புவனேசுவரம்
புவனேசுவரம்
ଭୁବନେଶ୍ୱର (ஒடியா) | |
---|---|
ஆள்கூறுகள்: 20°16′N 85°50′E / 20.27°N 85.84°E | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
கோட்டம் | மத்திய கோட்டம் |
மாவட்டம் | கோர்த்தா |
பெயர்ச்சூட்டு | சிவன் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | புவனேசுவர் மாநகராட்சி |
• மேயர் | சுலோச்சனா தாஸ் (பி.ஜ.த) |
• மாநகராட்சி ஆணையர் | விஜய் அம்ருதா குலங்கே, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மாநகரம் | 422 km2 (163 sq mi) |
• மாநகரம் | 1,110 km2 (430 sq mi) |
ஏற்றம் | 58 m (190 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மாநகரம் | 8,37,321 |
• அடர்த்தி | 2,131.4/km2 (5,520.2/sq mi) |
• பெருநகர் | 13,00,000 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | ஒடியா, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 751 xxx, 752 xxx, 754 xxx |
தொலைபேசி குறியீடு | 91-0674, 06752 |
வாகனப் பதிவு | OD-02 (தெற்கு புவனேசுவர்) OD-33 (வடக்கு புவனேசுவர்) |
UN/LOCODE | IN BBI |
இணையதளம் | www www www |
புவனேசுவர் (ஒடியா:ଭୁବନେଶ୍ୱର,ஆங்கிலம்:Bhubaneswar) ஒடிசா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது.
1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.[6]
போக்குவரத்து
[தொகு]சாலை
[தொகு]ஒடிசா போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் இங்குள்ளது. புவனேசுவர் பேருந்து நிலையம் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பர்முண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மேற்கு வங்காளம், சார்க்கண்டு ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
தொடர்வண்டி
[தொகு]கிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு முதலிய பெருநகரங்களுக்கு தொடர்வண்டி வசதி உள்ளது. நகர் எல்லைக்குள் மொத்தம் ஐந்து இரயில் நிலையங்கள் உள்ளன.
வான்வழிப் போக்குவரத்து
[தொகு]புவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒடிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த நகரத்தை புவனேசுவர நகராட்சி நிர்வகிக்கிறது. இந்த நகரத்தில் 67 நகர்மன்றங்கள் உள்ளன.[7] ஒவ்வொரு நகர்மன்றத்திலும் வசிக்கும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகராட்சி மன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டு கால பதவி வரம்பு இருக்கும். இவர்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதையும், பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை ஏற்படுத்துவதையும் நிர்வகிப்பதையும் செய்ய வேண்டும்.[8]
ஒடிசா அரசின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு ஒடிசா சட்டமன்றம் இயங்கும். இங்கு மாவட்ட நீதிமன்றமும், கீழமை நீதிமன்றமும் உள்ளன.[9]
தட்பவெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், புவனேசுவர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.8 (94.6) |
38.2 (100.8) |
41.8 (107.2) |
44.8 (112.6) |
46.3 (115.3) |
44.4 (111.9) |
41 (106) |
37.2 (99) |
37.7 (99.9) |
36.4 (97.5) |
35 (95) |
33.3 (91.9) |
46.3 (115.3) |
உயர் சராசரி °C (°F) | 28.3 (82.9) |
31.5 (88.7) |
34.9 (94.8) |
37.3 (99.1) |
37.9 (100.2) |
35.4 (95.7) |
31.7 (89.1) |
31.4 (88.5) |
31.7 (89.1) |
31.4 (88.5) |
29.8 (85.6) |
28 (82) |
32.4 (90.3) |
தினசரி சராசரி °C (°F) | 22.2 (72) |
25.1 (77.2) |
28.6 (83.5) |
30.9 (87.6) |
31.7 (89.1) |
30.7 (87.3) |
28.7 (83.7) |
28.4 (83.1) |
28.5 (83.3) |
27.6 (81.7) |
24.9 (76.8) |
22 (72) |
27.44 (81.4) |
தாழ் சராசரி °C (°F) | 15.5 (59.9) |
18.5 (65.3) |
22.2 (72) |
25.2 (77.4) |
26.6 (79.9) |
26.2 (79.2) |
25.2 (77.4) |
25.1 (77.2) |
24.8 (76.6) |
23 (73) |
18.7 (65.7) |
15.3 (59.5) |
22.2 (72) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 9.4 (48.9) |
12 (54) |
14.4 (57.9) |
17.8 (64) |
18.2 (64.8) |
19.4 (66.9) |
21.4 (70.5) |
18.2 (64.8) |
18.3 (64.9) |
16.4 (61.5) |
12.4 (54.3) |
10.4 (50.7) |
9.4 (48.9) |
பொழிவு mm (inches) | 12.4 (0.488) |
24.2 (0.953) |
24.2 (0.953) |
21.8 (0.858) |
55.5 (2.185) |
196.4 (7.732) |
325.3 (12.807) |
329.5 (12.972) |
287.6 (11.323) |
208 (8.19) |
37.4 (1.472) |
5.5 (0.217) |
1,542.2 (60.717) |
% ஈரப்பதம் | 60 | 61 | 63 | 66 | 66 | 74 | 83 | 85 | 83 | 76 | 66 | 60 | 70.3 |
சராசரி மழை நாட்கள் | 0.4 | 2.3 | 2.8 | 3.1 | 5.1 | 12 | 18 | 19.1 | 14.6 | 8.8 | 2.1 | 0.7 | 89 |
சூரியஒளி நேரம் | 253.4 | 234 | 237.8 | 238.8 | 242.9 | 140.7 | 107.2 | 128.6 | 150.8 | 221.8 | 217.5 | 155.5 | 2,329 |
ஆதாரம்: IMD, NOAA (1971–1990)[10] |
சான்றுகள்
[தொகு]- ↑ "Bhubaneswar City".
- ↑ 2.0 2.1 "Bhubaneswar Info".
- ↑ "Bhubaneswar Development Area".
- ↑ 4.0 4.1 "BBSR (India): Union Territory, Major Agglomerations & Towns – Population Statistics in Maps and Charts". City Population. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
- ↑ "The World's Cities in 2016" (PDF). United Nations. October 2016. p. 4. Archived (PDF) from the original on 12 January 2017. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Census of India, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2 November 2011.
- ↑ "BMC Profile". BMC. Archived from the original on 2 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Standing Committees". BMC. Archived from the original on 31 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ Pradhan, Ashok (2 December 2012). "State capital misses district status". Times of India இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130616222459/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-02/bhubaneswar/35547734_1_khurda-powers-of-chief-district-district-courts. பார்த்த நாள்: 31 December 2012.
- ↑ "Bhubaneshwar Climate Normals 1971–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 24 December 2012.
இணைப்புகள்
[தொகு]- புவனேசுவர் நகராட்சி பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- புவனேசுவர் நகராட்சிக் குழுமம்
- புவனேசுவரில் சுற்றுலாத் தளங்கள் பரணிடப்பட்டது 2014-06-25 at the வந்தவழி இயந்திரம்