புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 அல்லது பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 (ஆங்கிலம்: 1969 Pondicherry Legislative Assembly election; பிரஞ்சு: Assemblée législative de Pondichéry) என்பது முன்னர் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கான 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1969ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 1969-இல் 3ஆவது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசு கட்சி அதிக வாக்குகளை வென்றது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக இடங்களை வென்றது. மேலும் பாரூக் மரைக்காயர் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]
பாண்டிச்சேரி பிரதேசம் இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தால் 30 ஒற்றை உறுப்பினர் சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.