உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிய வித்தியா பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பாரதிய வித்தியா பவன்
குறிக்கோளுரைLet noble thoughts come to us from every side – ரிக் வேதம், 1-89-i
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்7 நவம்பர் 1938
அமைவிடம்
இணையதளம்http://www.bhavans.info

பாரதிய வித்தியா பவன் (Bharatiya Vidya Bhavan) பிரித்தானிய இந்திய அரசில் இந்தியர்களால் நிறுவப்பட்ட பெரும் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்வி அறக்கட்டளை நிறுவனத்தை, மகாத்மா காந்தியின் ஆதரவுடன்[1], இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும், கல்வியாளருமான குலபதி கே. எம். முன்ஷியால்[2] 7 நவம்பர் 1938ல் நிறுவப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.

தற்போது பாரதிய வித்தியா பவனின் செயற்திட்டங்கள் இந்தியா முழுவதும் 119 மையங்களில் நடத்தப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் 7 மையங்கள் செய்ல்படுகிறது.[3] [4]

இந்நிறுவனம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இந்து தொன்மவியல் போன்ற நூல்கள் மற்றும் இதழ்கள் வெளியிட்டு வருகிறது.

அமைப்பு

[தொகு]

பாரதிய வித்தியா பவன் அறக்கட்டளை நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் நூற்றிற்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும், மேனிலைப்பள்ளிகளும், கல்லூரிகளும் நடத்துகிறது.[5]

வல்லபாய் படேல், தலாய் லாமா, ஜவகர்லால் நேரு, அன்னை தெரசா, ஜெ. ர. தா. டாட்டா ஆகியோர் பாரதிய வித்தியா பவனின் புகழ் பெற்ற முன்னாள் கௌரவ உறுப்பினர்கள் ஆவார்.

சிறப்பு

[தொகு]

2002ம் ஆண்டில் பாரதிய வித்தியாபவன் நிறுவனம் காந்தி அமைதிப் பரிசு பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. President Abdul Kalam to confer Gandhi Peace Prize on Bharatiya Vidya Bhavan
  2. KULAPATI K. M. MUNSHI: Dates & Events of Munshi's Life[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.bhavans.info/
  4. "Bharatiya Vidya Bhavan". Schoolkhoj. Archived from the original on 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-09-27.
  5. "List of Bharatiya Vidya Bhavan institutions in India and abroad". Archived from the original on 2018-01-14. பார்க்கப்பட்ட நாள் 2017-09-27.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_வித்தியா_பவன்&oldid=3741018" இலிருந்து மீள்விக்கப்பட்டது