உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் காயூ ஈத்தாம்

ஆள்கூறுகள்: 6°30′N 100°25′E / 6.500°N 100.417°E / 6.500; 100.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் காயூ ஈத்தாம்
Bukit Kayu Hitam
புக்கிட் காயூ ஈத்தாம் சுங்கச் சாவடி
புக்கிட் காயூ ஈத்தாம் சுங்கச் சாவடி
புக்கிட் காயூ ஈத்தாம் is located in மலேசியா
புக்கிட் காயூ ஈத்தாம்
புக்கிட் காயூ ஈத்தாம்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°30′N 100°25′E / 6.500°N 100.417°E / 6.500; 100.417
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்குபாங் பாசு
நேர வலயம்ஒசநே 8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
06050

புக்கிட் காயூ ஈத்தாம் (மலாய்: Bukit Kayu Hitam; ஆங்கிலம்: Bukit Kayu Hitam); சீனம்: 黑木山); என்பது மலேசியா, கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம் ஆகும்.

இந்த நகரம் மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) அருகே அமைந்து உள்ளது. மலேசியா தாய்லாந்து நாடுகளுக்கு இடையே எல்லைக் கடக்கும் பரபரப்பான சாலை இந்த நகரில் உள்ளது.[1]

மலேசியா-தாய்லாந்து எல்லையில் பான் டானோக் கிராமம் (Ban Danok) உள்ளது. அங்கு தான் தாய்லாந்து நாட்டிற்கான சடாவோ (Sadao) சோதனைச் சாவடியும் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை; மற்றும் மலேசியாவின் கூட்டரசு சாலை 1; ஆகியவற்றின் வடக்கு முனையில் புக்கிட் காயூ ஈத்தாம் உள்ளது.

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை, தீபகற்ப மலேசியாவின் தெற்கில் ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரில் சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் இடத்தில் முடிவுறுகிறது. அதே வேளையில் வடக்கில், தாய்லாந்தின் பாதை 4 (Thailand's Route 4) எனும் பெட்காசெம் சாலையுடன் (Phetkasem Road) இணைக்கப்படுகிறது. மேலும் அந்தச் சாலை அப்படியே பாங்காக் மாநகரம் வரை செல்கிறது.

புக்கிட் காயூ ஈத்தாம் நகரம், கோலாலம்பூர் மாநகருக்கு வடக்கே 476 கி.மீ. தொலைவிலும்; கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டார் மாநகருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள நகரமான [[சாங்லுன்]] (Changlun) நகருக்குத் தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

எல்லைக் கடப்பு

[தொகு]

புக்கிட் காயூ ஈத்தாமில் உள்ள சுங்கம், குடியேற்றம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி (Customs, Immigration and Quarantine (CIQ) Complex); அதன் உண்மையான எல்லையில் இருந்து 800 மீட்டர் தெற்கே உள்ளது. தாய்லாந்து சோதனைச் சாவடியானது டானோக் நகரின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

புதிய சோதனைச் சாவடி வளாகம்; பழைய வளாகத்தின் விரிவாக்கம் ஆகும். புதிய சோதனைச் சாவடி வளாகம் ரிங்கிட்RM 425 மில்லியன் செலவில் சீரமைப்பு செய்யப்பட்டு, 1 நவம்பர் 2017-இல், பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப் பட்டது.[2][3]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Songkhla keen on 24-hour checkpoint with Malaysia". The Bangkok Post. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  2. "Bukit Kayu Hitam ICQS opens today for heavy vehicles; to be fully operational Nov 1" (in en). New Straits Times. 2017-07-09. https://www.nst.com.my/news/nation/2017/09/275835/bukit-kayu-hitam-icqs-opens-today-heavy-vehicles-be-fully-operational-nov. 
  3. "New Malaysian complex at Thai border gets equipment boost to stem smuggling" (in en). Straits Times. 2017-11-20. https://www.straitstimes.com/asia/se-asia/new-malaysian-complex-at-thai-border-gets-equipment-boost-to-stem-smuggling. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_காயூ_ஈத்தாம்&oldid=3519515" இலிருந்து மீள்விக்கப்பட்டது