பிர்லா மந்திர், கொல்கத்தா
பிர்லா மந்திர் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மேற்கு வங்காளம் |
மாவட்டம்: | Kolkata |
அமைவு: | கொல்கத்தா |
ஆள்கூறுகள்: | 22°31′50″N 88°21′54″E / 22.53056°N 88.36500°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
பிர்லா மந்திர், ('Birla Mandir')இந்தியாவின் கொல்கத்தாவில், பாலிகங்கே, அசுதோஷ் சௌத்ரி அவென்யூவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும், இது தொழிலதிபர் பிர்லா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. இது இராமர் மற்றும் கிருஷ்ணர் போன்ற விஷ்ணுவின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறந்தநாளான ஜென்மாஷ்டமி அன்று காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் வெகு தொலைவில் இருந்து வந்து தெய்வங்களை தரிசனம் செய்வார்கள்.
வரலாறு
[தொகு]1970-ல் இக்கோயிலின் கட்டுமானப் பணி தொடங்கியது. முழு கட்டுமானத்தையும் முடிக்க 26 ஆண்டுகள் ஆனது. கட்டுமானம் சோம்புராஸ் மேற்பார்வையில் இருந்தது. [1]
1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை சுவாமி சிதானந்தஜி மகாராஜ் அவர்களால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. டாக்டர் கரண் சிங் அதே நாளில் இக்கோயிலை திறந்து வைத்தார்.
அமைவிடம்
[தொகு]பிர்லா கோயில் கொல்கத்தா, பாலிகங்கே, அசுதோஷ் சௌத்ரி அவென்யூவில் அமைந்துள்ளது. இது லக்ஷ்மிநாராயண் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. பிர்லா மந்திரின் அருகிலுள்ள மெட்ரோ நிலையம் ஜதின் தாஸ் பூங்கா மற்றும் விஐபி பஜார் (கட்டுமானத்தில் உள்ளது). இது டம்டம்/கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், சீல்டா ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவை தவிர; இந்த கோயிலுக்கு வருவதற்கு, பேருந்துகள், டிராம்கள், டாக்சிகள் போன்றவையும் உள்ளன.
கோயில் குறிப்புகள்
[தொகு]- பிரதான கோயிலில் கிருஷ்ணர் மற்றும் ராதையின் சிலைகள் உள்ளன.
- இடது பக்க கோயில் கோபுரத்தில் இந்து தெய்வமான, சக்தியின் அம்சமான துர்கா தேவியின் உருவம் உள்ளது.
- கோவிலின் வலது பக்க கோபுரத்தில் சிவன் தியான நிலையில் இருக்கிறார்.
- 44 கதா நிலத்தில் பரந்து விரிந்துள்ள இந்த கோயில், புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ் கோயிலை ஒத்திருக்கிறது. பிர்லா மந்திர் அதன் கல் வேலைப்பாடுகளில் பகவத் கீதையின் தத்துவத்தை விளக்கக்கூடிய ஓவியங்கள் காணப்படுகிறது. மேலும், சில சிக்கலான ராஜஸ்தானி கோயில் கட்டிடக்கலை பாணியைக் கொண்டுள்ளது. இந்த கோயில், கட்டிடக் கலைஞர் நோமி போஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ No deadline for these craftsmen Swati Mathur. TNN. December 6, 2012.