பி. குஞ்ஞிராமன் நாயர்
பனயந்திட்டா குஞ்ஞிராமன் நாயர் (பிறப்பு: 4 அக்டோபர் 1905 - இறப்பு: 27 மே 1978) மகாகவி பி என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மலையாள இலக்கியவாதியும் இந்திய எழுத்தாளரும் ஆவார். தென்னிந்தியாவில் உள்ள தனது சொந்த மாநிலமான கேரளாவின் இயற்கை அழகையும், அவரது வாழ்க்கையின் யதார்த்தங்களையும் குறித்த தனது காதல் கவிதைகளுக்காக அறியப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் கவிதைக்கான தொடக்க கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். சாகித்ய அகாதமி விருதையும் பெற்றவர்.
சுயசரிதை
[தொகு]பி. குஞ்ஞிராமன் நாயர் ஜனவரி 5, 1906 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் காஞ்ஞங்காடு அருகே வெள்ளிக்கோத்து என்ற இடத்தில் பிறந்தார்.[1] சமஸ்கிருத அறிஞரும், மருத்துவரும், வேதாந்தியுமான புரவங்கர குஞ்சம்பு நாயர் என்பவருக்கும் அவரது மனைவி பனயந்திட்டா குஞ்சம்மா அம்மா ஆகியோருக்கும் மகனாகப் பிறந்தார்.[2] அவரது ஆரம்ப பள்ளிப்படிப்பு பாரம்பரிய ஆசிரியர்களுடனும் உள்ளூர் தொடக்கப்பள்ளியிலும் இருந்தது. பட்டாம்பியில் புன்னசேரி நம்பி நீலகண்ட சர்மா நடத்தும் பள்ளியில் (இன்றைய ஸ்ரீ நீலகண்ட அரசு சமசுகிருத கல்லூரி, பட்டாம்பி) சமசுகிருதம் படிப்பதற்கு முன்பு அவர் ஒரு சோம்பேறி மாணவர் என்று அறியப்பட்டார்.
இந்த நேரத்தில்தான் நாயர் கவிதை எழுதத் தொடங்கினார். உள்ளூரில் வட்டோலி குஞ்சிலட்சுமி என்ற ஒரு பெண்ணையும் காதலித்தார். பின்னர், உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி அவரது உறவினர்களால் மணமகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரவங்கர ஜானகி அம்மாவுடன் இவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்தபோது, அதை மறுத்து, தனது சமசுகிருத மற்றும் வேதாந்த படிப்பைத் தொடர தஞ்சாவூருக்குச் சென்றார். பின்னர், தனது காதலியான குஞ்சிலட்சுமியை மணந்தார்.[2] திருமணத்திற்குப் பிறகு, அவர் கண்ணூரிலிருந்து வெளியிடப்பட்ட நன்னஜீவன் என்ற பத்திரிகையை நிறுவினார். ஆனால் வெளியீடு செயலிழந்த பிறகு, திருச்சூரில் உள்ள சரஸ்வதி அச்சகம், ஒளவக்கோடு சிறீ ராமகிருஷ்ணோதயம் அச்சகம் ஆகியவற்றில் பணிபுரிந்தார். பின்னர், அவர் கூடாளி உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராகச் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, கொல்லங்கோடு ராஜா உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பணி ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார்.[3] அவர் திருவனந்தபுரத்தில் உள்ள உறைவிட சி.பி.சத்திரத்தில் தங்கியிருந்தபோது, மே 27, 1978 அன்று தனது 72 வயதில் காலமானார். இவருக்கு பி.ரவீந்திரன் நாயர் என்ற மகனும் [4] இராதா என்ற மகளும் இருந்தனர்.[5]
ஆளுமை
[தொகு]ஒரு பழக்கமான நாடோடியாக, மரபு ஒழுக்கங்களுக்கு இணங்காத ஒரு வாழ்க்கை முறையை வழிநடத்தியதாக கூறப்பட்டது. கேரளா முழுவதும் அலைந்து திரிந்து, பல இடங்களில் வசித்து வந்ததாகவும், மக்களை சந்தித்து அவர்களை அவரது வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் ஒரு பகுதியாக ஆக்கியதாகவும் கூறப்படுகிறது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்களையும் எழுதியுள்ள போதிலும், கவிதை அவரது முக்கிய வகையை உருவாக்கியது.[6] நாயர் தனது இலக்கிய வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில், ஆன்மீகக் கவிதைகளை எழுதினார். 1944 இல் வெளியிடப்பட்ட நிறபறா, ஒரு புதிய கட்டத்தைத் எட்டியது. இது இயற்கையையும் குறியீட்டையும் நோக்கி சாய்வதைக் காட்டியது.[7] எம்.டி.வாசுதேவன் நாயரின் முன்னுரையுடன் வெலியிடப்பட்ட அவரது சுயசரிதை, கவியுடெ கால்பாடுகள் (ஒரு கவிஞரின் கால்தடம் ), மலையாளத்தில் உரைநடைக்கு புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும்.[4] தாமரத்தோணி, கொல்லங்கோட்டில் இருந்த நாட்களில் எழுதப்பட்டது.[3] களியச்சன், வயல்கரயில், இரதோல்சவம், பூக்களம் போன்றவை அவரது அறியப்பட்ட கவிதைகளில் சில.
மரியாதைகள்
[தொகு]1949 இல் நீலேஸ்வரம் இராஜா நாயரை பக்தகவி என்ற பட்டத்துடன் கௌரவித்து, அவருக்கு ஒரு வீரஸ்ரங்கலா (தங்க வளையல்) வழங்கினார். மேலும் அவர் 1963 ஆம் ஆண்டில் கொச்சியின் இராஜாவிடமிருந்து சாகித்யா நிபுணன் என்ற பட்டத்தை பெற்றார்.[2] கேரள சாகித்ய அகாதமி 1959 ஆம் ஆண்டில் கவிதைக்கான தொடக்க கேரள சாகித்ய அகாதமி விருதுக்கு குஞ்ஞிராமன் நாயரின் களியச்சனைத் தேர்ந்தெடுத்தது.[8] 1967 ஆம் ஆண்டில் தாமரத்தோணி என்ற தனது படைப்பிற்காக கேந்திர சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[9]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Men of Letters". kasargod.net. 2019-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ 2.0 2.1 2.2 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-03-05. Archived from the original on 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Biography on Kerala Sahitya Akademi portal" defined multiple times with different content - ↑ 3.0 3.1 Muralikrishnan, Story: C. Ashraf Photos: B. "Kollengode, where time stands still". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Kollengode, where time stands still" defined multiple times with different content - ↑ 4.0 4.1 "MT Vasudevan Nair unhappy with removal of foreword in P Kunhiraman Nair's biography". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2016-08-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ കുഞ്ഞിരാമന്, എം. "പി യുടെ ഓര്മകളില് ജന്മനാട്; ഇന്ന് 112-ാം ജന്മവാര്ഷികദിനം". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "List of Works". Kerala Sahitya Akademi. 2019-03-05. Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ Abraham, Vinu (2017-06-29). "The eternal seeker". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Poetry". Kerala Sahitya Akademi. 2019-03-05. Archived from the original on 2018-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Kendra Sahitya Academy Awards (Malayalam)". Public Relations Department, கேரள அரசு. Archived from the original on 24 May 2007. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". Kerala Sahitya Akademi portal. 2019-03-05. Archived from the original on 2017-08-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- "P. Kunhiraman Nair Poems - YouTube channel". YouTube (in ஆங்கிலம்). 2019-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.