உள்ளடக்கத்துக்குச் செல்

பின்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட்டா (கோதுமை மாவு), கோயா (அடர்த்தியான பால்) மற்றும் உலர் பழங்கள் கொண்டு செய்யப்பட்ட பின்னி

பின்னி (Pinni) என்பது பஞ்சாபிய உணவு வகைகளுள் ஒன்றாகும். இதனை பெரும்பாலும் குளிர்காலத்தில் உண்ணுகின்றனர். இது ஒரு இனிப்பாகப் பரிமாறப்படுகிறது. நெய்,[1] கோதுமை மாவு, வெல்லம் மற்றும் பாதாம்கொண்டு தயாரிக்கப்படுகிறது. திராட்சையையும் இதில் பயன்படுத்தலாம்.[1] உளுந்தம் பருப்பு பின்னி என்பது பின்னி வகைகளுள் ஒன்றாகும்.[2]

பின்னி என்பது உருண்டை வடிவத்தில் தயாரிக்கப்பட்டும் இனிப்பு அல்லது இனிப்புகளுக்கான பொதுவான சொல்லாக உள்ளது.[2]

தேவையான பொருட்கள்

[தொகு]

கூடுதல் சுவைக்கு, பின்னியில் கோயாவைப் பயன்படுத்தலாம்.[3] பின்னி என்பது வட இந்தியா மற்றும் பஞ்சாப் பகுதியில் பிண்டி என்றும் அழைக்கப்படும் ஒரு கூட்டு இனிப்பு உணவாகும்.[4] பின்னி நீண்ட நேரம் கெட்டுப்போவதில்லை. மேலும் குளிர்ச்சியான இடத்தில் சேமிக்க வேண்டிய அவசியமும் இல்லை. பின்னி தேநீர் அல்லது சூடான பாலுடன் பரிமாறப்படுகிறது.[5]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The Exquisite World of Indian Cuisine". p. 37. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
  2. 2.0 2.1 "Companionship and Sexuality: Based on Ayurveda and the Hindu Tradition". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
  3. "Mama's Punjabi Recipes — Atte Ki Pinni (Sweet Wheat Flour Balls) - Indo American News". Indoamerican-news.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  4. "Travel Articles and Tips". Mycitycuisine.org. Archived from the original on 11 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Pinni recipes". Khanapakana.com. Archived from the original on 1 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னி&oldid=3405596" இலிருந்து மீள்விக்கப்பட்டது