புலாவ் திக்குஸ்
(இந்தக் கட்டுரை மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரத்தின் புலாவ் திக்குஸ் புறநகரைப் பற்றியதாகும். பினாங்கு மாநிலத்தின் திக்குஸ் எனும் பெயரில் உள்ள தீவிற்கு திக்குஸ் தீவு என்பதைப் பார்க்கவும்.)
புலாவ் திக்குஸ் | |
---|---|
புறநகர் ஜார்ஜ் டவுன் | |
Pulau Tikus | |
ஆள்கூறுகள்: 5°25′53.4″N 100°18′42.48″E / 5.431500°N 100.3118000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட கிழக்கு பினாங்கு தீவு |
மாநகரம் | ஜார்ஜ் டவுன் |
அரசு | |
• உள்ளாட்சி மன்றம் | பினாங்கு தீவு மாநகராட்சி |
• புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதி | ஓங் கோன் வாய் (Wong Hon Wai) (ஜ.செ.க) |
• புலாவ் திக்குஸ் சட்டமன்றத் தொகுதி | கிரிசு லீ சுன் கிட் (Chris Lee Chun Kit) (ஜ.செ.க) |
• பினாங்கு தீவு மேயர் | இயூ துங் சியாங் (Yew Tung Seang) |
நேர வலயம் | ஒசநே 8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 10250, 10350, 10400 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
இணையதளம் | mbpp |
புலாவ் திக்குஸ் (ஆங்கிலம்: Pulau Tikus; மலாய் மொழி: Pulau Tikus; சீனம்: 浮罗地滑; ஜாவி: ڤولاو تيكوس) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும்.
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரத்தின் மையப் பகுதிக்கும்; தஞ்சோங் தொக்கோங் (Tanjung Tokong) நகர்ப் பகுதிக்கும் இடையே அமைந்துள்ள இந்தப் புலாவ் திக்குஸ் புறநகர்ப் பகுதியில் வசதிமிக்க வகுப்பினர் அதிகமாக வாழ்கின்றனர். பினாங்கு தீவின் கடற்கரையில் உள்ள சிறு சிறு பாறைகளின் பெயரால் இந்த இடத்திற்கும் பெயரிடப்பட்டது.[1]
இந்தப் புலாவ் திக்குஸ் புறநகர்ப் பகுதி, யூரேசியர்கள் (Eurasians), தாய்லாந்து மக்கள் (Thais) மற்றும் பர்மிய (Burmese) போன்ற சிறுபான்மையினரின் இருப்பிடமாகவும் விளங்குகிறது.[2]
வரலாறு
[தொகு]1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய கடல்படைத் தளபதி பிரான்சிஸ் லைட்; பினாங்கு தீவை நிறுவிய காலத்திலேயே புலாவ் திக்குஸ் கிராமமும் நிறுவப்பட்டு விட்டது. பிரித்தானிய ஆட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்து புலாவ் திக்குஸ் பல்வேறு கலாசாரங்களின் தாயகமாகவும் இருந்து வந்துள்ளது.
இங்கு வாழும் யூரேசியர்கள், தாய்லாந்து மக்கள்; பர்மிய சமூகங்கள், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் புத்த கோயில்களைக் கட்டி உள்ளனர். அவை அந்தச் சமூகத்தவரின் தாய்நாடுகளின் கட்டிடக்கலை வடிவமைப்புகளைக் கொண்ட தலங்களாக உள்ளன. அத்துடன் இங்கு பன்னாடுகளின் பல தூதரகங்களும் நிறுவப்பட்டு உள்ளன.
சொல் பிறப்பியல்
[தொகு]தஞ்சோங் பூங்கா (Tanjung Bungah) புறநகர்ப் பகுதியில் இருந்து 770 மீ (0.48 மைல்) தொலைவில் உள்ள ஒரு பாறைத் தீவான திக்குஸ் தீவின் (Rat Island) பெயரால் புலாவ் திக்குஸ் கிராமத்திற்கும் பெயரிடப்பட்டது. மலாய் மொழியில் 'எலித் தீவு' (Pulau Tikus) என்று பொருள்படும்.
