பாவை
சங்ககாலத்தில் பாவைப் பொம்மைகள் இருந்தன. இவை சங்ககால மக்களின் கலைத்திறனைக் காட்டுவதாக அமைந்திருந்தன. காலவெள்ளத்தில் மழையிலும் வெயிலிலும் கரைந்து போயின.
கொல்லிப்பாவை
[தொகு]கொல்லிமலையில் செய்து வைக்கப்பட்டிருந்த பாவைப்பொம்மை கொல்லிப்பாவை. பெண்தெய்வத்தின் உருவம் கொண்ட இந்தப் பாவைப்பொம்மை வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் கரையாத, பொலிவு மாறாத வகையில் செய்யப்பட்டிருந்தது.
வினையழி பாவை
[தொகு]இது ஆண்களின் போர்த்திறனைக் குறிக்கும் வகையில் செய்யப்பட்டவை.போர்முனையில் வீழ்ந்தோருக்கு அவர்கள் போரிட்ட மன்றத்தில் பாவைப்பொம்மை செய்து வைப்பார்களாம். அந்தப் பொம்மை மழையில் கரைந்தும் வெயிலில் காய்ந்தும் செயத அதன் அழகு அழிந்துபோகுமாம். இதுதான் வினையழி பாவை. (கல்லில் பெரும் பீடும் எழுதி வைத்தால் அது நடுகல் எனப்படும். மண்ணில் உருவாரம் செய்து வைத்தால் அது பாவை எனப்படும்.) - (வேம்பற்றூர்க் குமரனார் - அகநானூறு 157)