பாறைத் தோட்டம்
பாறைத் தோட்டம் என்பது பாறைகள் அல்லது கற்களைப் பெரும்பாலும் பயன்படுத்தி உருவாக்கப்படும் அலங்காரத் தோட்டமாகும். இவை பொதுவாக பாறைச் சூழலில் வளரக்கூடிய தாவரங்களையும் கொண்டிருக்கும்.
பாறைத் தோட்டத் தாவரங்கள் பெரும்பாலும் சிறியவையாகவே இருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று இயற்கையாகவே பாறைச்சூழலில் வளரக்கூடிய தாவரங்கள் சிறியவை மற்றது பாறைத் தோட்டங்களில் பாறைகளுக்கே சிறப்பிடம் கொடுக்கப்படுவதால் தாவரங்கள் அவற்றை மறைக்காது இருப்பதற்காகச் சிறிய தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாவரங்கள் பாறைகளுக்கிடையே நிலத்தில் அல்லது சிறிய பூச்சட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக இத்தகைய தாவரங்களுக்கு நன்றாக நீர் வடிந்து ஓடக்கூடிய மண்ணும், குறைந்த அளவு நீரும் தேவைப்படுகின்றன.
வழமையான பாறைத் தோட்டங்கள் சிறியதும் பெரியதுமான பாறைகளை அழகுணர்வு வெளிப்பட ஒழுங்குபடுத்துவதன் மூலம் பெறப்படுகின்றன. இவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும் பாறைகளுக்கு இடையில் காணும் சிறிய இடைவெளிகளுள் தாவரங்கள் நடப்படுகின்றன. சில பாறைத் தோட்டங்களில் "பொன்சாய்கள்" எனப்படும் செயற்கைமுறையில் வளர்த்தெடுக்கப்படும் குறுக்கப்பட்ட தாவரங்களும் வளர்க்கப்படுவதுண்டு.
சென் தோட்டங்கள் என அழைக்கப்படும் யப்பானிய பாறைத்தோட்டங்கள் தாவரங்களே அற்றவையாக காணப்படுகின்றன.
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவான கேள்விகள் (ஆங்கில மொழியில்)
- அல்பைன் பாறைத்தோட்டம் பரணிடப்பட்டது 2006-11-11 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- வட அமஎரிக்க பாறைத்தோட்டக் கழகம் (ஆங்கில மொழியில்)
- ஸ்கொட்லாந்தின் பாறைத்தோட்டக் கழகம் (ஆங்கில மொழியில்)