்ற பதிப்பாக இருந்தது. பின்னர், விண்டோசு 3.0இல் இம்மென்பொருளின் பெயர் பெயிண்டுபிரசு என்று மாற்றப்பட்டாலும் விண்டோசு 95இலும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் மறுபடியும் இதனுடைய பெயர் பெயின்ட் என்றே பயன்படுத்தப்படுகின்றது.[3] மேற்கூறிய பதிப்பு மைக்குரோசாபுட்டு பெயின்ட் கோப்புகளையும் இருமி வரைபடக் கோப்புகளையும் மட்டுமே ஏற்றது.

விண்டோசு 95இலிருந்து விண்டோசு எக்கு. பி. வரை

[தொகு]

விண்டோசு 95இல் பெயின்ட் மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு எக்கு. பி. வரை அப்பதிப்பின் படவுருக்களும் நிறத்தட்டுமே பயன்படுத்தப்பட்டன. விண்டோசு 95இலும் விண்டோசு என். தி. 4.0இலும் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் பதிப்பில் Colors எனும் பட்டியில் Save colors, Get colors ஆகிய தெரிவுகளைப் பயன்படுத்தி நிறத்தட்டுக் கோப்புகளைச் (.pal) சேமிக்கவோ நிறங்களின் தனிப்பயன் தொகுதியை ஏற்றவோ கூடியதாகவிருந்தது. படிமங்களின் நிற ஆழம் படவணுவுக்கு 16 இருமிகளாகவோ உயர்நிறமாகவோ (64 கிலோ நிறங்கள்) இருந்தால் மட்டுமே இத்தெரிவுகளைப் பயன்படுத்தக் கூடியதாகவிருந்தது.

விண்டோசு 98, விண்டோசு 2000, விண்டோசு மில்லேனியம் ஆகிய இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் மைக்குரோசாபுட்டு ஆபிசு அல்லது மைக்குரோசாபுட்டு உவோட்டோடிரா போன்ற இன்னொரு மைக்குரோசாபுட்டுச் செயலியால் தேவையான மைக்குரோசாபுட்டு வரைகலை வடிகட்டிகள் நிறுவப்பட்டிருந்த நிலையிலே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளிலே கோப்புகளைச் சேமிக்கக்கூடியதாகவிருந்தது. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு மில்லேனியம் (விண்டோசு 2000 பதிப்பு விண்டோசு மில்லேனியத்திற்கு முதலே வெளியிடப்பட்டது.) பதிப்பிலிருந்து பெரிய படிமங்கள் திறக்கப்பட்டாலோ ஒட்டப்பட்டாலோ பயனரைக் கேட்காமலேயே வடிவமைக்கும் திரையின் அளவு தானியங்கு முறையில் பெரிதாகும் வசதி சேர்க்கப்பட்டது.

விண்டோசு எக்கு. பி. இயங்குதளத்திலும் அதற்குப் பிற்பட்ட விண்டோசு இயங்குதளங்களிலும் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் பதிப்புகள் வரைகலைக் கருவி இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், பெயின்ட் மென்பொருளிலேயே இன்னுங்கூடிய வரைகலை வடிகட்டிகளை வேண்டாமல் ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு, பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளில் படிமங்களைச் சேமிக்க முடிகிறது. மேலும் படிம வருடியிலிருந்தோ இலக்க முறைப் படக்கருவியிலிருந்தோ படிமங்களை உள்ளிடும் வசதியும் பெயின்ட் மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெயின்ட் மென்பொருளின் வரைகலைக் கருவி இடைமுகப் பதிப்பால் 24-இருமி ஆழமுள்ள படிமங்களையே கையாள முடியுமென்பதால் ஒளிக்கசிவு அலைவரிசை ஒளிபுகாநிலைக்கான ஏற்பு இன்னும் வழங்கப்படவில்லை.

