உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்பாறு (கேரளா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பாறு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடியில் உருவாகும் ஆறு. இது இரவிக்குளம் தேசியப்பூங்காவினூடாகப் பாய்ந்து சின்னாறு கானுயிர் காப்பகப் பகுதிக்குள் ஓடுகிறது. கூட்டாறு என்ற இடத்தில் சின்னாற்றுடன் கலக்கிறது. பாம்பாறு, கபினி, பவானி ஆகியனவே கேரளத்தில் பாயும் 44 ஆறுகளுள் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளாகும். சின்னாறு தமிழக எல்லைக்குள் அமராவதி என்றழைக்கப்படுகிறது. இது கரூர் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கின்றது. தூவானம் அருவி இவ்வாற்றின் குறிப்பிடத்தக்க அருவியாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பாறு_(கேரளா)&oldid=2648533" இலிருந்து மீள்விக்கப்பட்டது