பிலிப்பசு பால்டேயசு
பிலிப்சு பால்டே (Philips Baelde) அல்லது வண. பிலிப்பசு பால்டேயசு (Philippus Baldaeus, (ஞானசுநானம்: 24 அக்டோபர் 1632,[1] – 1671,[2] என்பவர் இடச்சு மறைப்பரப்புனர் ஆவார். இவர் இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் அங்கு ஊடுருவிய இடச்சுப் படைகளுடன் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவர் 1658 இல் சீர்திருத்தத் திருச்சபையை அறிமுகப்படுத்தினார்.[3] ஆபிரகாம் ரொஜேரியசுக்குப் பின்னர் இலங்கைத் தீவின் வடக்கே வாழும் தமிழரின் வாழ்க்கை, மொழி, பண்பாடு ஆகியவற்றை ஆவணப்படுத்திய இரண்டாவது ஐரோப்பியர் இவராவார்.[சான்று தேவை] இடச்சு மொழியில் எழுதப்பட்ட "பெருந்தீவான இலங்கையில் உண்மையானதும் சரியானதுமான விவரணம்" எனும் நூல்[4] அக்காலத்தில் பெரும் வரலாற்றுப் பதிவாக இனங்காணப்பட்டு, உடனடியாகவே இடச்சு, இடாய்ச்சு மொழிகளில் அழகான படங்களுடன் 1672 இல் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1960 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்டது.
இவர் தனது பதிவுகளில் பெரும்பாலும் தான் பயணம் மேற்கொண்ட இடங்களின் சமய, குடியியல், மற்றும் உள்ளூர் வழக்கங்களை ஆவணப் படுத்தினார். இந்து தொன்மவியலை அறிமுகப்படுத்தினார். இவர் 1672-இல் தமிழ் மொழியில் கர்த்தரின் ஜெபம் என்ற கடவுள் வழிபாட்டை மொழிபெயர்த்தார். இந்நூலில் பல தவறுகள் காணப்பட்டாலும், அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட முதலாவது இந்திய மொழி ஆய்வு நூலாகும்.[5] பால்டேயசு பின்னர் ஒல்லாந்து திரும்பி இளம் வயதில் இறக்கும் வரை மறைப்பரப்புனராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DTB Delft inv. 55, folio 119
- ↑ "Parenteel van Andries BAELDE". genealogieburggraaf.nl. Archived from the original on 2013-12-23.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4
- ↑ பல்லவராசசேகரன் (2007). "பல்லவராச்சியம்". பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Rose, Hugh James; Rose, Henry John; Wright, Thomas (1 January 1841). "A New General Biographical Dictionary Projected and Partly Arranged". Fellowes – via Google Books.
வெளி இணைப்புகள்
[தொகு]- Short bio (டச்சு)
- A Description of the East-India Coasts of Malabar and Coromandel and also of the Isle of Ceylon with their Adjacent Kingdoms & Provinces by Philip Baldeus (translated from the High-Dutch printed at Amsterdam 1672
- Digital Library for Dutch Literature (DBNL)
- International Institute for Asian Studies பரணிடப்பட்டது 2011-06-12 at the வந்தவழி இயந்திரம்
- Korte Malabaersche Letter-Kons (page= 190 and191 from Philippus Baldaeus', Naauwkeurige beschryvinge van Malabar en Chromandel. Biblotheek Nationaal Archief 56 H 10.
{{cite book}}
: CS1 maint: location (link)