விண்டோசு விசிட்டா

[தொகு]

விண்டோசு விசிட்டாவில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் கருவிப் பட்டைப் படவுருக்களும் நிறத்தட்டும் மாற்றப்பட்டன.[4] அத்துடன், 10 தடவைகள் வரையில் செயல்தவிர்த்தற்செயன்முறையையும் செய்யும் வசதி வழங்கப்பட்டதுடன், நுனிவெட்டுதல் வசதி, பெரிதாக்கும் வழுக்கி ஆகிய வசதிகளும் இணைக்கப்பட்டன. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு விசிட்டாப் பதிப்பு இயல்பாகவே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு வடிவமைப்பில் படிமங்களைச் சேமித்தது. அத்துடன் அப்பதிப்பிற்பயன்படுத்தப்படும் இழப்புச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வசதியைத் தரப்படாததால் படிமத்தின் தரம் நயநுணுக்கமாகக் குறையும் வாய்ப்பும் உள்ளது.

விண்டோசு 7

[தொகு]

விண்டோசு 7இல் பெயின்ட் மென்பொருளின் இடைமுகம் ஆபிசு 2010 பாணியிலமைந்த நாடா வரைகலைப் பயனர் இடைமுகமாக மாற்றப்பட்டது.[5] அத்துடன், மேலும் இயல்பான ஓவியத்தைத் தருவதற்காகப் பெயின்ட் கருவிகளில் பல்வேறு சாயல்களில் வேறுபட்ட ஒளிபுகாநிலைகளைக் கொண்ட பல்வகைப்பட்ட கலைநயத் தூரிகைகளும் இணைக்கப்பட்டுள்ளன.[6] பெயின்ட் மென்பொருளின் இப்பதிப்பில் உண்மைநிலையை மேம்படுத்துவதற்காக, எண்ணெய்த் தூரிகையும் நீர்நிறத் தூரிகையும் பயனர் மீண்டும் ஒரு முறை சொடுக்கும் வரை சிறிது தூரத்துக்கே வரையும் தன்மை கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன (ஓவியத் தூரிகையில் நிறப்பூச்சு முடிந்ததாக ஒரு மாய உணர்ச்சியை இது உருவாக்குகின்றது.). அத்துடன், வேறொரு கருவி தெரிவு செய்யப்பட்டு, வரைகலை பரவப்படும் வரையில் தன்விருப்பமாக மறு அளவிடக்கூடிய வடிவங்களையும் கொண்டுள்ளது. இப்பதிப்பில் ஒளிபுகா பெயரத்தகு வலையமைப்பு வரைகலை, படவுரு ஆகிய கோப்பு வடிவங்களைத் திறக்கக்கூடியதாக (மேற்கூறிய வடிவங்களிற்சேமிக்க முடியாது.) உள்ளதுடன், இப்பதிப்பு அவற்றைப் பெயரத்தகு வலையமைப்பு வரைகலை வடிவமாக இயல்பு நிலையிற்சேமிக்கிறது. ஒரு வடிவத்தை வரைந்த பின்னர், அதனைப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்குவதற்கான தெரிவும் விண்டோசு 7இன் பெயின்ட் மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் குறிப்பிட்ட உரையைக் காட்டுவதற்குப் போதிய இடமில்லாத உரைப் பெட்டிகளினுள்ளும் பெரிய உரையை ஒட்ட முடிகின்றது. தேவைப்பட்டால் உரைக்குப் பொருத்தமான அளவில் உரைப் பெட்டியைப் பெரிதாக்குவதன் மூலமோ மறு அளவிடுவதன் மூலமோ உரைப் பெட்டியினுள் உரையைப் பொருத்த முடியும். ஆனால், விண்டோசு 7இற்கு முந்தைய பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் மென்பொருட்களோ பயனரொருவர் உரைப் பெட்டியினுளுள்ள இடத்தை விடக் கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளும் உரையை ஒட்ட முயன்றால் பிழைச் செய்தியொன்றைக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய பதிப்புகளில் 100%இலும் கூடுதலாகக் காட்சியைப் பெரிதாக்கியவுடன் சாளரத்தை உருட்ட முடியாமல் நீண்ட காலமாக இருந்து வந்த பாதிப்பை விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பு ஓரளவு சரிசெய்திருக்கின்றது. ஆனாலும் பெருப்பித்த காட்சியில் உரையை உள்ளிடும்போது பெருப்பித்த காட்சிக்கு அப்பாலுள்ள பகுதிக்குச் சுட்டி மூலமோ விசைப்பலகை மூலமோ திரையையோ உரையையோ நகர்த்த முடியாது. ஏனெனில், அப்போது உரைச் சாளரம் தொகுத்தல் முறையில் உள்ளதால் உருள்பட்டிகள் செயலிழந்திருக்கும்.

