பெட்ரோனாஸ்
வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 17 ஆகத்து 1974 |
தலைமையகம் | பெட்ரோனாஸ் கோபுரங்கள் கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | Tengku Muhammad Taufik Tengku Aziz, Group CEO and President |
தொழில்துறை | பெட்ரோலியம் மற்றும் கனிவளம் |
உற்பத்திகள் | எரிபொருள் இயற்கை எரிவளி பாறைவேதிப்பொருள் |
வருமானம் | அமெரிக்க டாலர் US$73.01 பில்லியன் (2023)[1] |
இயக்க வருமானம் | அமெரிக்க டாலர் US$30.08 பில்லியன் (2022) |
நிகர வருமானம் | அமெரிக்க டாலர் US$17.15 பில்லியன் (2023) |
மொத்தச் சொத்துகள் | அமெரிக்க டாலர் US$164.40 பில்லியன் (2023) [2] |
மொத்த பங்குத்தொகை | அமெரிக்க டாலர் US$94.28 பில்லியன் (2023) |
பணியாளர் | 47,669 (2020)[3] |
இணையத்தளம் | www.petronas.com.my |
பெட்ரோலியம் நேசனல் பெர்காட் (மலாய்:Petroliam Nasional Berhad; ஆங்கிலம்: National Petroleum Limited), சுருக்கமாக பெட்ரோனாசு, என்பது ஆகத்து 17, 1974-இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் கனிவள நிறுவனமாகும்.
இந்த நிறுவனம், முற்றிலும் மலேசிய அரசாங்கத்திற்கு உரிமையான அரசு நிறுவனம் ஆகும். பெட்ரோனாஸ் நிறுவனம், நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பராமரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
பொது
[தொகு]பார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், பெட்ரோனாஸ் நிறுவனம் 2022-ஆம் ஆண்டில் 216-ஆவதாகவும், 2021-ஆம் ஆண்டில் 277-ஆவதாகவும் இடம்பெற்றுள்ளது.[4][5]
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ், அமெரிக்க டாலர் US$152.50 பில்லியன் (ரிங்கிட் RM679.70 பில்லியன்) மொத்த சொத்துக்களைக் கொண்டுள்ளது; மற்றும் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு (2023) வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Petronas Annual Report FY 2016". 14 March 2017.
- ↑ "Petronas posts RM3.4 billion net loss in Q3 on assets impairment". 27 November 2020.
- ↑ "Petronas". owler.
- ↑ "Petronas' 2022 Fortune Global 500 rises to 216 from 277 in 2021". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.
- ↑ "PETRONAS ranking rises to 216 in Fortune Global 500 list". The Star (in ஆங்கிலம்). 4 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.