உள்ளடக்கத்துக்குச் செல்

புள்ளி கால் மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளி கால் மரத் தவளை
ஆங்காங்கில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. மெகாசெபாலசு
இருசொற் பெயரீடு
பாலிபீடேட்சு மெகாசெபாலசு
காலோவெல், 1861

பாலிபீடேட்சு மெகாசெபாலசு (Polypedates megacephalus) என்பது ஆங்காங் சவுக்குத் தவளை அல்லது புள்ளி கால் மரத் தவளை எனப் பொதுவாக அறியப்படுவது புதர்த்தவளைக் குடும்பத்தில் (இராக்கோபோரிடே) உள்ள ஒரு சிற்றினமாகும். இது இதன் சொந்த வரம்பில், "பழுப்பு மரத்தவளை" என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தப் பெயர் உண்மையான மரத்தவளை குடும்பத்தின் (கையாலிடே) ஒரு சிற்றினத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பரவலும் சூழலியல்

[தொகு]

இந்த சிற்றினம் மத்திய, தெற்கு மற்றும் தென்மேற்கு சீனாவினை (ஆங்காங் மற்றும் கைனான் மற்றும் இந்தோசீனா தீபகற்பம் உட்பட) பூர்வீகமாகக் கொண்டது.[2][3] இது பாலிபீடேட்ஸ் லுகோமைசுடாக்சு சிற்றினத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது. பா. லுகோமைசுடெக்சு, பா. முடசு மற்றும் பா. பிராவேரி சிற்றினங்கள் சேர்ந்து ஒரு குழுவினை உருவாக்குகின்றது.

முன்னதாக, பா. மெகாசெபாலசு வியட்நாமின் சிவப்பு நதிக்கு மேலேயும் வடகிழக்கு இந்தியாவிலும் பரவியிருப்பதாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில் பா. லுகோமைசுடெக்சு பொதுவாகச் சிவப்பு ஆற்றின் தெற்கிலும் மேற்கு யுன்னானிலும் காணப்பட்டது.[1] இருப்பினும், சமீபத்திய மரபணு ஆய்வுகள் இந்தச் சிற்றினங்களுக்கு இடையிலான இயற்கையான தடையான கிரா மற்றும் தெனாசெரிம் மலைத்தொடர்களாகும் என்பதைத் தெரிவிக்கின்றது. இங்கு பா. மெகாசெபாசு இசுத்மசுக்கு மேலேயும், வரம்பின் கிழக்கிலும் காணலாம்.[2]

ஆசியாவில் இதன் பரவலான பரவலாக்கம் மற்றும் பரந்த அளவிலான வாழ்விடங்களின் சகிப்புத்தன்மையினைக் கருத்தில் கொண்டு இந்தத் தவளை தீவாய்ப்புக் கவலைக் குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனுடைய எண்ணிக்கையும் ஒரு காரணமாகும்.[1]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 வார்ப்புரு:Cite IUCN
  2. 2.0 2.1 KURAISHI, NORIHIRO; MATSUI, MASAFUMI; HAMIDY, AMIR; BELABUT, DAICUS M.; AHMAD, NORHAYATI; PANHA, SOMSAK; SUDIN, AHMAD; YONG, HOI S. et al. (2012-08-16). "Phylogenetic and taxonomic relationships of thePolypedates leucomystaxcomplex (Amphibia)" (in en). Zoologica Scripta 42 (1): 54–70. doi:10.1111/j.1463-6409.2012.00562.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-3256. 
  3. "Polypedates megacephalus Hallowell, 1861 | Amphibian Species of the World". research.amnh.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் புள்ளி கால் மரத் தவளை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_கால்_மரத்_தவளை&oldid=4015466" இலிருந்து மீள்விக்கப்பட்டது