வசதிகள்

[தொகு]

விண்டோசு விசிட்டா

[தொகு]

விண்டோசு விசிட்டாவின் பெயின்ட் பதிப்பு அதற்கு முந்தைய பதிப்புகளைப் பெரிதும் ஒத்திருந்தாலும் அப்பதிப்பில் செயல்தவிர் ஆளியை பத்துத் தடவைகள் வரையில் சொடுக்க முடியும் (முன்பு மூன்று தடவைகளே சொடுக்க முடியும்.). அத்துடன், அப்பதிப்பு நிறத்தட்டில் இடமிருந்து வலமாகப் பின்வரும் 28 நிறங்களைக் கொண்டுள்ளது: கறுப்பு, சாம்பல்-80%, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், தங்கம், மஞ்சள், எலுமிச்சை, பச்சை, நீலப் பச்சை, நீலம், கருநீலம், நாவல், தாழை மலர், நீலம்-சாம்பல், நீலம் (மெல்லியதாகச் சாம்பல்), வெளிர் நீலப் பச்சை, இடலைப் பச்சை, வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் (வெளிர் நிறம் கூட), வெளிர் மஞ்சள், வெளிர் செம்மஞ்சள், குருதிச் செந்நிறம், பழுப்பு, சாம்பல்-25%, சாம்பல்-25% (வெளிர் சாம்பல்), வெள்ளை

விண்டோசு 7

[தொகு]

விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பானது முகப்பு, காட்சி, உரை ஆகிய தத்தல்களின் கீழ் இடமிருந்து வலமாகப் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது.[7] இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெயின்ட் மென்பொருளில் படிமங்களை ஆக்கவோ படிமங்களில் மாற்றங்களைச் செய்யவோ முடியும்.