கடலில் குறைந்த அளவில் அலைகள் இருந்த போது எலிகளைப் போல் தீவின் பாறைகள் காணப் பட்டதால் எலிகளின் தீவு எனப் பெயர் பெறப் பட்டதாகக் கூறப் படுகிறது.[3]
வரலாறு
[தொகு]1780-ஆம் ஆண்டுகளில் சயாமில் நடந்த இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய யூரேசியர்களால் புலாவ் திக்குஸ் பகுதியில் முதல் யூரேசியக் குடியேற்றம் நடைபெற்றது.[4] பெரும்பாலோர் கத்தோலிக்கர்கள் ஆவர். அதன் பின்னர் 1811-ஆம் ஆண்டில் மற்றொருக் குடியேற்றம் நடைபெற்றது.[5]
யூரேசியர்கள்தான் இந்த இடத்திற்கு புலாவ் திக்குஸ் என்று பெயர் வைத்தனர். அவர்கள் இங்கு வந்தவுடன், கம்போங் செரானி (தமிழ்: யூரேசிய கிராமம்; ஆங்கிலம்: Eurasian Village; மலாய் மொழி: Kampong Serani) எனும் கிராமத்தை உருவாக்கினார்கள். இந்தக் கிராமாம் இம்மாகுலேட் கான்செப்சன் தேவாலயத்தை (Church of the Immaculate Conception) மையமாகக் கொண்டது.[4]
பர்மியர்கள்
[தொகு]புலாவ் திக்குஸில் முதன்முதலில் குடியேறியவர்களில் பர்மியர்களும் அடங்குவர். கம்போங் அவா (Kampung Ava) எனும் ஒரு பர்மியக் கிராமம், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டது. 1803-இல் தம்மிக்கராமா பர்மிய கோயில் (Dhammikarama Burmese Temple) கட்டப்பட்டது.
யூரேசியர்கள், பர்மியர்களுக்குப் பின்னர் புலாவ் திக்குஸில் குடியேறிய சயாமியர்கள் கம்போங் சயாம் (Kampung Siam) எனும் கிராமத்தைத் தோற்றுவித்தார்கள். அத்துடன் வாட் சாயமங்கலராம் (Wat Chaiyamangkalaram) மற்றும் வாட் புப்பாரம் (Wat Buppharam) எனும் இரண்டு புத்த கோயில்களையும் கட்டினார்கள்.[2]
இந்தியர்கள்
[தொகு]புலாவ் திக்குஸின் தென்மேற்கில், பிரித்தானிய கடல்படைத் தளபதி பிரான்சிஸ் லைட்டின் பங்குதாரரான ஜேம்ஸ் ஸ்காட் (James Scott) என்பவர் ஆயர் ராஜா குடியிருப்புப் பகுதியை (Ayer Rajah Estate) நிறுவினார்.
அந்தக் காலத்து வழக்கமான நடைமுறைப்படி, வேளாண் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியத் தொழிலாளர்கள் பலர் அழைத்து வரப் பட்டனர்.
அப்படி அழைத்து வரப்பட்ட இந்தியச் சமூகத்தினர் ஆயர் ராஜா பகுதியில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் (Arulmigu Balathandayuthapani Temple) மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் (Nattukkottai Chettiar Temple) போன்ற சில இந்து கோயில்களைக் கட்டினார்கள். இந்தக் கோயில்கள் இன்றும் மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன.
பாதிப்புகள்
[தொகு]சில நூற்றாண்டுகளாக ஜார்ஜ் டவுன் நகரம் வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வளர்ச்சி இறுதியில் புலாவ் திக்குஸை பாதித்து உள்ளது. கிராமப் புறமாக இருந்த இந்த இடத்தை புறநகர்ப் பகுதியாக மாற்றி அமைத்து விட்டது.
20-ஆம் நூற்றாண்டின் நகரமயமாக்கல், புலாவ் திக்குசின் சுற்று வட்டாரங்களில் உயர்மட்ட வானளாவிக் கட்டங்கள் (Upmarket Condominiums) மற்றும் வணிக சொத்துக்கள் போன்றவை காளான்கள் போல உருவாவதற்கு வழிவகுத்து உள்ளது.
காட்சியகம்
[தொகு]-
திசுடெட் கல்லூரி
-
புலாவ் திக்குஸ் நகர்ப்பகுதி
-
ஜெலுத்தோங் சாலை
-
லிம் சோங் யூ விரைவுச்சாலை
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pulau Tikus" (in en). Time Out Penang. https://www.timeout.com/penang/attractions/pulau-tikus.
- ↑ 2.0 2.1 Khoo, Su Nin (2007). Streets of George Town, Penang. Penang: Areca Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789839886009.
- ↑ Wilks, Frances (2014-04-11). "The Story Behind Penang's Rat Island (Pulau Tikus)" (in en-US). ExpatGo. http://www.expatgo.com/my/2014/04/11/the-story-behind-penangs-rat-island-pulau-tikus/.
- ↑ 4.0 4.1 "The History of Penang Eurasians" (in en-US). Penang Tourism. 2013-12-02. http://www.penangstory.net.my/mino-content-paperanthony.html.
- ↑ "Church opens mini museum of relics – Nation - The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-20.