பாணர் (குந்தாபுரா)
பாணர் (ஒருமையில் பாணா ) என்பவர்கள் இந்தியாவின் கர்நாடகத்தின், உடுப்பி மாவட்டம், குந்தபுரா வட்டத்தில் முக்கியமாகக் வாழும் ஒரு சமூகத்தினராவர். [1] கர்நாடக அரசால் பாணர்கள் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கன்னடம் பேசுபவர்கள். மேலும் இவர்களின் தாய்மொழியான கன்னடத்திலும், துளு மொழிகளிலும் பாடல் (நாட்டுப்புற பாடல்கள்) பாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். [1] இவர்கள் துளுநாட்டின் துளு பேசும் நாலிகே/ பாணரிடமிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். [1] "பாணா" என்ற சொல் "பாடல்" என்று பொருள்படும் "பண்" என்ற சொல்லிருந்து வந்தது. இவர்கள் கேரளத்தில் பாணன் என்றும் அழைக்கப்படும் சாதியுடன் பெரிய அளவில் ஒத்திருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பாணன் சாதி பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [2]
சிக்கு வழிபாடு
[தொகு]கடலோர மாவட்டங்களில் உள்ள எளிய மக்களால் பரவலாக நம்பப்படும் மற்றும் பிரார்த்தனை செய்யப்படும் (ஆவிகள்) நடனத்துடன் இணைந்த நாட்டுப்புற பாடல்களை [1] பாடுவதன் மூலம், ஆவிகளின் குழுவான சிக்குவுக்கு செய்யப்படும் சமய வழிபாட்டை நிகழ்த்துவதில் பாணர் சமூகம் நிபுணத்துவம் பெற்றது. கன்னட மொழியில் பாணர் சமூகம் பாடும் பாடல்கள் பொதுவாக துளு மொழியின் சிறி பதன பாடல்களுடன் தொடர்புடையவை. [1] இவர்கள் பூத நிருத்யாவையும் செய்கிறார்கள், அது தோராயமாக "நேமோஸ்தவா/தையம்" என்றும் விளக்கப்படுகிறது. இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பாணர் சமூகத்தால் நிகழ்த்தப்படும் "ஆன்மீக நடனம்" போன்றது. தமிழ்நாட்டின், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, "பாணர்" சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் 'விறலியர்' என்று அழைக்கப்பட்டனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Peter J., Claus. "Text Variability and Authenticity in Siri cult". class.csueastbay.edu. பார்க்கப்பட்ட நாள் 10 September 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Scheduled Castes and Scheduled Tribes orders (Amendment) Act, 1956" (PDF). indianchristians.in. Archived from the original (PDF) on 11 July 2012. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.