  • முகப்பு
    • நகலகம்
      • ஒட்டு
        • ஒட்டு
        • இதிலிருந்து ஒட்டு
      • வெட்டு
      • நகலெடு
    • படிமம்
      • தேர்ந்தெடு
        • வடிவங்கள் தேர்வு
          • செவ்வகத் தேர்வு
          • கட்டற்ற தேர்வு
        • விருப்பங்கள் தேர்வு
          • எல்லாம் தேர்ந்தெடு
          • தேர்வைத் தலைகீழாக்கு
          • நீக்கு
          • ஒளிஊடுருவக்கூடிய தேர்வு
      • நுனிவெட்டு
      • மறு அளவிடு
      • சுழற்று
        • வலதுபுறமாக 90° சுழற்று
        • இடதுபுறமாக 90° சுழற்று
        • 180° சுழற்று
        • செங்குத்தாக திருப்பு
        • கிடைமட்டமாக திருப்பு
    • கருவிகள்
      • பென்சில்
      • வண்ணத்தால் நிரப்பு
      • உரை
      • அழிப்பான்
      • வண்ணத் தேர்வு
      • உருப்பெருக்கி
    • பிரஷ்கள்
      • பிரஷ்
      • காலிகிராஃபி பிரஷ் 1
      • காலிகிராஃபி பிரஷ் 2
      • ஏர்பிரஷ்
      • ஆயில் பிரஷ்
      • கிரேயான்
      • மார்க்கர்
      • சாதாரண பென்சில்
      • வாட்டர்கலர் பிரஷ்
    • வடிவங்கள்
      • வடிவப் பெட்டி
        • தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.
        • தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு வளைக்கோட்டை வரைகிறது.
        • ஓவல்
        • செவ்வகம்
        • வட்ட செவ்வகம்
        • பலகோணம்
        • முக்கோணம்
        • செங்கோண முக்கோணம்
        • டைமண்ட்
        • ஐங்கோணம்
        • அறுகோணம்
        • வலதுபுற அம்பு
        • இடதுபுற அம்பு
        • மேல்நோக்கிய அம்பு
        • கீழ்நோக்கிய அம்பு
        • நான்கு புள்ளி நட்சத்திரம்
        • ஐந்து புள்ளி நட்சத்திரம்
        • ஆறுபுள்ளி நட்சத்திரம்
        • வட்ட செங்கோண கால்அவுட்
        • ஓவல் கால்அவுட்
        • முகில் கால்அவுட்
        • இருதயம்
        • மின்னல்
      • வெளிவரை
        • வரைவெல்லை இல்லை
        • திட வண்ணம்
        • கிரேயான்
        • மார்க்கர்
        • ஆயில்
        • இயல்பான பென்சில்
        • வெளிர்வண்ணம்
      • நிரப்பு
        • நிரப்பு இல்லை
        • திட வண்ணம்
        • கிரேயான்
        • மார்க்கர்
        • ஆயில்
        • இயல்பான பென்சில்
        • வெளிர்வண்ணம்
    • அளவு
      • 1px
      • 3px
      • 5px
      • 8px
    • வண்ணங்கள்
      • வண்ணம் 1
      • வண்ணம் 2
      • வண்ணத் தட்டு
        • கறுப்பு
        • சாம்பல்-50%
        • அடர் சிவப்பு
        • சிவப்பு
        • ஆரஞ்சு
        • மஞ்சள்
        • பச்சை
        • டர்க்கோய்ஸ்
        • இன்டிகோ
        • பர்ப்பிள்
        • வெள்ளை
        • சாம்பல்-25%
        • பழுப்பு
        • ரோஸ்
        • தங்கம்
        • வெளிர் மஞ்சள்
        • எலுமிச்சை
        • வெளிர் டர்க்கோய்ஸ்
        • நீலம்-சாம்பல்
        • தாழம்பூ
      • வண்ணங்களைத் திருத்து
  • காட்சி
    • பெரிதாக்கு
      • இன்னும் பெரிதாக்கு
      • இன்னும் சிறிதாக்கு
      • 100%
    • காண்பி அல்லது மறை
      • வரைகோல்கள்
      • கம்பிக்கோடுகள்
      • நிலைப் பட்டி
    • காட்சி
      • முழுத்திரை
      • சிறு உருவம்
  • உரை
    • நகலகம்
      • ஒட்டு
      • வெட்டு
      • நகலெடு
    • எழுத்துரு
      • எழுத்துருக் குடும்பம் (எ-டு: Calibri)
      • எழுத்துரு அளவு (எ-டு: 11)
      • தடித்த
      • சாய்ந்த
      • அடிக்கோடு
      • அடித்தம்
    • பின்புலம்
      • இருட்டு
      • ஒளிஊடுருவுதன்மை
    • வண்ணங்கள்
      • வண்ணம் 1
      • வண்ணம் 2
      • வண்ணத் தட்டு
        • கறுப்பு
        • சாம்பல்-50%
        • அடர் சிவப்பு
        • சிவப்பு
        • ஆரஞ்சு
        • மஞ்சள்
        • பச்சை
        • டர்க்கோய்ஸ்
        • இன்டிகோ
        • பர்ப்பிள்
        • வெள்ளை
        • சாம்பல்-25%
        • பழுப்பு
        • ரோஸ்
        • தங்கம்
        • வெளிர் மஞ்சள்
        • எலுமிச்சை
        • வெளிர் டர்க்கோய்ஸ்
        • நீலம்-சாம்பல்
        • தாழம்பூ
      • வண்ணங்களை மாற்று

[8]

விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பின் பணியிடத்தில் 20 நிறங்கள் உள்ளன. முகப்பு என்ற தத்தலின் கீழ் வண்ணங்கள் பகுதியில் அமைந்துள்ள இயல்புநிலை நிறங்கள் இடமிருந்து வலமாகப் பின்வருமாறு: கறுப்பு, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலப் பச்சை, கருநீலம், நாவல், வெள்ளை, சாம்பல்-25%, பழுப்பு, குருதிச் செந்நிறம், தங்கம், வெளிர் மஞ்சள், எலுமிச்சை, வெளிர் நீலப் பச்சை, நீலம்-சாம்பல், தாழை மலர். அத்துடன், வண்ணங்களைத் திருத்து என்னும் பகுதியிலுள்ள நிறத் தட்டிலுள்ள நிறங்களை உள்ளிடுவதனூடாக மேற்கூறிய நிறங்களுக்குக் கீழேயும் மேலும் பத்து நிறங்களைக் கொண்டு வர முடியும்.

