உள்ளடக்கத்துக்குச் செல்

புருடோத்தம நம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புருடோத்தம நம்பி, பன்னிரு சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.

சிவன் மீது பற்று

[தொகு]

இவர் வைணவக் குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும்.[1] நடராசரையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்தார்.

சிதம்பரம்

[தொகு]

இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.

காலம்

[தொகு]

இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருடோத்தம_நம்பி&oldid=2718256" இலிருந்து மீள்விக்கப்பட்டது