உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்காலி சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்காலி சந்தை (Bengali Market) புது தில்லி நகரிலுள்ள மிகவும் பழமையான மற்றும் பிரபலமான சந்தைகளில் ஒன்றாகும். பங்காளி பேரங்காடிச் சந்தை என்பது இச்சந்தையின் உண்மையான பெயர் ஆகும். காலப்போக்கில் இச்சந்தை பெங்காலி சந்தை என்ற எளிமையான பொதுப் பெயராக மாறிவிட்டது. மேற்கு வங்காளத்திற்கும் இச்சந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திரிவேணி கலா சங்கம் மற்றும் மந்தி இல்லம் போன்ற அண்டை குடியிருப்பு பகுதிகளையும் இச்சந்தைப் பகுதி குறிக்கிறது. கன்னாட்டு பிளேசு, புது தில்லி பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கலாச்சார மையமாகவும் இப்பகுதி விளங்குகிறது. 1930 இல் பெங்காலி மால் லோகியாவால் இச்சந்தை கட்டப்பட்டது[1]. பல கடைகளை உள்ளடக்கி ஒரு போக்குவரத்து வளைவைச் சுற்றி வட்ட முறையில் அமைந்துள்ள ஒரு சிறிய சந்தையாக இது அமைந்துள்ளது. தற்பொழுது வட இந்திய நடைபாதை உணவுக்கும் பெங்காலி வகை இனிப்புகளுக்கும் சிறந்த இடமாக இப்பகுதி பிரபலமடைந்துள்ளது[2][3]

போக்குவரத்து

[தொகு]

பெங்காலி சந்தைக்கு அருகிலுள்ள தில்லி மெட்ரோ இரயில் நிலையம் மந்தி அவுசு இரயில் நிலையமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bengali Market India9.
  2. "Bengali Sweet House". Trip Advisor.
  3. "Bengali Sweet House". zomato.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்காலி_சந்தை&oldid=2165123" இலிருந்து மீள்விக்கப்பட்டது