பெஞ்சமின் ஆர்தர் பென்சிலி
Appearance
பெஞ்சமின் ஆர்தர் பென்சிலி (Benjamin Arthur Bensley) கனடாவைச் சேர்ந்த ஒரு பாலூட்டியியல் அறிஞராவார். வயிற்றுப்பையில் குட்டியைப் பேணும் உயிரினங்கள் தொடர்பான சிறப்பான ஆராய்ச்சிப் பணி மற்றும் முயலின் நடைமுறை உடற்கூறியல் தொடர்பான ஒரு தரமான உரை ஆகிய பனிகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம் 1875 முதல் 1934 வரையுள்ள காலமாகும். ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பென்சிலி அதே பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். 1913 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்ட ராயல் ஒண்டாரியோ விலங்கியல் அருங்காட்சியகத்தின் முதலாவது இயக்குனராக பெஞ்சமின் ஆர்தர் பென்சிலி நியமிக்கப்பட்டார். [1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Snyder, L.L. (14 August 1936). "Benjamin Arthur Bensley". Journal of Mammalogy 17 (3): 312–313. doi:10.2307/1374436. http://wp.biota.utoronto.ca/thebrodieclub/files/2013/01/obit-Bensley.pdf. பார்த்த நாள்: 4 மே 2020.
- ↑ Lovat, Dickson (1986). The museum makers: the story of the Royal Ontario Museum. Toronto, ON: Royal Ontario Museum. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88854-326-3.