பெயின்ட் மென்பொருளில் ஓவியரொருவரால் வரையக் கூடிய படத்துக்கு எடுத்துக்காட்டொன்று

மேலும் கட்டுப்பாட்டு விசையுடனும் மாற்று விசையுடனும் பேரெழுத்து Iஐ அழுத்துவதனூடாகப் படிமத்தின் நிறங்களை நேர்மாறாக்க முடியும்.

மொத்தமாக

[தொகு]

உதவிக் கோப்பிற்குறிப்பிடப்படாத முத்திரை முறை, செல்தட முறை, ஒழுங்கான வடிவங்கள், படங்களை நகர்த்துதல் ஆகிய சில மறைக்கப்பட்ட செயற்பாடுகளையும் பெயின்ட் கொண்டுள்ளது. முத்திரை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயனர் தேர்ந்தெடு என்ற தெரிவின் மூலம் படிமத்தின் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டு விசையை அழுத்திக் கொண்டு, திரையின் இன்னொரு பகுதிக்கு நகர்த்திப் படியெடுக்க முடியும். இதன்போது குறிப்பிட்ட பகுதி வெட்டப்படுவதில்லை; படியொன்று உருவாக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டு விசை அழுத்தப்பட்டிருக்கும் வரை இச்செயன்முறையை விரும்பிய எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் செய்ய முடியும். செல்தட முறையையும் முத்திரை முறையைப் போலவே செயற்படுத்தலாம். ஆனால், செல்தட முறையில் கட்டுப்பாட்டு விசைக்குப் பதிலாக மாற்று விசை பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் பயனரொருவர் தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது என்ற கருவியைப் பயன்படுத்துவதற்கான தேவையின்றியே பென்சில் என்ற தெரிவை மாற்று விசையை அழுத்திக் கொண்டு பயன்படுத்தி (வலது சொடுக்கலுடன் இழுத்து) நேராக, கிடையாக, செங்குத்தாகச் சீரான கோடுகளை வரைய முடியும். மேலும் பென்சில் என்ற கருவியின் மூலம் கோட்டை வரைய முன்போ வரைந்து கொண்டிருக்கும்போதோ அக்கோட்டைத் தடிப்பாக்கவோ (கட்டுப்பாட்டு விசை எண் விசைத்தள ) மெல்லியதாக்கவோ (கட்டுப்பாட்டு விசை எண் விசைத்தள -) முடியும்.

படவணு ஓவியத்தை உருவாக்குவதற்கும் பெயின்ட் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மைக்குரோசாபுட்டு பெயின்ட் மேலோட்டம் (ஆங்கில மொழியில்)
  2. விண்டோசு 1.0-பூசு(தல்) (ஆங்கில மொழியில்)
  3. மைக்ரோசாபுட்டு விண்டோசு 3.0 திரைக்காட்சிகள் (ஆங்கில மொழியில்)
  4. விண்டோசு 7 முதற்பார்வை: மைக்ரோசாப்டு பெயின்ட் (ஆங்கில மொழியில்)
  5. "சுருக்கம்: விண்டோசு 7 பெயின்ட்டில் நாடா உள்ளடக்கப்பட்டுள்ளது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2008-09-21. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.(ஆங்கில மொழியில்)&rft_id=http://www.withinwindows.com/2008/09/16/short-ribbon-implemented-in-windows-7-paint/&rfr_id=info:sid/ta.wikipedia.org:பெயின்ட்" class="Z3988">
  6. பெயின்ட் (ஆங்கில மொழியில்)
  7. பெயின்ட்டைப் பயன்படுத்துதல் (ஆங்கில மொழியில்)
  8. ["கருவிகளைப் பயன்படுத்தவும் விண்டோசு 7இற்கான மைக்ரோசாப்டு பெயின்ட்டின் மூலம் படங்களை உருவாக்கவும் கற்கவும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.(ஆங்கில மொழியில்)&rft_id=http://fay.iniminimo.com/paint7.html&rfr_id=info:sid/ta.wikipedia.org:பெயின்ட்" class="Z3988"> கருவிகளைப் பயன்படுத்தவும் விண்டோசு 7இற்கான மைக்ரோசாப்டு பெயின்ட்டின் மூலம் படங்களை உருவாக்கவும் கற்கவும் (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயின்ட்&oldid=3679848" இலிருந்து மீள்விக்கப்பட்டது