பாக்கித்தான் பன்னாட்டு ஏயர்லைன்சு வானூர்தி 661
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | திசம்பர் 7, 2016 |
சுருக்கம் | செயலிழந்தது; விசாரணையின் கீழ் |
இடம் | ஹவேலியன் (Havelian), பாக்கித்தான் |
பயணிகள் | 42[1] |
ஊழியர் | 5[1] |
உயிரிழப்புகள் | 47 (அனைவரும்)[2] |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | ஏடிஆர் 42-500 (ATR 42-500) |
இயக்கம் | பாக்கித்தான் சர்வதேச ஏர்லைன்சு |
வானூர்தி பதிவு | AP-BHO |
பறப்பு புறப்பாடு | சித்ரால் விமான நிலையம், சித்ரால், பாக்கித்தான் |
சேருமிடம் | பெனாசீர் பூட்டோ சர்வதேச விமான நிலையம், இசுலாமாபாத் |
பாக்கித்தான் பன்னாட்டு ஏயர்லைன்சு வானூர்தி 661 (Pakistan International Airlines Flight 661) (PK661/PIA661), பாக்கித்தான் நாட்டின் கொடியைத் தாங்கிய பாக்கித்தான் சர்வதேச நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு பயணிகள் வானூர்தி ஒன்று, பாக்கித்தானின் வடக்கு நகரமான சித்ராலில் (Chitral) இருந்து இசுலாமாபாத்திற்கு பயணச் சேவையில் ஈடுபட்டு வந்தது.[3] ஏடிஆர் 42-500 (ATR 42-500) விமான வகையைச்சார்ந்த (பதிவு எண் ஏபி பிஎச்ஒ AP-BHO) இந்த வானூர்தி, 2016, டிசம்பர் 7 அன்று உள்ளூர் நேரப்படி மதியம் 03.30 மணியளவில், அபோத்தாபாத் மாவட்டத்தில் (Abbottabad District) உள்ள ஹவேலியன் (Havelian) என்னும் இடத்தில், இசுலாமாபாத் விமானப் பாதையில் பயணம் மேற்கொண்டபோது அப்பிராந்திய மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.[4][5] இந்த விபத்தில் 42 பயணிகளும், இரண்டு வான்படை தளபதிகள் உள்பட ஐந்து சேவைப் பணியாளர்களும் மொத்தம் 47 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[6] மேலும், பாக்கித்தானிய பாடகர், ஒளிப்பதிவு கலைஞர், தொலைக்காட்சிப் பிரபலர், போதகர், ஆடை வடிவமைப்பாளர், மற்றும் அவ்வப்போது நடிகர் என பல திறமைமிக்க 'ஜூனைட் ஜாம்ஷெட்' (Junaid Jamshed) என்பவரும், மற்றும் சித்ரால் மாவட்டத்தின் துணை ஆணையர் ஒருவரும் இவ்விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.[7]
விமான விவரம்
[தொகு]விபத்துக்குள்ளான இந்த வானூர்தி, ஏடிஆர் 42-500, வரிசை எண் 663, பதிவு ஏபி பிஎச்ஒ (AP-BHO) வகையை சார்ந்ததாகும். சம்பந்தப்பட்ட இவ் வானூர்தி, 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக, பாக்கித்தான் பன்னாட்டு ஏர்லைன்சு ((PIA) நிறுவனத்தில் புதியதாக ஒப்படைக்கப்பட்டது.[8] 2009 ஆம் ஆண்டில், இந்த வானூர்தி லாகூர் நகரில் இறங்க முயன்றபோது போது சேதமடைந்திருந்தது, ஆனால் அதற்குப் பின்னர் சரி செய்யப்பட்டு சேவைக்கு திரும்பிம்பியது.[9] மேலும் அது, 2014 ஆம் ஆண்டு அதன் இயந்திரம் தோல்வியுற்றது உறுதி செய்யப்பட்டது, ஆனால் இயந்திரம் மாற்றப்பட்டது பின்னர் பிரச்சினைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.[10] விபத்தில் சிக்கிய சமயம், பாக்கித்தான் பன்னாட்டு ஏர்லைன்சு ((PIA) கடற்படையில் இணைந்ததிலிருந்து 18,739 விமான மணி நேரம் ((18,739 flight hours) சேவையில் ஈடுப்பட்டுள்ளது, மேலும், கடந்த 2016, அக்டோபர் இல் அதற்கான சான்றளிக்கப்பட்டுள்ளது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Pakistan International Airlines(7 December 2016). "Flight PK661 Incident". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 7 December 2016. “42 (Male:31, Female:09, Infant:02) Including 02 Austrians and 01 Chinese” பரணிடப்பட்டது 2017-11-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "PIA plane crash: All 48 on board killed; Pakistani pop star among victims". CNN.
- ↑ "APIA flight PK-661 crashes enroute to Islamabad, no survivors". www.dawn.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
- ↑ "No survivors' after plane crash in northern Pakistan mountains". www.reuters.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
- ↑ PIA flight #PK661 crashes, 'bodies burned beyond recognition' (VIDEOS, PHOTOS)
- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
- ↑ "PIA plane crash: All 47 on board killed; Pakistani pop star among victims". edition.cnn.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
- ↑ "Pakistan International Airlines ATR operation temporarily suspended". airnation.net (ஆங்கிலம்) - December 12, 2016. Archived from the original on 2016-12-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
- ↑ "Pakistan International Airlines ATR operation temporarily suspended". aviationtribune.com (ஆங்கிலம்) - December 12, 2016. Archived from the original on 2016-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
- ↑ Initial report says PK-661’s left engine malfunctioned
- ↑ "Pakistan International Airlines grounds ATR fleet after crash". www.reuters.com (ஆங்கிலம்) - Mon Dec 12, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
{{cite web}}
: Text "3:49am EST" ignored (help)